(Reading time: 44 - 87 minutes)

முதல் வேலையாய் மதியழகனை ஃபோனில் அழைத்து “ குட் மார்னிங் அழகா” என்றாள்.

“குட் மார்னிங் பேரழகி”

“ஹேய், அழகின்னு சொன்னாலே போதும் மது..எனக்கு புகழ்ச்சி பிடிக்காது”

“ஓஹோ.. அப்போ நான் புகழ்ச்சியை வார்த்தையால் சொல்லாமல் பாடிடவா அழகி?” என்றவன் பவ்யமாய் கேட்க,

“அப்படியே ஆகட்டும்” என்ற நிலா,அவன் என்ன பாடுவான் என்ற எதிர்ப்பார்ப்போடு இருந்தாள்.

கல்யாண தேன்நிலா,

காய்ச்சாத பால்நிலா,

நீதானே வான்நிலா,

என்னோடு வா நிலா,

தேயாத வெண்ணிலா,

உன் காதல் கண்ணிலா?

ஆகாயம் மண்ணிலா?”என்று அவன் பாட

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ப்ரியாவின் "என் காதல் பொன்னூஞ்சல் நீ" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“ மது நான் வான் நிலா இல்லை..நான் அப்போதுமே உன் நிலா” என்றாள்..

“ எனக்கு தெரியும் குட்டிமா” என்றவன் ஏதோ நினைவு வர,

“சீக்கிரம் கதவை திற ..உனக்கொரு சர்ப்ரைஸ்” என்றான். என்னவா இருக்கும்? மதுவே வந்துருப்பானோ? என்ற ஆவலுடன் அவள் கதவை திறக்க, ரோஜாப்பூங்கொத்துடன் நின்ற அந்த “பெரியவனை” பார்த்து பெரிதாய் புன்னகைத்தாள்.

“ஷாந்தனு..!!!வா வா உள்ளே வா..எப்படி இருக்க?”

“இப்படி என்னை ஏமாத்திட்டியே நிலா”

“என்னடா?”

“என்னைத்தானே கல்யாணம் பண்ணிக்குறன்னு சொன்ன நீ? இப்படி பேச்சு மாறிட்டியே”

“ ஹா ஹா..ஏன்டா, மது நல்லபையன் இல்லையா?” என்று கேட்டாள் அவள்.மதுவா ?என்று குழம்பியவன்

“ மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடுன்னு உனக்கு தெரியாதா நிலா?” என்றான்.

“ ஹா ஹா செல்லமே,நான் மதுன்னு சொன்னது உங்க அட்வைஸ் அழகன் தான்” என்று அவன் பெயரை சொல்லும்போதே குழைந்தாள் நிலா. சிறுவனாக இருந்தாலுமே நிலாவின் குரலில் இருந்த மாற்றத்தை ஷாந்தனுவால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

“அய்யோ நிலா நீ சரி இல்ல..நல்ல டாக்டராய் பாரு.. எனிவே, ஹேப்பி மேரிட் லைஃப்”என்று அவன் பூவை நீட்ட

“ டாக்டருக்கே டாக்டரா?தேங்க்ஸ்டா பெரியவனே” என்றாள் நிலா.

“ ஹேய் மணப்பொண்ணு ரூமில்பையனுக்கு என்ன வேலை?” என்றபடி இடுப்பில் கை  வைத்துகொண்டு நின்றாள் தோழி மது. அவள் பின்னாலேயே மற்ற பெண்களும் வந்திட

“ அய்யயே ஒரே லேடிஸ் கூட்டமாய் இருக்கு..நான் அப்பறமாய் வரேன் நிலா” என்றபடி அங்கிருந்து எஸ்கேப் ஆகினான் ஷாந்தனு.

“ பாவம் சின்ன பையன் அவனை ஏன் மிரட்டுற?” என்று நிலா மதுவிடம் கேட்க,அவள் கையில் இருந்த பூவை மது எடுத்துகொள்ள, இன்னொரு பக்கமாய் வந்து செல்ஃபோனை பிடுங்கினாள் மீனா.

“ கல்யாண பொண்ணு இதுக்கு மேல, மதி மாமா கூட பேச கூடாது..அவர்கிட்ட இருந்து ஃபோன் வந்தால் நான் பார்த்துக்குறேன்” என்று விஷமமாய் சிரித்தாள் மீனா. அதற்குமேல் அவளை பேச விடாமல்  “வாலு தேன்நிலாவை அடக்கஒடுக்கமான மணமகளாய்” மாற்றுவதற்கு பெரும்பாடு பட்டு கொண்டிருந்தனர் அனைவரும். ஷக்தி,கதிர்,ஆதி, எழில் நால்வரும் மதியழகனோடு இருந்தனர். நம்ம புவனாவும் ரஞ்சுவும்..அஹெம் அஹெம் நீங்க நினைக்கிற மாதிரி இல்லப்பா… ரொம்ப சின்சியரா கல்யாண வேலை பார்த்தாங்கப்பா..இப்படி எக்குத்தப்பாய் யோசிக்க கூடாது !

ணமேடையில், மதியழகன் நிலாவின் வரவிற்காக காத்திருந்து கொண்டே அறைகுறையாய் மந்திரம் சொல்லி ப்ரோகிதரின் அனல் கக்கும் பார்வைக்கு ஆளானான்..ரஞ்சன், நிலாவின் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து சம்ப்ரதாயங்களை செய்தான்.. நல்ல நேரம் நெருங்கி கொண்டிருக்க கன்னியாதானம் செய்வதற்கு மணப்பெண்ணை அழைக்க,முகத்தில் வெட்கத்தை அரிதாரமாய் பூசி,கண்களில் காதலுடன் மதியழகனை பார்த்துக்கொண்டே அவனுக்கு பிடித்த , அவனே தேர்வு செய்த பச்சை நிற புடவை அணிந்து அழகனின் அழகுக்கு நிகராய் மேடையேறினாள் தேன்நிலா. அன்பு கொண்ட பெற்றோரும் நட்புள்ளங்களும் புடை சூழ்ந்திருக்க,தனது அன்பு தந்தையின் மடியில் அமர்ந்தாள் நிலா..திருமண  வைபவத்தின் சந்தோஷமும் தாண்டி தந்தையின் மடியில் அமரும்போது அவளுக்குள் ஏதோ ஒன்று உருத்தியது..

 இனிமேல் தான் இப்படி தனது தந்தையிடம் செல்லம் கொஞ்ச முடியாதா? இனிமேல் அவளின் வாழ்வில் மதியழகனுக்குத்தான் முன்னுரிமையா? ஏதோ ஒன்று அவளை பிசைந்தது. களவரத்துடன் மதியை பார்க்க,அவன் வழக்கம்போல நம்பிக்கையூட்டும் வண்ணம்சிரித்தான். அவன் புன்னகையில் “ உன் மனம் நான் அறிவேன்” என்ற வாசகம் இருந்தது.

நல்ல நேரம் வந்ததென்று, ப்ரோகிதர் கூறிட மதி தன்னுருகே வரவும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.