வெற்றியும் நிகேதனும் இப்போது விளையாட... வைஷு, ஜானவி, சஞ்சய், அம்பிகா எல்லோரும் அங்கே சேர் போட்டு உட்கார்ந்திருந்தனர்... நீரஜா மட்டும் நான் விளையாட வரவில்லை என்று சொல்லிவிட்டு சற்று தள்ளியிருந்த ஊஞ்சலில் ஜெய்யை உட்கார வைத்து ஆட்டி விளையாட்டுக் காட்டி கொண்டிருந்தாள்.
சஞ்சயின் பார்வையோ அங்கு நீரஜாவின் மேல் தான் இருந்தது... இப்போது தான் காரில் நன்றாக பேசிக் கொண்டு வந்தாள்... அதற்குள் இப்படியெல்லாம் நடக்க வேண்டுமா..?? என்று இருந்தது அவனுக்கு..
பின் இரவு எல்லோரும் சாப்பிட்டு விட்டு உறங்க ஆயத்தமான போது ஜானுவும் நிருவும் பீச்க்கு போகலாம் என்று நிகேதனை கேட்டுக் கொண்டிருந்தார்கள்... பீச் மணலில் நடக்க முடியாது என்று அம்பிகா வர மறுத்துவிட்டார்... வைஷுவும் அம
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு போலாம்... " என்று நீரஜா சொன்னதும்... "ஜெய் கண்ணா வா மாமா உன்னை கூட்டிட்டுப் போறேன்..." என்று சஞ்சய் அவனை அழைத்தான்.
உடனே அவனை பார்த்த நீரஜா... "இப்போ என்ன சொன்னீங்க..." என்றுக் கேட்டாள்.
"மாமாக் கூட வாடா... பீச்ல விளையாடலாம்னு கூப்பிட்டேன்.." என்று சஞ்சய் பதிலளித்ததும்...