(Reading time: 13 - 25 minutes)

ல்லோரும் கிளம்பினர், வீட்டுக்கு சென்றனர், சிறிது நேரத்தில் வாசலில் ஒரு கார் வந்தது, சுந்தரம் வாசலுக்கு போனார், அங்கு வெங்கடேசனும் அவர் மனைவியும் இறங்கி வந்துக்கொண்டிருன்தனர், 'வாங்க, வாங்க' என்று அழைத்தார் சுந்தரம்

'நீங்க எதுக்கு கார் அனுப்பினீங்க நாங்க கால் டாக்சியில் வந்திருப்போம்' என்றார் வெங்கடேசன்

‘அதெல்லாமில்லை, எனக்கு வேறு யாரிருக்கா உங்களைத் தவிர,’ என்று பேசிக் கொண்டே உள்ளே போனார்கள்

அங்கு ராஜெந்த்ரனையும், அவர் மனைவியையும் அறிமுகப் படுத்தினார் சுந்தரம்

'சார் யாருன்னு சொல்லவேயில்லையே' என்றார் வெங்கடேசன்

'சொல்றேன் வெயிட் பண்ணுங்க' என்று சொல்லி 'உட்காருங்க இதோ வரேன்' என்று உள்ளே சென்றார்

வரும்போது ராதாவை கை பிடித்து அழைத்து வந்தார்

‘இங்கே பாருங்க வெங்கடேசன்,’ என்று சொன்னார்

வெங்கடேசன் ராதாவைப் பார்த்தவுடன் அதிர்ச்சி ஆகிவிட்டார்

எழுந்து நின்றார் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது, அதே நிலைமைதான் அவர் மனைவிக்கும்,

அவரைப் பார்த்தவுடன் ராதாவிற்கு அவரை அடையாளம் அவ்வளவு தெரியவில்லை, அவளுக்குத் தன் அண்ணன் சின்ன வயது தான் ஞாபகம் ஆனாலும் கொஞ்சம் முகம் தெரிந்தது, ஓடிப் போய் அவரைக் கட்டிக் கொண்டாள். வெங்கடேசனும், அவர் மனைவியும் அவளைக் கட்டிக் கொண்டு அழுதனர். முகத்தில் சந்தோஷம், ஆச்சர்யம்.

ராதாவின் அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ ஒன்றும் புரியவில்லை, யாரிது நம் பெண்ணுக்கு அவர்களை எப்படி தெரியும் என்று நினைத்தார்கள்

ஒரு வழியாக அழுது முடித்து, 'இது எப்படி?' என்று சுந்தரத்திடம் கேட்டார் வெங்கடேசன்,

சுந்தரம், முதலில் இவர் யாரென்று சொல்கிறேன் பிறகு மத்தது என்று 'இவர்தான் ராதாவின் அப்பா, இவர் அம்மா' என்றார்

வெங்கடேசன் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டார் உங்கள் காலில் விழலாமா? என்று கேட்டுக் கொண்டே அவர் காலை தொட்டு வணங்கினார்

எப்படி என்று சுந்தரத்திடம் மறுபடி கேட்டார்

சுந்தரமும் நடந்தது எல்லாம் சொன்னார், அவளுக்குத் தோன்றியதையும் சொன்னார், ஆச்சர்யமாக இருந்தது எல்லோருக்கும்.

ராதாவிடம் கேட்டார் வெங்கடேசன்,'என்னை உனக்கு அடையாளம் தெரிந்ததா? என்று

அதற்க்கு அவள் 'தெரிந்தது ஆனால் என் ஞாபகத்தில் நீங்க சின்ன வயதில் இருந்த முகம்தான் ஞாபகம் இருக்கு, இவர் சொன்னவுடன் எனக்கு அடையாளம் தெரிஞ்சுடுத்து,’என்றாள்

‘ஆனால் சுந்தரம் நீங்க சொல்லிண்டே இருந்தீங்க, என் அனு வந்துடுவா, என்னிடம் திரும்பி வருவா என்று அதே போல் வந்து விட்டாள், என் தங்கம் வந்து விட்டாள், இந்த அருமையான புருஷனையும், வாழ்க்கையையும், பிள்ளையையும் விட்டு போய்ட்டாளேன்னு, நினைத்து கலங்கியிருக்கேன், என் தங்கம், வந்து விட்டாள், பாரு உன் புருஷனும் அப்ப எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கார் பார், என் கண்ணு பட்டுடப் போகுது என்று மனைவியிடம் இவர்களுக்கு திருஷ்டி சுத்திப் போடு’ என்றார்

சுந்தரம் 'அது இருக்கட்டும் சாப்பிடலாம் வாங்க என்று எல்லோரையும் அழைத்தார், சிவா, வா சாப்பிடலாம்’ என்றார்

எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டு சாப்பிட்டார்கள்

அப்போது வெங்கடேசன்தான் சொன்னார்,'எத்தனை முறை நான் இவரிடம் வேறொரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கேட்டிருக்கேன், அவர் கேக்கவே இல்லை, ஆனந்தனை அவரே பார்த்துண்டார், என் அனு வருவாள் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்' என்றார்வெங்கடேசன்

அது சரி உங்களுக்கு இவ பேர் தெரியுமா? என்று கேட்டார்

ஒ, மறந்துட்டேன், பேரென்ன? என்று கேட்டார் வெங்கடேசன்

'ராதா' என்றாள் ராதா

'வாட்?' என்றார் வெங்கடேசன்

அதுவும் ஆச்சர்யம்தான், 'ஆமாம், நம் ஆனந்தனுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்

ஆனந்தன் என்றால் அவள் முகத்தில் ஒரு பூரிப்பு தெரிந்தது,சுந்தரத்திற்கு அவருக்கும் இதெல்லாம் ஏதோ கனவு போல் இருக்குது

‘ஆனந்தனுக்கு, நான் கல்யாணம் பண்ணிக்கறது தெரியும், ஆனால் ராதாவைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை, உங்களை மாதிரி அவனே வந்து தெரிந்துக் கொள்ளட்டும் என்று ஒன்றும் சொல்லவில்லை,’ என்றார் சுந்தரம்

‘சரி நாளைக்குக் கல்யாணம், எல்லா ஏற்பாடும் செய்தாச்சா? ‘என்று வெங்கடேசன் கேட்டார்.

'எல்லா ஏற்பாடும் செய்தாச்சு, நம்ம ராதா எல்லாம் பழைய நகை போதும் என்று சொல்லிவிட்டாள், அதனால் தாலிக்கொடி மட்டும் நான் வாங்கினேன், வேறு என்ன வாங்கணும்?' என்று கேட்டார் சுந்தரம்.

‘ஒன்றுமில்லை, அதான் எல்லா ஏற்பாடும் செய்துட்டீங்களே, நாங்க ரெண்டுபேரும் வெளியே போய்விட்டு வரோம்,சீக்கிரமே வந்துடுவோம்,’ என்றார் வெங்கடேசன்

‘ஏதாவது வாங்கவேண்டுமா? ‘என்று கேட்டார்

‘இல்லை கொஞ்சம் என் மனைவி ஏதோ வாங்க வேண்டுமென்றாள், அதனால் கடைக்குப் போகனும்,’ என்றார்

‘பரவால்லை காரில் போயிட்டு வாங்க’ என்றார் சுந்தரம்

‘நாளைக்கு உங்க பசங்களை வரச் சொல்லிட்டீங்களா?’ என்று கேட்டார் சுந்தரம்

‘சரி, இப்பவே போன் செய்துடறேன், நாளைக்கு எத்தனை மணிக்கு வரச் சொல்லனும்?’ என்று கேட்டார் வெங்கடேசன்

நாளைக்கு ஏழு மணிக்கு எல்லோரையும் வரச் சொல்லிடுங்க, காலையில் எட்டு மணிக்குள் டிபன் இங்கேயே சாப்பிட்டு விடலாம், கொஞ்சம் முக்கியமாணவர்களை மட்டும்தான் வரச் சொல்லியிருக்கிறேன், பத்து மணிக்கு முஹுர்த்தம்,பிறகு அங்கேயே ரெஜிஸ்டிறார் வந்து விடுவார்கள், அதையும் முடித்துக் கொண்டு அங்கேயே பக்கத்தில் ஒரு ஹால் புக் பண்ணச் சொல்லியிருக்கேன் அங்கே கட்டேரேர்ஸ் வந்து விடுவார்கள், சாப்பிட்டு வீடு வந்து விடுவோம்,' என்று எல்லாவற்றையும் சொன்னார் சுந்தரம்

அவர் ராதாவின் கையை விடவே இல்லை, வெங்கடேசனும் அவர் மனைவியும்' நாங்கள் போயிட்டு வருகிறோம்' என்று கிளம்பினார்கள்

வெங்கடேசனும், அவர் மனைவியும் பேசிக் கொண்டார்கள், ‘எவ்வளவு நம்பிக்கை அவருக்கு, நாம் எல்லோரும் என்னவோ இவர் இப்படி பைத்தியம் மாதிரி பேசிக் கொண்டிருகிறாரே என்று ஆனால் எவ்வளவு காதல் இருந்தால் இந்த மாதிரி எல்லாம் நடக்கும்? இவர் இப்படி என்றால் அவளுக்கும் தோன்றியதாமே, இது எல்லாம் சாதரணமாக சினிமாவில், கதைகளில் வருகிற மாதிரித்தான் இருக்கிறது. என்ன ஒரு நம்பிக்கை, அவளுக்கு உங்களையும், என்னையும் கூட கொஞ்சமாக ஞாபகம் இருக்கிறதாம், ஆனந்தன் பேரைச் சொன்னவுடன் எப்படிப் பூரித்துப் போனாள், பார்த்தீர்களா?’ என்றாள் வெங்கடேசனின் மனைவி, ‘ஆனால் ஊர், உலகம் என்ன பேசுமோ இந்த வயதில் கல்யாணம் அதுவும் இவ்வளவு சின்னப் பெண்ணென்று,’ என்றார் வெங்கடேசனின் மனைவி

 

தொடரும் 

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1005}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.