(Reading time: 15 - 30 minutes)

'வங்க  இங்கே இருக்காங்களா சார்??? தொகுப்பாளர் கேட்க....

தவிப்பின் எல்லையில் அமர்ந்திருந்தவளை ஒரு முறை பார்த்துவிட்டு நிதானமான குரலில் சொன்னான் அவன்.......

'இல்லை!!! அவங்க இங்கே இல்லை.!!! ஆனா எப்பவும் என் மனசிலே இருக்காங்க!!! '

காமெராக்கள் மறுபடியும் அவனை நோக்கி செல்ல, அவளிடம் நிறையவே நிம்மதி. ஆனால் டி.வி.யை பார்த்திருந்த அவளது அம்மாவின் மனதில் மட்டும் ஏதோ ஒரு உறுத்தல்

'இன்னைக்கு நான் இந்த நிலையில் இருக்கறதுக்கு அவங்க மட்டுமே காரணம். தேங்க்ஸ் ஸோ மச் மை டியர் கண்ணம்மா...' அழுத்தம் திருத்தமாக பரத் மைக்கில் சொல்ல கண்களை இறுக மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள் அபர்ணா. விஷ்வா அவளை வியப்புடன் பார்த்திருந்தான்.

பேசி முடித்துவிட்டு எல்லாருக்கும் நன்றி சொல்லிவிட்டு மேடையிலிருந்து அவன் இறங்க எத்தனிக்க..

'சார் ... அது எப்படி சார் அது??? நீங்க பாடாம எல்லாம் எஸ்கேப் ஆக முடியாது...' தொகுப்பாளர் பிடித்துக்கொண்டார் அவனை.

'சான்சே இல்லை!!! இன்னைக்கு நான் ரொம்ப எக்சைடெட்டா இருக்கேன்... இன்னைக்கு என்னாலே பாட முடியாது ப்ளீஸ்...'

'அதெல்லாம் முடியும் சார் ஏதாவது ஒரு பாட்டு... நாலே... நாலு வரி... இல்லேன்னா உங்க அவார்டை நாங்க பிடுங்கிக்குவோம்.' தொகுப்பாளார் சொல்ல

'மை... காட்...' என்று அழகாக சிரித்தவன் ஒரு ஆழமான சுவாசம் எடுத்துக்கொள்ள, அரங்கத்தில் அப்படி ஒரு மௌனம்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

'மேனி கொதிக்கு தடீ... தலை சுற்றியே...' அவன் குரல் மைக்கில் கணீரென ஒலிக்க ...... உடல் நடுங்குவது போல் ஒரு உணர்வில் கண்களை திறக்காமல் அமர்ந்திருந்தாள் அபர்ணா...

'நானொருவன் மட்டிலும்... பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ.....' அவன் உருகி முடிக்க தளர்ந்து போனவளாக மெல்ல கண் திறந்தாள் அபர்ணா. அவள் மனம் கெஞ்சியது அவனிடம்.

'வேண்டாமே பரத். என் மீது இத்தனை நேசம் வேண்டாமே. கடைசியில் உனக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்!!!!'

Episode # 02

Episode # 04

தொடரும்......

{kunena_discuss:982}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.