(Reading time: 44 - 87 minutes)

பூங்காவில் தன் அருகில் எந்தவொரு உணர்வும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாய் இருந்தவளின் கரத்தை பிடித்தான் மதியழகன். “என்ன?”என்பது போல அவனை அவள் நிமிர்ந்து பார்க்க

“இன்னும் ஒரு வாரத்துல நமக்கு கல்யாணம்”என்றான். அவன் சொன்ன வார்த்தைகளை உணர்வதற்கே அவளுக்கு சில நொடிகள் தேவைப்பட்டது..

“எ..எ..என்ன மது சொல்லுற நீ?”

“ நமக்கு கல்யாணம் குட்டிமா!”

“இப்போ என்ன அவசரம்?”

“அடிப்பாவி..என்ன நினைச்சிட்டு இருக்க நீ? எதுவுமே பண்ணாமல் இருந்தால், செம்ம மக்கு மது நீன்னு சொல்லுற, சரின்னு கொஞ்சம் அதிரடியா முடிவெடுத்தால் என்ன அவசரம்ன்னு கேட்குற?” என்று அவன் புன்னகைக்கவும் கடுப்படைந்தாள் அவள்.

“ இப்போ நான் எந்த நிலைல இருக்கேன்னு உனக்கு தெரியாதா மது? என்னால் இப்போ முடியாது”

“ என்ன முடியாது? இது பாரு, நீ ஒன்னுமே பண்ண வேணாம்.. நான் வாங்கி கொடுக்குற புடவையை கட்டிட்டு சமத்தா என் பக்கத்துல வந்து உட்காருவியாம்.. நான் தாலி கட்டிடுவேனாம்.. இதுல முடியாதுன்னு சொல்லுற அளவுக்கு உனக்கு எந்தவேலையுமே இல்லைபேபி!”என்று அவள் மூக்கை செல்லமாய் கிள்ளினான் மதி.

“ என்னடா பேச்சு இது ? நமக்கு கல்யாணம்ன்னா அதுல என் சம்மதம் வேணாமா ?அதுவும் ஒரு வாரத்துல கல்யாணம்ன்னு சொல்லுறியே ..என்னை பார்த்தால் எப்படிடா இருக்கு உனக்கு?” என்று அவள் இடுப்பில் கை வைத்துக் கொண்டு முறைக்கவும், மதியழகன் மனதில் சிரித்துக் கொண்டான்.. “ஹப்பா ஒரு வழியாய் டா போட்டு பேச ஆரம்பிச்சுட்டா.. சோ மேடம்க்கு கோபம் வருது” என்று மனதினுள் நினைத்தவன்,

“ இதுல உன்னை கேட்க என்ன நிலா இருக்கு?எப்போ இருந்தாலும் நமக்கு கல்யாணம் ஆகத்தானே போகுது? ஏற்கனவே மூனு வருஷம் தள்ளி போட்டாச்சு.. வீட்டுல பெரியவங்களும் ஆசை படுறாங்க.. இதுக்கு மேல எனக்கும் தள்ளி போடுற ஐடியா இல்லை” என்றான் அவன் கறாராய். அவனையே முறைத்து பார்த்தாள் நிலா. இவனிடம் சண்டை போட்டு எதுவும் ஆகப்போவது இல்லை என்று உணர்ந்த நிலா நிதானமான குரலில்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“இப்போ கல்யாணம் வேணாம் மது” என்றாள்.

“..”

“ கொஞ்சம் என் நிலைமைய புரிஞ்சுக்கோ.. எனக்கு டைம் வேணும்”

“..”

“ ப்ச்ச் இறந்தவங்களை மறக்குறது அவ்வளவு சுலபமில்லை மது..இது உனக்கு புரியலையா?”

“ எனக்கு புரியுது..ஆனா, போனவங்கள நினைச்சு, இருக்குறவங்களோட சந்தோஷத்தை இழக்க முடியாது இல்லையா நிலாம்மா”

“..”

“ உன் நிலைமை எனக்கு புரியுது, உன்னோடவே இருந்து உன்னை பார்த்துக்கனும்னு எனக்கும் தோனுறதுல தப்பில்லையேடா? அதுக்குத்தான் என் உரிமைய நான் கேட்குறேன்..நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.. நான் உன் கூடவே இருக்கபோறேன்..மத்தபடி எதுவும் மாறாது..போதுமா?”என்றான்.

“நம்ம கல்யாணம்  ரொம்ப சந்தோஷமான மனநிலையில நடக்கனும்னு தான் நான்  ஆசைப்பட்டேன் மது. இப்படி கட்டாயமாக அவசர கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு இஷ்டமே இல்லை”என்றாள் நிலா.அவளுக்கு புரியும் விதத்தில் மதி பேச, தன் கருத்தை நிலா கூற இப்படியே பிடிவாதங்கள் எல்லாம், வாதங்களால் உடைந்திட அவளை சம்மதிக்க வைத்திருந்தான் மதியழகன்.

அவளிடம் இதைபற்றி பேசும் முன்னரே,  இரு குடும்பங்களுக்கும், மற்ற அனைவருக்குமே கல்யாண ஏற்பாட்டை பற்றி சொல்லி இருந்தான் மதியழகன். இதை ஏதும் அறியாத நிலா ஏதேதோ நினைவுகளுடன் அன்று கண்ணுறங்கினாள்.

“ ஹேய் தூங்கு மூஞ்சி….. ஐ எம் பேக்.. சிங்கப்பூரின் இளவரசி, தி க்ரேட் மதியழகனின் அன்பு தங்கை புவனா வந்துட்டேன்..வந்துட்டேன்..வந்துட்டேன்” என்று புவனாவின் குரல் மிக அருகில் கேட்கவும், கனவு தானோ என்று குழம்பியப்படியே கண் விழித்தாள் தேன்நிலா. கையில் பக்கேட்டுடன் நின்றவள், நிலா சுதாரிக்கும்முன்னே அவள் மீது நீரை மொத்தமாய் கவிழ்த்திருந்தாள்.

“ ஹேய் குட்டிச்சத்தான்!!!!!”

“யெஸ் ஹனிமூன்..வெரி குட் மார்னிங்” என்றவள் இன்னொரு கையில் இருந்த வண்ணப்பொடியை அவள்மீது தூவி,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.