(Reading time: 44 - 87 minutes)

தைவிட மகிழ்ச்சியான வாழ்வு கிட்டிவிடுமா அவளுக்கு ? நிச்சயம் இல்லை.. “போதும் கடவுளே, இதுக்கு மேல நிறைவேற்றி வைன்னு உன் கிட்ட நான் எந்த வரமும் கேட்க மாட்டேன்..இதுவரை கொடுத்ததே எப்போதும் நிலைச்சு இருக்கனும்.. அது ஒன்னு போதும்” என்றும் இறைவனை வேண்டிக்கொண்டாள். ஒவ்வொருவராய் தங்கள் அறைவிட்டு போகவும், தனது மகளையும் மகனையும் அருகில் அமர்ந்தப்படி ரசித்தான் ஷக்தி.

“ குழந்தைய தூக்கி வெச்சுக்கோங்க மாமா”

“ இல்ல வேணாம்”

“ப்ச்ச் என்ன தயக்கம்? இதுக்கு எல்லாமா பயப்படுவாங்க? கழுத்துக்கு கீழ கைவெச்சு இப்படி தூக்குங்க” என்றபடி அவள் மகனை தூக்கி கொள்ள, அவள் தூக்கியதை பார்த்து அதுபோலவே, ஒரு பூவை தூக்குவது போல, தன் பெண்ணை கரத்தில் ஏந்தினான் ஷக்தி. தனக்கு உரிய இடத்தை அடைந்தது போல அந்த பிஞ்சு குழந்தையின் கரம் அவனின் கன்னத்தை தீண்டிட, மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்தான் ஷக்தி. விழிகளை மலர்த்தி புன்னகையுடன் மித்ராவை பார்த்து அவன் கண் சிமிட்டிட கைகளில் இருந்த மகனை பார்த்தப்படி,

“ உங்கப்பா குஷி ஆகிட்டாரு.. பாருங்கடா” என்றாள் அவள்.

“ சரி பாப்பாவுக்கு என்ன பேரு வைக்கலாம்ன்னு யோசிச்சியா?” என்று ஷக்தி கண்களில் எதிர்ப்பார்ப்புடன் அவளைப் பார்த்தான்.

“ அஹெம் .. உங்க பார்வையே சரி இல்லையே.. ஏற்கனவே பேரு யோசிச்சு வெச்சுட்ட மாதிரி இருக்கே” என்றாள் மிது.

“ ம்ம்ம் இருக்கலாம்..பட் இருந்தாலும் அம்மாவோட ஆசையை கேட்கனும்ல குட்டி?” என்று மகளை தன் பேச்சில் இழுக்க, அவன் பாஷையே புரியாவிடினும் இமைத்து சிரித்தாள், அவன் மகள்.

மிதுவோ,“ பாருங்கடா, உங்க அப்பா எல்லாத்தையும் செட் பண்ணிட்டு இப்போத்தான் அம்மாவை கவனிக்கிறாங்களாம்” என்று சொல்ல, அவள் மகன் நாக்கை நீட்டி சிரித்தான்.

“ ஓஹோ, சோ எனக்கு உன் நியாபகமே இல்லையா?” என்று நேரடி தாக்குதலில் இறங்கினான் ஷக்தி..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“ அப்படின்னு நான் சொன்னேனா?”

“ சொன்னாதான் ஆமான்னு அர்த்தமா?”

“ சொல்லலன்னா இல்லைன்னு அர்த்தம் இல்லையா?”

“ சோ” என்று ஷக்தி ஆரம்பிக்க, “ஷபா எங்க குட்டீஸ்க்கு இப்போவே உங்க சண்டையை காட்டி பயமுறுத்த வேணாமே” என்றபடி எழிலும் முகிலாவும் உள்ளே வந்தனர்.

“ வாங்க சிவாஜி சார்,வாங்க  பத்மினி மேடம்” என்று அவர்களை வரவேற்றாள் மித்ரா. அவளின் பட்டப்பெயர் பார்த்து ஷக்தி புருவம் உயர்த்தவும்

“ மாமா நான் லாயராக்கும்..எப்பவும் அலெர்ட்டாய் இருப்பேன்.. இந்த லூசும் உங்க தங்கச்சியும் சண்டை போட்ட மாதிரி நம்ம காதுல பூவை சுத்திட்டு இருந்தாங்களே, இந்த ஒரு வாரமாய், நமக்கு தெரியாமல் ரெண்டும் எவ்வளவு கொஞ்சல்ஸ் தெரியுமா?” என்றாள். அவள் அதை சொன்னதுமே இருவரின் முகத்திலும் அசடு வழிந்தது.

“அது..” என்று இருவரும் அசடுவழிய,

“ உங்க கதையை கேட்கறதுகுள்ள எங்கள் பாப்பாவே வளர்ந்திடுவாங்க..ஒழுங்கா உண்மைய சொல்லிடுங்க.. டேய் நீ சொல்லு..கண்டிப்பா இது உன் ப்ளான் தானே” என்று மித்ரா தன் நண்பனை கைக்காட்டவும்

“ ஐயோ இல்லை அண்ணி” என்றாள் முகில்மதி. “ சொன்னேனே பார்த்தியா?” என்பது போலவே ஷக்தியை பார்த்தாள் சங்கமித்ரா.

“ சாரி அண்ணா அண்ணி, எழிலோட அம்மாவும் அப்பாவும் வந்து சம்பந்தம் பேசினதுக்கு அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு, வீட்டுல என் கல்யாண விஷயத்தையே எல்லாரும் பேசிட்டு இருந்திங்க..எனக்கு மேல படிக்கனும்னு ஆசையா இருக்குன்னு சொல்லியும், கல்யாணம் பண்ணிட்டு படின்னு நீங்க சொன்னிங்க.. இதில் கதிரண்ணா எப்போ பார்த்தாலும்,எங்கள் கல்யாணம் நடந்த பிறகுதான் அவனுக்கு கல்யாணம்னு சொல்லிட்டு இருந்தான் ..”

“அதுக்காக?”

“அதுக்காகத்தான் எனக்கும் அவருக்கும் சண்டை மாதிரி காட்டிக்கிட்டோம்..” என்று முகில்மதி உள்ளே போய்விட்ட குரலில் சொல்லிட, அவளுக்கு இணையாய் எழிலும் பார்வையாலேயே கெஞ்சினான்.. கோபமாய் முகத்தை வைத்துக் கொண்டிருந்த மித்ரா சில நொடிகளுக்குப் பின்

“ ஏன் மாமா, உங்க தங்கச்சியின் கடமை உணர்வுக்கு அளவே இல்லையா? நானெல்லாம் நமக்கு கல்யாணம் பேசி இருந்தா படிப்பாவது மண்ணாவதுன்னு உடனே கழுத்தை நீட்டி இருப்பேன்” என்று சலித்து கொள்ள அவளின் பாவனையில் மற்ற மூவரும் வாய்விட்டு சிரித்தனர்.

“ ஹேய் ஹேய் மெதுவா சிரிங்க..எங்க பாப்பா பயந்துருவாங்க” என்று அவள் மிரட்டிட

“ உங்க குழந்தைய நீங்களே வெச்சுக்கோங்கப்பா” என்று கூறியப்படி எழிலும் முகில்மதியும் ஓடியே விட்டனர்.! ( இவங்க இப்படியே தான் ஓடி புடிச்சு விளையாடிட்டு இருப்பாங்க..நாம அடுத்தக்கட்டத்துக்கு போக வேணாமா?)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.