(Reading time: 15 - 30 minutes)

'தில் சொல்லு. அப்படி ஒரு சூழ்நிலை உனக்கு வந்திட்டா???'

சில நொடிகள் யோசித்து நிமிர்ந்து அவன் முகம் பார்த்து தெளிவாக சொன்னாள் 'அப்படி ஒரு சூழ்நிலை வந்தா அப்போ என் மனசாட்சி என்ன சொல்லுதோ அதை கேட்டு நடந்துப்பேன். இப்போ இவ்வளவுதான் சொல்ல முடியும்...'

அழகாய் சிரித்தான் அவன். 'ஸோ... மேடம் எதுவும் கமிட் பண்ணிக்க மாட்டாங்க அப்படித்தானே??? சரி... அதையும் பார்ப்போம்... இப்போ நீ போகலாம்...'

பழைய நினைவுகளில் இப்போது ஒரு பெருமூச்சு அபர்ணாவிடம்.

'என்ன சைலென்ட் ஆயிட்டே அப்பூ??? நினைவுகளில் ஆழ்ந்து இருந்தவளை கலைத்து கேட்டான் விஷ்வா.....

'ம்? இல்ல ஒண்ணுமில்லை...'

சில நொடிகள் கழித்து 'அப்பூ....' என்றான் மெல்ல... 'அவனை தப்பா நினைக்காதே. உன்னை பத்தி அவன் என்கிட்டே எதுவும் சொல்லலை. சொல்லப்போனா அவன் என்கிட்டே பேசியே பல வருஷம் ஆச்சு. நீ என் மாமா பொண்ணுன்னு கூட இன்னைக்கு தான் அவனுக்கு தெரியும். உங்க ரெண்டு பேருக்குள்ளே நடந்தது எல்லாம் அவனோட ஒரு ஃப்ரெண்ட் சொன்னான்..'

.......................................

'என்ன அபர்ணா???.'

'ம்??? இல்ல... நான் அதெல்லாம் யோசிக்கலை.... நீ சொல்றது கரெக்ட்தான்.... நியாயம்ன்னு ஒண்ணு இருக்கு...' அவள் குரல் தழைந்து வெளியே வந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - சர்வதேச காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

'ம்..... வாழ்க்கையிலே கீழே விழுந்தவன் எப்படியோ தடுமாறி எழுந்து, இன்னைக்கு இவ்வளவு பெரிய சிங்கர் ஆகி இருக்கான். அதுக்கு மேலே ரெண்டு செயின் ஆஃப் ரெஸ்டாரெண்ட்ஸ் இப்போ அவனுக்கு சொந்தம். இந்தியா ஃபுல்லா ப்ராஞ்சஸ். இந்த ஏழு எட்டு வருஷத்திலே எப்படியோ தட்டு தடுமாறி இவ்வளவு தூரம் வந்திருக்கான்' விஷ்வா சொல்ல........

'எனக்கு நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு விஷ்வா...' என்றாள் அபர்ணா.

'இது எல்லாத்தையும் விட,..... நீ ஃபங்ஷன் வந்தா அவன் ரொம்ப ரொம்ப சந்தோஷ படுவான்..... ப்ளீஸ் வா அப்பூ....'

ஒரு முடிவுக்கு வந்தவளாக தலை அசைத்தாள்...  'ம்... சரி ரெடியாயிட்டு வரேன்...' அவள் கீழே செல்ல...

அதே நேரத்தில் அங்கே......

விழாவுக்காக பிரத்யேகமாக தயாரிக்க பட்டிருந்த கோட் சூட் உடையுடன் தயாராகி அறையை விட்டு கிளம்ப எத்தனித்தான் பரத். அப்போது அவனது கைப்பேசியில் ஒரு வாட்ஸ் ஆப் செய்தி. அனுப்பியது அவனது எருமை மாடுதான்!!!'

'என்ன சார்.. ரெடி ஆகிட்டீங்களா??? இன்னொரு தடவை கண்ணாடி பார்த்து மேக் அப், டச் அப் எல்லாம் பண்ணிக்கோங்க. பார்க்க சும்மா ஹீரோ மாதிரி இருக்கணும்...'

'வேறே வேலை இல்லை இவனுக்கு..' முணுமுணுத்தபடியே இவன் இரண்டடி வைப்பதற்குள் அடுத்த செய்தி!!!

'இவனுக்கு வேறே வேலை இல்லைன்னு தானே நினைக்கறீங்க??? எனக்கென்ன பா... நான் என் கூட... அபர்ணா.. அபர்ணான்னு ஒரு பொண்ணை கூட்டிட்டு வர போறேன் அதுக்குதான் சொன்னேன்..' திக்குமுக்காடி போனான் பரத்!!!

'வருகிறாளா??? நிஜமாகவே வருகிறாளா??? வர சம்மதித்து விட்டாளா???' நம்பவே முடியவில்லை அவனால். துள்ளலுடன் கண்ணாடியை நோக்கி மறுபடியும் ஓடினான் பரத்.

தனது அறையின் கதவை சாத்திக்கொண்டாள் அபர்ணா. அவள் மனம் நேராக சென்று நின்றது அவனிடம்!!!! நேற்று ரயிலில் வரும்போது அவளுடன் தொலைப்பேசியில் பேசியவன் அவன்!!!! அருண்!!!

'அவனிடம் எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும் .சொல்லிவிட்டே கிளம்ப வேண்டும்' தவித்தது அவள் உள்ளம். கைப்பேசியில் அவனது எண்ணை அழுத்தினாள் அபர்ணா.

அது நமக்கு அருகிலேயே இருப்பதினாலேயோ என்னவோ.... நம் கைக்கு அருகில் இருக்கும் பொருளின் மதிப்பு நமக்கு பல நேரங்களில் புரிவதில்லை. அங்கே ஒருவன் அபர்ணாவின் வருகைக்காக தவமிருக்க...

இங்கே அவளது எண்ணை பார்த்து விட்டு அழைப்பை துண்டித்தான் அருண் 'கட்...'!!! அவள் மறுபடியும்  அழைக்க மறுபடி 'கட்'!!!

அடுத்த நிமிடம் 'நண்பர்களுடன் இருக்கிறேன். பிறகு அழைக்கிறேன்' என்று ஒரு குறுஞ்செய்தி அவள் கைப்பேசிக்கு வந்து சேர்ந்தது.

பொதுவாக நண்பர்களுடன் இருக்கும் போது அவன் அவளுடன் பேசுவதில்லை. அது அவளுக்கும் தெரியும். அந்த மாதிரி நேரங்களில் அவளும் அவனை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் இன்று அவளது மனம் நிலைக்கொள்ளவில்லை. இந்த விஷயத்தை அவனிடம் சொல்லியே ஆக வேண்டுமே???

இரண்டு நிமிட இடை வெளியில் மீண்டும் அழைத்தாள் அவள். இப்போது அழைப்பு ஏற்க பட... மறுமுனையிலிருந்து சுள்ளென அவன் குரல்.

'ஒரு தடவை சொன்னா புரியாதா உனக்கு?'

'இல்ல.. ஒரே ஒரு முக்கியமான விஷயம்... நான் ஒரு அவார்ட் ஃபங்ஷன் போகணும் அது பத்தி....'

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.