(Reading time: 13 - 25 minutes)

வர் வெளியே வந்தார் 'சிவா ஏற்கனவே வந்துவிட்டான் ' சிவா,நம்ம அனு அண்ணன் வெங்கடேசனுக்கு ஒரு கார் அனுப்பு அவங்கள இன்னிக்கே வரச் சொல்லிட்டேன்' என்றார்

‘சரி சார்’ என்றான் சிவா, ‘ ரெண்டு மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு,’ என்றான்

‘அதைக் கான்சல் பண்ணிடேன் சிவா, அடுத்த வாரம் எண்டுலே வைக்கலாமா ,இல்லேன்னா நம்ம ஜி.எம் பார்க்கச் சொல், ‘என்றார்

‘சரி சார், கொஞ்சம் முக்கியமானது அதனால் ஜி.எம் கிட்ட சொல்றேன்’ என்றான்

அப்போது சாந்தியும், ராஜெந்த்ரனும் வெளியே வந்தார்கள். குட்மார்னிங்

‘நல்லா தூங்கினீங்களா?” என்று விசாரித்தார்

'ஆ, நல்லா தூங்கினேன்', என்றார் ராதாவின் அப்பா

சாந்தியிடம் 'ராதா எங்கே?' என்றார்

'சுந்தரமே பதில் சொன்னார் ' அவள் குளித்துக் கொண்டிருக்கிறாள், வந்துவிடுவாள், எல்லோரும் ஒன்றாக டிபன் சாப்பிடலாமா? இல்லை உங்களுக்கு பசியாக இருந்தால், நீங்கள் இருவரும் சாப்பிடுங்கள், ராதா வந்தவுடன் நானும் வருகிறேன்' என்றார் சுந்தரம்

‘இல்லை அவளும் வந்துடட்டும், அப்புறம் சாப்பிடலாம்,’ என்றார்.

ராதாவும் குளித்து டிரஸ் செய்துக்கொண்டு வந்து விட்டாள், அவள் வரும்போது அவள் அழகை ரசித்துக் கொண்டு இருந்தார் சுந்தரம்,

அவள் உடுத்தியிருக்கும் புடவையில் அவள் மிகவும் அழகாக இருந்தாள்.

எல்லோரும் டேபிளுக்கு போய் உட்கார்ந்தார்கள், சிறுது நேரத்தில் எல்லோரும் சாப்பிட்டு முடித்தார்கள், ராதாவிடம், 'அப்பாவுடைய முன்னாடி காண்பித்த டாக்டரின் ரிப்போர்ட், மருந்து எல்லாம் எடுத்து வைத்துக் கொள்' என்றார் சுந்தரம்

'நாம் கிளம்ப வேண்டும்' என்றார்

ராதா அம்மாவைப் பார்த்தாள் 'எல்லாம் எடுத்து வைத்திருக்கிறேன் நாங்களும் ரெடி போகலாம்' என்றாள் அவள் அம்மா

அவர்கள் எல்லோரும் காரில் ஹாஸ்பிடல் போனார்கள், பத்தரைக்கே போய்விட்டார்கள், அவர்கள் காரிலிருந்து இறங்கும்போது ஹாச்பிடலின் பேரைப் பார்த்தாள் அவளின் பேரில் அந்த ஹாஸ்பிடல் இருந்தது, சாந்தியும் பார்த்து ‘ஹாஸ்பிடல் பேரைப் பார் உன் பேர் இருக்கிறது’ என்றாள், அதற்க்கு சுந்தரம், ‘அவள் ஹாஸ்பிடலில் அவள் பேர்தான் இருக்கும்’ என்றார், அவள் அம்மா அவளைப் பார்த்து, 'என்ன இவள் ஹாச்பிடலா?' என்றார் ஆச்சர்யத்துடன், அவள் அப்பாவும் அதே ஆச்சர்யப் பார்வை பார்த்தார், அவளுக்கு ஏற்கனவே தெரியும் ஆனாலும் நேரில் பார்க்கும் போது கண்களில் கண்ணீர்த்துளி சந்தோஷத்தில்,அவளையும் அறியாது சுந்தரத்தின் கையை பிடித்தாள், அவரும் அவள் கையை அழுத்திக் கொடுத்தார்.

சுந்தரத்தைப் பார்த்தவுடன் எதிரில் வந்த எல்லோரும், அவரை விஷ் செய்து விட்டுத்தான் தங்கள் வேலையை செய்தார்கள்.

சீப் டாக்டர் வந்தார், ‘நீங்க வருவதாக டாக்டர் சொன்னார், வாங்க ‘என்று அவருடன் நடந்தார், அவருக்கு ராதாவை அறிமுகப் படுத்தினார், என் மனைவி,அவள் பெற்றோர்கள், என்றார் சுந்தரம்

டாக்டருக்கு ஆச்சர்யம் இவர் மனைவி இறந்து விட்டாள் இவர் போட்டோ கூட மாட்டி இருக்கிறது, அதே ஜாடையில் இவ்வளவு சின்னப் பெண்ணா. ஆனால் ஏதோ காரணமாக அவர் படத்துக்கு மாலைப் போடக் கூடாது எந்த பூஜையும் செய்யக் கூடாது என்று எல்லோரிடமும் கூறியிருக்கிறார், என்று யோசித்துக் கொண்டே அவருடன் நடந்தார் சீப்.

சுந்தரத்தை நேரே டாக்டர் ரூமுக்கு கூட்டிக் கொண்டுப் போனார் சீப்.

முன்னாடியே கேட்டுத் தெரிந்துக் கொண்டார், யாரையும் உள்ளே அனுப்பவில்லை

ரெடியாக நிறைய சேர் போட்டு இருந்தார்கள். டாக்டரிடம் ராதாவையும் அவள் பெற்றோர்களையும் அறிமுகப் படுத்தினார். டாக்டர், ராஜேந்த்ரனை கேள்விகள் கேட்டார், முன்னாடி பார்த்த டாக்டரின் ரிபோர்ட்ஸ் எல்லாம் டாக்டரிடம் கொடுத்தார்கள் அதைப் பார்த்தார் அந்த டாக்டர் கொடுத்த மருந்துகளையும் பார்த்தார், அப்புறம் சுந்தரத்தைப் பார்த்து 'பைபாஸ் ஆபரேஷன் செய்யனும்,' என்றார் டாக்டர்

சுந்தரம் ' எப்போ செய்யனும்?' என்று கேட்டார்

டாக்டரும் 'எப்போ நீங்க ரெடியோ அப்போ செய்யலாம் என்றார்

'எவ்வளவு சீரியஸ்,' என்று சுந்தரம் விசாரித்தார்

டாக்டரும் 'சீக்கிரம் பண்ணிட்டா நல்லது' என்றார்

ராதாவைப் பார்த்தார், 'என்ன சொல்லறே அடுத்த வாரம், செய்துடலாமா?'என்று, ராதாவையும் அவள் அப்பாவையும் பார்த்துக் கொண்டு

அவர் தலையை ஆட்டினார், அவர் மனைவியை பார்த்துக் கொண்டே, ராதாவும் அவரிடம் 'சரி' என்று தலையை ஆட்டினாள்.

அப்போ அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை வைத்துக் கொள்ளலாம் என்ன சொல்கிறீர்கள்?'என்று கேட்டார் டாக்டர்,

ராதா அம்மாவைப் பார்த்தாள் அவரும் 'சரி' என்றார்

அப்போ புதன் கிழமை கூட்டிவாருங்கள் டெஸ்ட் எல்லாம் செய்யனும் அப்படியே அட்மிட் செய்துவிடுங்கள்' என்றார் டாக்டர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.