(Reading time: 10 - 20 minutes)

"ன்ன நேர்ந்தது?"

"நான் ஜெனித்த இரண்டு ஆண்டுகளில் என் தாயை இழந்துவிட்டேன் இளவரசே!"-திடுக்கிட்டார் ராஜகுமாரர்.

"என்ன?"

"வனத்தில் வாழும் சிம்மம் ஒன்று என் தாயை கொன்றதாக என் தந்தை கூறுவார்!"-அவள் அழ ஆரம்பித்தாள்.

"கவலைக் கொள்ளாதே!உனக்காக நான் இருக்கிறேன்!"-அவளை ஆறுதலாக தன் அணைப்பினில் சேர்த்தார் அவர்.

சில தினங்களில் அவர் குருகுலம் செல்ல நேர்ந்தது.

அதன்பின் கடமையே அவருக்கு பிரதானமாக,அனைத்தையும் மறந்திருந்த சமயத்தில் மீண்டும் அவள் தரிசனம்!!

அவள் முன்பை போல இல்லை...

அழகிற்கே இலக்கணம் வகுத்திருந்தாள்.எப்போதும் போல இயல்பாக அவள் பேசி இருந்தால் இந்த தடுமாற்றம் வந்திருக்காது.

சிரம் தாழ்ந்தாள் அல்லவா??என்னுடன் உரையாடும் போதும் அவள் முகம் ஏற்ற மாறுதல்களின் பொருள் என்ன??

ஆண்மகன் ஒருவனிடம் உரையாடியதன் விளைவா?அல்லது...உரையாடிய ஆண்மகன் நான் என்பதால் நிகழ்ந்த மாற்றமா??

மிகவும் மெலிவுற்று இருந்தாள்.பெண்கள் ஏன் உடல் தேய்மானத்தில் இவ்வளவு அக்கறை கொள்கின்றனர்??எனினும்,அதே சௌந்தர்யம்!!மனம் முழுதும் சற்று முன் கண்ட பெண்ணே வியாபித்திருப்பது சற்றே அவரை திடுக்கிட செய்தது!!

மனதினை மையமாக்கி இதயத்தின் வேர்விட்டு வெளிவந்தது சில காலங்களுக்கு முன் இதயம் தன்னில் பதிந்துப்போன காதலென்னும் அழகிய ஓவியம்!!

நிலா முற்றத்தில் நின்றுக்கொண்டு எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தாள் யாத்ரீகா!!முகத்தில் ததும்பிய நாணம் அவள் நிலை மறந்திருந்தாள் என்பதை கூறாமல் கூறி இருந்தது!!

காற்றில் அலைந்துக் கொண்டிருந்த கேசம் அவளது கவனத்தை தன்பக்கம் இழுக்க எடுத்த பெருமுயற்சி தோல்வியில் முடிந்தது.

"இளவரசர் சற்றும் மாறவில்லை!மாற்றம் கண்டது எங்களது பந்தமே!யாரோ ஒரு ஸ்திரியிடம் உரையாடுவதாய் உரையாடுகிறார்!!"

"சிறுவயதில் எண்ணற்ற நிமிடங்கள் ஒன்றாய் கழித்தோம்!என்றும் எனது வதனம் வாட அவர் அனுமதித்து இல்லை!அவருடன் வாழ்ந்த பொழுதுகளில் தாயின் அன்பினை உணர்ந்திருக்கிறேன்!ஆனால்,இன்று...நான் அவருக்கு தாங்கள் ஆனேன்!எதிர்நோக்கா மாற்றமே!யாதாயினும் அவர் இளவரசர்!நானோ,சாதாரண பிரஜை ஆவேன்.மனம் சங்சலம் அடையும் முன் அதனை கட்டுப்படுத்துவது அவசியம்!"

-தன்னை அறியாமல் வாய்விட்டு பேசினாள் அவள்.

"சகி!"-தனது தோழியின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள்.

"பிருந்தா!நீ எப்போது வந்தாய்?"

"நான் செவிக்கொடுத்து கேட்டதும் யாவும் உண்மையா?"

"எ...என்ன..கேட்டாய்?"

"நீ இளவரசரை குறித்து சுயமாக விவாதம் செய்தாய் அல்லவா?"

"இ..இளவரசரையா?இ..இல்லை..நான் ஏன் அவர் குறித்து சிந்திக்க போகிறேன்!"

"இல்லை..நான் கேட்டேன்!நீ இளவரசரின் நெருக்கத்தில் உனது தாயன்பை உணர்ந்ததாய் உரைத்தாய்!"

"அவ்வாறு நான் கூறவில்லை!"

"பொய் உரைக்கின்றாய்!உன் பிரிய சகியிடம் நீ பொய் உரைக்கின்றாய்!"

"................."

"இல்லையெனில் ஈசன் மீது உறுதி கூறு!"

"இல்லை...நான் கூறினேன்!"

"ம்...உன்னிடம் இருந்து உண்மையை கொணர இறைவனையே நாட வேண்டியுள்ளது!!ம்...அப்படியென்றால்,நீ இளவரசரிடம் உன் மனதினை சமர்ப்பித்தாயா?"

"இல்லை....அதனை நான் அறியேன்!"

"சகி...நீ கூறுவது உண்மையா?நானறியாமல் இளவரசரை எங்கு சந்தித்தாய்?"

"எவ்வாறு அதனை கூறுவேன்!பால்ய பருவத்தில் ஏற்பட்ட பந்தம் அது!!

தனிமையில் ஏங்கிய என் இதயத்திற்கு நம்பிக்கையை நல்கினார்.

ஆறுதல் மொழிகளை கூறி என்றோ என் நலனை கவர்ந்தார்.பல ஆண்டகளுக்கு பின்,அன்று,யாம் இருவரும் பிரியும் சமயம் வடித்த கண்ணீரின் காரணம் இன்று கிட்டியது.மனம் பதைக்க நின்றேன்!!அவர் முன் பேச நாவும் எழவில்லை.ஸ்தம்பித்து போயிருந்தேன்!"

"இளவரசரிடம் உன் மனதை எடுத்துரைத்தாயா?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.