(Reading time: 13 - 25 minutes)

12. அனு என் அனுராதா - VJ G

Anu en Anuratha

ருவான், நீ யாரென்று தெரிந்துக் கொள்ளவாவது வருவான்,ஏன் உனக்கு அவனைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறதா? என்று கேட்டார் சுந்தரம்

அவளும் 'ஆமாம், ஆனால் என் வயதை நினைத்து எனக்கு கவலையாக இருக்கிறது, என்னால் அவனுடன் சாதரணமாக பழக முடியாது, வருத்தமாக இருக்கிறது.' என்றாள் ராதா

‘எனக்கும் அது புரிகிறது, நீ அவனுடைய அம்மாவாகவே மனதில் நினைக்கிறாய் அப்படியே உன் மனது என்ன சொல்கிறதோ அதைச் செய் யாருக்காகவும் கவலைப் படாதே.' என்றார் சுந்தரம்

‘இப்படியே பேசிக் கொண்டு, இங்கேயே படுத்துக் கொள், கவலைப் படாதே எனக்கும் உன்னுடைய, மரியாதையும், கவுருவமும், முக்கியம் அதனால் நான் உன்னைத் தொட மாட்டேன்,' என்றார் சுந்தரம்

அவள் சிரித்துக் கொண்டே 'அப்படியெல்லாம் நினைக்கவில்லை, நீங்க எனக்குக் கிடைக்கவே மாட்டீர்கள் என்று நினைத்திருந்தேன், இப்போது நீங்க கிடைத்தவுடன் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா? அதனால் எனக்கு நீங்களும், நம் ஆனந்தனும்தான் முக்கியம் வேறு எதுவுமில்லை' என்றாள்

அவளை இழுத்து தன்னுடன் கட்டி அனைத்து 'எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல்லே,’ அவள் நெற்றியில் முத்தம் கொடுத்துச் சொன்னார் ‘நானும், ஆனந்தனும் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்திருக்கிறோம் தெரியுமா? ‘என்று சொல்லி ‘சரி படு' என்றார்.

அடுத்த நாள் காலை நாலரை மணிக்கு எப்பவும் போல் எழுந்து விட்டார் சுந்தரம், எழுந்து ஜாகிங் போய்விட்டு ஐந்தரை மணிக்கு வந்து விட்டார், தன்னுடைய ரூமில் ராதா தூங்கிக்கொண்டிருந்தாள், அவளை டிஸ்டர்ப் செய்யாமல், இன்னொரு ரூமில் போய்க் குளித்து விட்டு வந்தார்,அவர் வெளியே வந்ததும் பஞ்சு காபி கொண்டு வந்தான்,

ராஜேந்திரன்க்கும், சாந்திக்கும் ரூம் உள்ளே காபி கொடுக்கச்

சொன்னார்,அப்படியே அவனும் செய்தான்.

சுந்தரம் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார், உடனே வெங்கடேசன் ஞாபகம் வந்தது, ராதாவைப் பார்த்தால் ரொம்ப சந்தோஷப் படுவார், அதனால் வீடிற்கு வரும்படி சொல்லணும், என்று போனை எடுத்துப் பேசினார், வெங்கடேசன் நான் சுந்தரம் , எப்படி இருக்கீங்க? அண்ணி எப்படி இருக்காங்க? ஆமாம் பிஸி, ஆனந்த நன்னாயிருக்கான், நான் வெள்ளிகிழமை கல்யாணம் வச்சிருக்கேன், இல்லை எனக்கு, நீங்களும் அண்ணியும் இன்னிக்கு வீட்டுக்கு வாங்க, பெண்ணைப் பார்க்கணும், இல்லை நீங்க வாங்க பார்த்தவுடன் கேள்வியெல்லாம் கேளுங்கள், சரி

மதியம் சாப்பாட்டுக்கு வந்துடுங்க, இங்கேயே இருந்து விடனும் என்ன என்ன செய்யனுமோ உங்கள் தங்கைக்கு நீங்களும் அண்ணியும் என் சார்பிலும் எனக்கு யாருமில்லை என்று உங்களுக்குத் தெரியும் வந்து நீங்க தான் செய்யனும். நேற்று போய் புடவையெல்லாம் எடுத்து வந்து விட்டேன், தாலி கூட அவள் அனுவுதே போதும் என்றாள் ஆனால் நான் தான் புதிது எடுத்திருக்கேன், நீங்கள் வாங்க, என்று கூறி வைத்தார்.

ராதாவின் தங்கைகள் காலேஜுக்கு கிளம்பி கீழே வந்தார்கள், டிபன் மதியம் சாப்பிட என்று முன்னாலேயே சொல்லிவிட்டார் , அதனால் எல்லாம் ரெடி

‘ராதா எங்கே இன்னும் காணோம்’ என்று அவள் அம்மா கேட்டுக்கொண்டு வந்தாள்.

சுந்தரம்,’ அவள் இன்னும் எழுந்திருகல, அவளை எழுப்ப வேண்டாம், தூங்கட்டும்’ என்றார்.

‘இல்லை கல்யாணம் ஆகப் போகிறது இப்படி தூங்கினால் நல்லாயிராது ....’

‘நானே தூங்கட்டும்னு சொல்கிறேனே அப்புறம் என்ன?’ என்றார் சுந்தரம்.

ரம்யா ரஞ்சனா இருவரிடமும்’ கார் ரெடியா இருக்கு, இனிமே இந்தக் காரிலேயே போய்டுங்க காலேஜுக்கு’ என்றார்.

‘இல்லை நாங்கள் எப்பவும் போல பச்சிலேயே போறோம் ,’என்றார்கள்

ஆனால் அவரோ,’ இந்தக் கார் இனி உங்களுக்குத்தான், அதனால் யோசிக்காமல் போங்க, ராதாவின் தங்கைகள் கஷ்டப் படக் கூடாது' என்றார் அவர்கள் டிபன் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினார்கள், அதற்குள் சிவாவும் வந்து விட்டான்

ராதா எழுந்த பொது சுந்தரம் ரூமிலிருந்தார், 'மணி என்ன?' என்று கேட்டாள்,

‘மணி எட்டாச்சு, எழுந்து குளித்துவிட்டு வா டிபன் சாப்பிடலாம்’ என்றார்

‘எட்டாச்சா ஏன் என்னை எழுப்பல? ஐயோ, அம்மா திட்டுவாளே,’ என்றாள்,

அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து பைல் பார்த்துக் கொண்டிருந்தவர் எழுந்து வந்து, அவளை தன்னோடு அனைத்து,' என்ன செய்ய வேண்டும் நீ, நல்லா தூங்கு, இத்தனை நாள் நம் நினைவுகள் வந்து உன்னைத் தூங்க விடாமல் அலைகழித்தது இப்போதான் நீ நல்லா தூங்குகிறாய், அதான் உன்னை எழுப்ப வேண்டாமென்று சொல்லிவிட்டேன்.' என்றார்

அவளை தலை உச்சியில் அவர் உதட்டை அழுத்திப் பதித்து, 'போய் குளி,உனக்கு வேண்டிய துணியெல்லாம் பாத்ரூமில் வைத்திருக்கிறேன் போ' என்றார்

அவள் வெட்கத்தில் முகம் சிவந்தாள், நீங்க ஏன் இதையெல்லாம் செய்யனும்? நானே....' 'ஏன்? நான் செய்தால் என்ன? எனக்கு நீ செய்ய மாட்டாயா? அதைப் போல் தான்,’ என்று சொல்லி அவள் வெட்கத்தை ரசித்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.