(Reading time: 11 - 22 minutes)

பாவம் சீனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்துவிட்டால், அவன் அக்காவுக்கும் கல்யாணம் முடிந்து விட்டால், தனக்கு லைன் கிளியர், என்று நினைத்தாள், ஆ, ரம்யா இருக்கிறாளே? பாப்போம் முதலில் சீனுக்கு வேலை கிடைக்கவேண்டும், என்று ஏதோ கனவில் இருந்தாள், அங்கு வந்து நின்றார் சுந்தரம், ரஞ்சனா என்று அப்போது அங்கு ராதாவும் வந்தாள், சுந்தரம் ரஞ்சனாவிடம், 'ரம்யா எங்கே எப்பவும் ரெண்டு பேரும் ஒன்னா தானே இருப்பீங்க?’ என்றார்

அதற்குள் ரஞ்சனா 'ஆமாம், ஆனால் என்ன பண்ணுவது அவள் குளிக்கும் போது என்னால் இருக்க முடியறதில்லை' என்றாள் குறும்பாக, சுந்தரம் அவள் குரும்பை ரசித்தார்

அதற்குள் ராதவோ'என்ன உன் குரும்பை, எல்லோரிடமும் காட்டுவாயா, பெரியவர்கள் மரியாதை வேண்டாம்' என்றாள் கோபத்துடன்

'என்ன ராதா, என்னிடம் இப்படி பேச யாருமில்லையே என்று அந்தப் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தேன் நீ வந்து கெடுக்கிறாயே?' என்றார் சுந்தரம் வருத்தத்துடன்

'சரி இந்தா உனக்கும் ரம்யாவிற்கும், இந்த போன், ரெண்டு கலர் இருக்கு உங்களுக்குள் எது வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், அப்படியே உங்கள் இரண்டு பேருக்கும் யாரையாவது கல்யாணத்திற்கு கூப்பிட வேண்டும்னா கூப்பிடுங்க, என்ன பண்ணுவது ரொம்ப டைம் கம்மி, போனிலே கூப்பிட்டு விடுங்கள்,' என்றார் சுந்தரம் ரஞ்சனாவிடம்

அவள் ,அவரிடம் 'தேங்க்ஸ்' என்றாள், அதற்க்கு அவர் எதற்கு என்றார்

'அது, இந்த போனுக்கும், என்னை ரொம்ப மரியாதையாக, ‘நீங்க’ என்று அழைத்துக்கும்' என்றாள் குறும்புச் சிரிப்புடன்

அவர் திரும்பி 'சாரி, நான், நீங்கள் என்று சொன்னது, மரியாதை இல்லை, பன்மையில் சொன்னது, பாவம் உன் சந்தோஷத்தை கெடுத்து விட்டேன் அதனால் இனிமே தங்களை மிகுந்த மரியாதையுடனே பேசுகிறேன் சரிதானே?' என்று அவரும் அதே குறும்புச் சிரிப்புடன் சென்றார்

'ஐயோ, கவுத்துப்புட்டாரே,' என்று பிலாக்கணம் பாடுவது போல், அவள் நடிப்பதை பார்த்து வாய் விட்டு சிரித்துக் கொண்டு போவதை புன்னகையுடன் ஒரு ஆச்சர்யப் பார்வையுடன் ஆனந்தக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா, ராதாவும் அதே சிரிப்புடனும், அவரின் இந்த சிரிப்பும் அவளுக்கு ஒரு சிலிர்ப்பு கொடுத்தது.

ராதா அவளை ஒரு தட்டு தட்டி, ‘அவர் எவ்வளவு பெரியவர் நீ மரியாதையுடன் நடந்துக் கொள்ளனும்,' என்றாள்

அவள் 'சரி, சும்மா ஒரு விளையாட்டுக்கு அக்கா' என்றாள்

‘ஆனா பாவம் அக்கா, நமக்கு என்ன தேவைன்னு புரிஞ்சு ஒவ்வொன்னும் செய்யறார், நிஜமாகவே அவரிடம் மரியாதையாக நடக்க வேண்டும், ஆனா, அவரைப் பார்த்தால் என்னவோ இவ்வளவு ப்ரீயாக பேச வேண்டும்போல் இருக்கு, சாரிக்கா,'

‘பரவாயில்லை விடு, ஒரு விதத்தில் அவர் சிரிப்பைப் பார்த்தவுடன், அவர் உன் குரும்பை ரசிக்கிறார் என்று தோன்றுகிறது,' என்று சொல்லிவிட்டு, 'நம்ம சுமதிக்கா, சீனு ரெண்டு பேருக்கும் போன் பண்ணி நாளைக்கு வரச் சொல்லிவிட்டேன்' என்றாள் ராதா,

ரஞ்சனாவின் முகம் சிவப்பதைப் பார்த்தாள், அவள் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது, அதில் ராதாவிற்கு ஒரு சந்தேகம், சரி இதை அப்புறம் பார்க்கலாம், என்று அங்கிருந்து சென்றாள்.

அவள் அம்மா எதிரில் வந்தாள் ' கொஞ்சம் ரூமுக்கு வாயேன் என்று கூப்பிட்டாள், ராதாவின் அம்மா

இருவரும் ரூமுக்கு சென்றார்கள், ' என்ன விஷயம்மா?' என்று கேட்டாள் ராதா

‘உங்கள் அத்தைகள் நேரிலே வந்து கூட்டாத்தான் வருவோம் என்கிறார்கள், அப்பா அவர்கள் வரவேண்டுமென்பதில்லை என்கிறார் என்ன செய்வது என்று புரியவில்லை?’ என்றாள்

‘ஏனம்மா நீ என்ன பண்ணனும்னு சொல்லு போகணும்னால் நீயும் அப்பாவும் போயிட்டு வாருங்கள்,’ என்றாள் பெண்

'இல்லைடி, அவா நிறைய கேள்விகள் கேட்பார்கள் என்கிறார் அப்பா, அது மட்டுமில்லை, நம் நிலைமை தெரியாமல் எங்களுக்கு புடவை வாங்கவில்லை அது இது என்று குற்றம் சொல்லுவார்கள், நாம் பெரிய இடத்தில் சம்பந்தம் செய்கிறோம் நம்மிடம் என்னவோ பணம் நிறைய இருக்கு என்று நினைப்பார்கள் அதனால் அவர்கள் வரவில்லை என்றால்,பரவாயில்லை என்கிறார் உன் அப்பா' என்றாள்

 ‘சரி போகனுமென்றால் சொல்லு,’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது , ‘நான் உள்ளே வரலாமா?’ என்று கேட்டார் சுந்தரம்

'உள்ளே வாங்க, என்ன இந்த மாதிரி பெர்மிஷன் கேக்கறீங்க?' என்று சொன்னாள் ராதா,

'நான் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன் 'ஆனால் நீங்க பேசிக் கொண்டிருந்ததை கேக்க வேண்டியதா போய்டுத்து, தப்பா எடுத்துக்காதீங்க,’ என்று சொல்லிவிட்டு,

‘ஒன்னும் ப்ராப்லம் இல்லை, நானே வருகிறேன் வாங்க போய்க் கூட்டு விட்டு வரலாம், அப்படியே நீங்கள் சிவாவுடன் போய் யாருக்கு என்ன வாங்கவேண்டுமோ அதையும் வாங்கி வந்துவிடுங்கள், அவர் ரெஸ்ட் எடுக்கட்டும் என்றார் சுந்தரம்.

'இல்லை, அவர் திட்டுவார்,வேண்டாம்' என்றாள் சாந்தி

‘நான் அவரிடம் பேசறேன்' என்றார் சுந்தரம்

‘சரி ஒன்று செய்யுங்க, அவர்கள் போன் நம்பர் கொடுங்க நானே அவர்களைக் கூப்பிடுறேன்' என்றார் சுந்தரம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.