“கோபமா பெரியம்மா?”
“..”
“இன்னும் 20 மினிட்ஸ்ல வரோம்”என்றான் அவன். அவனிடம் இருந்து ஃபோனை பிடுங்கிய வெண்மதி
“ஆமா பெரியம்மா..இதோ இப்போ வந்திடுவோம்” என்றாள். அவளிடம் இருந்து ஃபோனை வாங்கிய சக்திவேல்
“அத்தை நீங்க கோபப்படாமல் குட் கேர்ளா இருந்தா நான் ஐஸ் க்ரீம் வாங்கி தருவேன்” என்றான். ஒவ்வொருவராய் பேசிகொண்டே போக கடைசியாய் ஃபோன் பவியின் கைக்கு வந்தது.
“மம்மி” என்று கொஞ்சும் குரலில் அவள் கூப்பிடவும், பிடித்து வைத்திருந்த பொய் கோபம் மொத்தமாய் கரைந்தது.
“ பேபி, சீக்கிரம் வா” என்று அவளும் கொஞ்சி பேச, அவர்களின் பாசமழை இன்னும் சில நிமிடங்கள் தொடர்ந்தன.
கோர்ட்டில் மித்ராவுக்காக காத்திருந்தான் ஷக்தி. மித்ராவின் முகத்தில் தெரிந்த பூரிப்பும்,அவளை சுற்றி இருந்த நிருபர் கூட்டத்தை பார்த்ததுமே, அவளுக்கு வெற்றிதான் என்பதை புரிந்து கொண்டான் அவன்..
“அது சரி.. மிசர்ஸ் ஷக்தின்னா சும்மாவா?”என்று பெருமை பீற்றி கொண்டே, தனது மனைவியை தூரத்தில் இருந்து சைட் அடித்தான். அந்த கேசில் அவளுக்கு எதிராய் வழக்காடி தோற்றுப்போன வக்கீல் இளமாறன் அவளை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர, கூட்டத்தில் இருந்த ஒரு நிருபர் அந்த கேள்வியை மித்ராவிடம் கேட்டார்.
“மேடம், ஒரு கிரிமினல் லாயருடைய வாதத்தை ஜெயிக்கிறது கஷ்டம்ன்னு சொல்லுவாங்க. ஆனா, உங்களுக்கு அது சுலபமாய் இருக்கே..அதுவும் மிஸ்டர் இளமாறன் பலமுறை உங்களிடம் தோற்று இருக்காரே..இதைப்பற்றி என்ன நினைக்கிறிங்க?” அந்த நிருபரின் கேள்வி மாறனின் காதில் விழ அவன் மித்ராவை முறைத்து பார்த்தான்.. மித்ராவோ மிகத்தெளிவாய் பதிலுரைத்தாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்
படிக்க தவறாதீர்கள்...
“ ஒரு குற்றம் நடந்தால் அதில் நீதிக்கு வெற்றிகிடைக்கனும்..அதை வாங்கி தருவது தான் எங்கள் கடமை. முதல்ல,கிரிமினல் லாயர்ன்னா கெட்டவங்க, அவங்களுக்கு எதிரா பேசுறவங்க நல்லவங்கன்னு எப்படி முடிவு பண்ணுறிங்க? குற்றவாளின்னு குற்றம் சாட்டப்பட்டவங்க எப்பவும் குற்றம் புரிஞ்சவங்களா இருக்கனும்னு அவசியம் இல்லையே. நிரபராதிகள் தண்டிக்கப்பட கூடாதுன்னு தான் கிரிமினல் லாயர்ஸ் வாதாடுறாங்க.. இது எங்கள் வேலை.. இந்த கோர்ட்டை தாண்டி எங்கள் அனைவருக்கும் நல்ல நட்பு இருக்கு அதை பிரிக்காதிங்க” என்றவள் இன்னும் சில கேள்விகளுக்கு பதில் உரைத்துவிட்டு காரில் ஏறிக்கொண்டாள்.
“ வா வண்டு” என்று அவளை கிண்டலாய் அழைத்தான் ஷக்தி. அவனை செல்ல கோபத்துடன் முறைத்தாள் மிது. வக்கீல் வண்டுமுருகன் காமெடியை பார்த்து கொண்டிருந்த ஒரு நாள், “நீயும் இப்படித்தானே மிது வாதாடுவ?” என்றவன், அவளுக்கு “வண்டு” என்று செல்லபெயர் வைத்திருந்தான்.அவளை கோர்ட்டில் இருந்து அழைத்து வரும்போதெல்லாம் அவளை வண்டு என்று அழைப்பது அவனது வாடிக்கை.
“ ஏன் வண்டு, எதுக்கு முறைக்கிற?”
“ மாமா, நீ என் கிட்ட” என்று ஏகவசனம் பேச ஆரம்பித்தவள், பேச்சை நிறுத்திவிட்டு காரின் பின்புறம் பார்த்தாள்.
“ பசங்க யாரும் இல்லை.. சோ நீ வாடா போடான்னே சொல்லலாம்” என்றான். அவன் அனுமதி கொடுத்த விதத்தில் அவள் மலர்ந்து சிரிக்கவும் மித்ராவின் செல்ஃபோன் சிணுங்கியது. PARTNER IN CRIME என்று ஸ்க்ரீனில் பெயரை பார்த்ததும் உடனேஃபோனை எடுத்தாள் மித்ரா.
“மாறா சொல்லுடா”
“ செம்ம ஆர்கியுமண்ட் பார்ட்னர்”
“ஹா ஹா .. தேங்க்ஸ்..நீயும்தான் நல்லா விட்டு கொடுத்தியே”
“ பின்ன காப்பாத்திட அவன் என்ன காந்தியா? பொறுக்கி!!” என்று பற்களை கடித்தான் இளமாறன்.
“அதுக்காகத்தானே மாறா இந்த கேஸை நான் உன்னை டீல் பண்ண சொன்னேன்.. ? உனக்கு பதிலாய் வேற யாரும் வந்திருந்தா,கண்டிப்பா தில்லுமுள்ளு நடக்கும்..எப்படியாவது அவன் தப்பிச்சு இருப்பான்..அவன் அப்படி தப்பிக்க கூடாது”
“ மொத்தத்துல நாமளே பாம் வெச்சு அதை நாமளே எடுக்குறோம்..அண்ட் மித்ரா, என்னை விட்டு கொடுக்காமல் ப்ரெஸ்ல பேசினதுக்கும் தேங்கஸ்”
“அட விடு நண்பா நமக்குள்ள என்ன?” என்று மித்ராமேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு ஃபோனை வைத்துவிட்டு யோசனையில் இருந்த தனது கணவனை உற்றுநோக்கினாள்.
“என்னாச்சு மாமா?”
“ அதுவந்து அத்தை பொண்ணு, இந்த உள்ளே வெளியே விளையாட்டை நீ மங்காத்தா படம் பார்த்து தானே கத்துக்கிட்ட?” என்று ஷக்தி தீவிரமாய் கேட்க அவனை ஆசைத்தீர அடித்தாள் மித்ரா.