(Reading time: 11 - 22 minutes)

13. அனு என் அனுராதா - VJ G

Anu en Anuratha

ன்ன பைத்தியமாதிரி பேசறே, இப்பத்தானே நீ அவர்கள் காதலைப் பற்றி பேசினாய், அவள் இவருக்காகவே மறு பிறவி எடுத்து வந்திருக்கிறாள். தன் பத்து வயதிலேயே இவர் ஞாபகம் வர ஆரம்பித்து விட்டதாம். எப்படியோ சுந்தரம் இருந்த விரதம் பூர்த்தி ஆனால் சரி. எல்லாம் அந்த கடவுள் செயல், பாவம் சின்ன வயசுலேர்ந்து அவரை விட்டு உறவுகள் பிரிந்து கஷ்டப் பட்டவர், இந்த உறவு நிலைத்து அவர் சந்தோஷத்துடன் பல ஆண்டுகள் வாழ வேண்டும். என்ன நல்ல மனிதர், எல்லோருக்கும் உதவும் மனம் கொண்டவர், என்ன அதிசயம்? அவள் இந்த பிறவி பெயரும் ராதா, போன பிறவியில அனு ராதா, என்ன ஒற்றுமை, எல்லாம் அவன் செயல் என்று கண்ணீர் விட்டார், இதைப் பார்க்க என்னைப் பெற்றவர்கள் இல்லையே? ஊர், உலகம் என்ன சொன்னால் என்ன? இத்தனை வருடங்கள் அவர்களா வந்து, சுந்தரத்தின் வேதனையில் பங்கெடுத்தார்கள்? 'என்றார் வெங்கடேசன்

சுந்தரம் சில போன் கால் செய்து முடித்தார், சிவா வந்தான்

'என்ன சிவா ? என்று கேட்டார் சுந்தரம்

'சார், நம்ம ஆனந்தன் வருகிறார்,'

 'எப்போ?' என்றார் சுந்தரம், குரலில் ஒரு பரபரப்புடன்

சார் நாளைக்கு காலைல ஐந்து மணிக்கு வராரு,' என்றான் சிவா

'சரி நீ யாரிடமும் சொல்ல வேண்டாம், குறிப்பா ராதாவிடம் சொல்ல வேண்டாம், காலைல நீயே போய் அவனைக் கூட்டி வந்துடு, அவனிடம் ராதாவைப் பற்றி மூச்சு விடாதே, அவனே வந்து அவளைப் பார்த்துக் கொள்ளட்டும்' என்றார் சுந்தரம்

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது,ரம்யாவும், ரஞ்சனவும் காரிலிருந்து இறங்கினார்கள், உள்ளே செல்லும்போது, இவர்களும் உள்ளே சென்றார்கள்.

ராதாவிடம் வந்தார் நான் உன்னிடம் ஒன்று கேட்க மறந்து விட்டேன், உனக்கு யாரையாவது கல்யாணத்துக்கு கூப்பிட வேண்டியவர்கள் இருகிறார்களா? இப்போதே போன் செய்து விடுங்கள், நேரில் போய் யாரையாவது கூப்பிட்டே ஆகவேண்டுமென்றால்,' அங்கே அவள் அம்மா வந்தார், அவரிடம் சுந்தரம் கேட்டார் ‘உங்களுக்கு உறவுக்காரர்கள் யாரையாவது கூபிடவேண்டுமா? ஒன்றும் நீங்கள் சொல்லவில்லையே, நானும் கேட்க மறந்து விட்டேன்,’ என்று கேட்டார் சுந்தரம்

ஆமாம் அவருடைய ரெண்டு அக்கா இருக்கிறார்கள், என்னுடைய ஒரே தம்பி இருக்கிறான், அவர்களுக்கு இப்போ போய் போன் போட்டு இந்த விஷயத்தைச் சொல்றது தப்பா ஏதாவது சொல்லுவார்கள், கூப்பிட்டாலும் கஷ்டம், கூப்பிடா விட்டாலும் கஷ்டம்,’ என்றார் ராதாவின் தாய்

‘சரி சொல்லுங்கள் நேரில் போய்க் கூப்பிட வேண்டுமா, அவர்கள் போன் நம்பர் கொடுங்கள் நானே போன் செய்கிறேன்' என்றார் சுந்தரம்

'இல்லை நான் அவரிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்' என்றார் சாந்தி

‘உனக்கு?’ என்றார் ராதாவைப் பார்த்து, அவள் 'எனக்கு ரெண்டு பேர்தான்’ என்றாள், அவர்களை கூப்பிடனும் எப்படி உங்களிடம் சொல்வது என்று இருந்தேன்,' என்றாள் மெதுவாக

'சரி இந்த விஷயமாக நான் கல்யாணத்துக்கு அப்புறம் பேசுகிறேன், இப்போது நேரமில்லை, சரி அவர்களை போனிலேயே கூப்பிடலாமில்லை, கூப்பிட்டுவிடு, மொத்தம் எவளவு பேர் என்று மட்டும் சிவாவிடம் சொல்லிவிடுங்கள், அது மட்டுமில்லை எவ்வளவு பெண்கள் என்றும் ஆண்கள் என்றும் சொல்லிவிடுங்கள், அவன் ஏதோ வாங்குகிறான்' என்றார் சுந்தரம்

'சரி' என்றாள் ராதா

ரஞ்சனா வந்து ராதாவிடம் கேட்டாள், ஏன் அக்கா, நாளைக்கு கல்யாணம் நீ ஏன் என்னையோ ரம்யாவையோ கல்யாணத்திற்கு கூப்பிடவில்லை? நாங்கள் எங்கள் காலேஜுக்கு லீவ் போட வேண்டாமா? ஆமாம் அது என்ன,இப்போ வந்து கூப்பிட வேண்டியவர்கள் பற்றி கேட்கிறார்? நீயும் ரொம்ப மெதுவாக பதில் சொல்கிறாய்? அது சரி முதலில் உன்னைக் கல்யாணம் செய்துக் கொள்கிறவர் யார்? எங்கே அவர்? என்று கேள்விக் கனைகளை, வீசிக் கொண்டிருந்தாள் ராதாவின் தங்கை

‘முதல்ல என்னை கொஞ்சம் போன் செய்ய விடு, அப்புறம் உன் கேள்விக்கு பதில் சொல்றேன்,’ என்றாள் ராதா

‘யாருக்கு இப்போ போன் பண்றே என்று கேட்டாள்" தங்கை

‘சீனுக்கு' என்றாள் ராதா

அதைக் கேட்டவுடன் ரஞ்சனாவுக்கு சந்தோசம், அதைக் கேட்கத்தான் வந்தாள், இன்று காலேஜிலிருந்து, சீனுக்கு போன் செய்தாள், அவனைப் பார்த்து மூன்று நாள் ஆகிவிட்டது, அங்கு இருக்கும்போது மேல் மாடியில் மீட் செய்வார்கள், அவனோடு பேசிக் கொண்டிருக்கும் போது, அப்படியே இருக்க மாட்டோமா என்றிருக்கும், இப்போது இந்த பெரிய வீட்டில் பிடிக்கவே இல்லை, அது சின்ன வீடாய் இருந்தாலும், சீனு பக்கத்தில் இருக்கான் என்றிருக்கும்.' ஏன், எல்லோரும் எங்களை விட்டு போய் விட்டீர்கள்?' என்றான் அவன், அவளுக்கு தெரிந்த வரையில் சொன்னாள், 'எப்படி ராதா என்னை மறந்தாள், எவ்வளவு வருஷம் எங்களுக்குப் பழக்கம், ஒன்றாவே உட்கார்ந்து படிப்போம், எப்படி என்னை மறந்தாள்.' என்று சீனு கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.