(Reading time: 15 - 30 minutes)

'ன்டா முறைக்குறே... உன்னை அவங்களுக்கு தெரியாதுன்னா அதை சொல்லு... ஏதோ நாலு அஞ்சு பாட்டு பாடி லக்லே அவார்ட் வாங்கிட்டே... இப்போ அவங்க முன்னாடி போய் நீ நின்னா நீங்க யாருன்னு கேட்பாங்கதான் ... அது எனக்கு தெரியும்தான் .' அவன் சொல்லிக்கொண்டே போக... பரத்தின் முறைப்பு அதிகமாக...... அழகாய் மலர்ந்து சிரித்தாள் அபர்ணா.

அவளை விட்டு அகல மறுத்தன பரத்தின் கண்கள் 'அவன் முன்னால் அவள் இப்படி சிரித்ததே இல்லையே!!!' பரத்தின் முகத்தில் பரவிய சந்தோஷம் விஷ்வாவுக்கு நிறைவையே கொடுத்தது.

'நீ வா... அபர்ணா... அவன் ஏதாவது உளறிட்டு இருப்பான். ஃபங்ஷன் ஆரம்பிக்க போகுது...' என்றபடியே பரத் நடக்க..

'ஹன்சிகா வரலியா......' என்று கேட்ட படியே நடந்தான் விஷ்வா

பரத்தின் அருகில் அபர்ணா அமரும்படி இடைவெளி விட்டே அமர்ந்தான் விஷ்வா. அவனுக்கு என்ன தெரியும் அபர்ணாவின் மனதில் இருப்பவன் வேறொருவன் என!!!

அவள் அருகில் பரத் அமர... தயக்கத்தின் மடியில் தான் அமர்ந்திருந்தாள் அபர்ணா. அவ்வப்போது அவனது பார்வை அவளை தொட்டு தொட்டு விலகிய போதும் அவளது பார்வை மேடையின் மீதும், அங்கே நடந்துக்கொண்டிருந்த நிகழ்ச்சிகள் மீதுமே இருந்தன.

பல நிமிடங்கள் இப்படியே கடக்க பொறுத்து பொறுத்து பார்த்த பரத் மெலிதான குரலில் இதமாக அழைத்தான்...

'அ...ப...ர்....ணா..'.

சடக்கென அவள் திரும்ப இருவர் கண்களும் சந்தித்துக்கொள்ள.... தவிக்கும் பார்வையுடன் கேட்டான் பரத்...

'அபர்ணா... என் பாட்டெல்லாம் கேட்டிருக்கியா... அபர்ணா...' ஏக்கத்தில் மூழ்கி கிடந்த அவனது குரல் அவளை என்னவோ செய்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ப்ரியாவின் "ஊனமறு நல்லழகே" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

'என்னவென்று சொல்வாளாம் அவனிடம்??? நிறைய பாடல்கள் கேட்பாள் தான். அதில் அவனுடையது எது என தெரியவில்லையே!!!' முன்பொரு முறை அவன் பாடி கேட்ட 'தீர்த்த கரையினிலே' மட்டுமே அவளது நினைவலைகளில் இருக்கிறது..'

எதையாவது சொல்லி அவன் மனம் உடைக்க தோன்றவில்லை. சின்ன புன்னகையுடன் அமோதிப்பாக தலை அசைத்தாள் அவள்.

'பிடிக்குமா உனக்கு???' சட்டென அடுத்த கேள்வி.

அவளது 'ஆம்....' என்ற பதிலை எதிர்பார்த்தவனிடத்தில் இன்னமும் அதிகமான தவிப்பு.... அவன் கண்களில் அவள் மீதிருந்த நேசத்தை தவிர வேறுதுவும் இல்லை.

சின்ன புன்னைகயுடன் 'ஆம்...' என தலையசைக்க மலர்ந்து போனது அவன் முகம்.

அடுத்ததாக சிறந்த பாடகருக்கான விருது என்ற அறிவிப்பு மேடையில் வர,.... இவர்கள் கவனம் அந்த பக்கம் திரும்பியது. இவனது பெயர் அறிவிக்க பட.... மேடையில் விருதை கொடுப்பதற்காக ஒரு இசையைமைப்பாளர் நின்றிருக்க... பின்னணி இசையாக அவன் பாடிய பாடல் ஒலித்துக்கொண்டிருக்க  அழகான புன்னகையுடன் விறு விறுவென மேடை ஏறினான் பரத்.

அரங்கம் நிறைந்த கரகோஷங்களுடன் அவன் விருதை பெற்றுக்கொண்ட போதிலும்... அவனது பார்வை அபர்ணாவிடமே இருந்தது. அவளது கைதட்டலும், அழகான சிரிப்புமே மிகப்பெரிய விருதாக தோன்றியது அவனுக்கு.

அடுத்து மைக் அவனிடம் தரப்பட... தன்னை திரையுலகிற்கு அறிமுக படுத்திய இசை அமைப்பளர்களுக்கு நன்றி சொன்னவன்..

'நான் ஸ்பெஷலா இன்னும் ஒருத்தருக்கு தேங்க்ஸ் சொல்லணும், இந்த மேடையிலே சொல்லலாமா???' அவன் கேட்க..

'கண்டிப்பா சார்...' என்றார் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த தொகுப்பாளர்.

அதே நேரத்தில்... அவளது வீட்டில் நேரடி ஒளிபரப்பில் இந்த காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தனர் அவளது அப்பாவும் அம்மாவும்.

பரத்தின் முகத்தை பார்த்தவுடனே நிறையவே குழப்பம் அவளது அம்மாவின் மனதில். சில நிமிட யோசனைக்கு பிறகு தெளிவானது அவரது குழப்பம். அவன் யாரென அடையாளம் தெரிந்திருந்தது அவருக்கு. ஆனாலும் அவர் யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை இந்த விஷயத்தை.

இங்கே மைக்கில் தொடர்ந்தான் பரத்...... 

'வாழ்க்கையிலே நாம மேலே ஏறணும்னா... நமக்கு ஒரு பிடிப்பு வேணும். ஒரு மாடி மேலே ஏறணும்னா கூட ஒரு ஏணியோ, படிகளோ வேணுமில்லையா.... அது மாதிரி எனக்கு ஒரு பிடிப்பு.... ஒரு பெண்... சில வருஷங்கள் முன்னாடி வரைக்கும், அதாவது அவங்க என் வாழ்க்கையிலே வர வரைக்கும் எனக்கு இந்த உலகமே பிடிக்காது ஏன்... என்னையே பிடிக்காது...'

அப்படி இருந்த நான்.... இன்னைக்கு நான் இவ்வளவு வளர்ந்து உங்க முன்னாடி நிக்கறேன்னா... அதுக்கு காரணம் அவங்க தான்...'

அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருப்பதை எல்லாரும் கவனித்திருப்பர்களோ???? அது எப்படியோ??? சொல்லி வைத்தார் போல் அத்தனை காமெராக்களும் நேராக அபர்ணாவின் பக்கமே  திரும்பின. படபடப்பின் உச்சிக்கு சென்று விட்டிருந்தாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.