(Reading time: 10 - 20 minutes)

"ல்லை...இன்று அவர் என்னை விலகி இருக்கிறார்!அவரின் இதயத்தில் நானிருக்க வாய்ப்பில்லை.எத்தனையோ ராஜகுமாரிகள் அதற்காக தவம் கிடக்க,தகுதியற்ற நான் எவ்வாறு அப்பணியினை ஆற்ற இயலும்?"

"இது நியாயமல்ல சகி!ஆயிரம் ராஜகுமாரிகள் தவமிருக்கயில்,அவரின் ஆறுதலை வென்றவள் நீயல்லவா!"

"வேண்டாம் பிருந்தா!மனம் ஏறிய சஞ்சலத்திற்கு அடித்தளம் போடாதே!நான்...சில காலங்களில் நடந்தவற்றை மறந்துவிடுவேன்!"

"சாத்தியம் என்றால்...புரிந்துக்காட்டு!"-அவளின் மனதில் இனம்புரியாத அச்சம் குடிக்கொண்டது.

அந்தப்புரம்....

"காளிங்க தேசத்து இளவரசியை பணிகின்றேன்!மகாராணி மித்திரா தேவி தம்மை காண அனுமதி வேண்டுகிறார்!"-முகத்தில் பகை கொப்பளிக்க அமர்ந்திருந்தவள் அதே கோபத்தோடு திரும்பினாள்.

அனுமதி அளித்ததாக தலையசைத்தாள்.

சில நிமிடங்களில் அவளது அறையில் பிரவேசித்தார் மகாராணி.அவருக்கு மதிப்பு ஏதும் வழங்காமல் அமர்ந்திருந்தாள் அவள்.அவரும் அதை எதிர்ப்பார்த்ததாக தெரியவில்லை.

புன்னகையோடு,

"கன்னிகையே!"-என்றழைத்தார்.

அவள் எழுந்து நின்றாள்.

"உனது நாமம் பிரக்யாயினி தானே!"-அவள் தலையசைத்தாள்.

"எனது புதல்வன் செய்த தவறுக்காய் மன்னிப்பு வேண்டுகிறேன் மகளே!உன்னை அவன் கவர்ந்து வந்தது தவறு தான்!"

"தம் புதல்வன் அக்காரியத்தை மட்டுமா புரிந்தார் மகாராணி?காளிங்க தேசம் வீரம் விளைந்த பூமி!ஒரு நங்கையை கவர்ந்து அவள் தந்தையை தோல்வியுற செய்தது பாவம் இல்லையா?ஒரு தேசத்தின் பிரஜைகளின் வாழ்வினை சூறையாடுவது தவறவல்லவா!தோற்ற தேசத்து மன்னனை அடிமைப் போல நடந்துவது பாவம் இல்லையா!பதில் கூறுங்கள் தாயே!!"

"உனது கேள்விகள் யாவும் உண்மையே!அனைத்திற்காகவும்,மன்னிப்பு வேண்டுகிறோம் மகளே!பாவத்தின் பிராயசித்தமாக உனது தந்தையை விடுதலை செய்யும்படி எனது புதல்வன் அரசரிடத்தில் விண்ணப்பித்துள்ளான்!"

"தமது புதல்வனா?இதுவும் அவரது கபடநாடகத்தில் ஒன்றா?இது எதற்காக?எஞ்சிய நம்பிக்கையையும் சூறையாட எண்ணம் கொண்டாரா இளவரசர் குருக்ஷேத்திரர்?"

"இது குருக்ஷேத்திரரின் விண்ணப்பம் அல்ல!எனது இளைய மகன் ஆதித்யவர்மனின் வேண்டுதல்!"

"................"

"யுத்தக்களத்தில் தமையனின் தீஞ்செயலுக்காய் மனம் வருந்தினான்!மன்னரிடம் வேண்டினான்!மேலும்,அரசர் சாலமனிடம் காளிங்கா தேசத்தை மீண்டும் ஒப்படைத்து பைரவக்கோட்டையுடன் நட்புறவில் திளைக்க எண்ணம் கொண்டுள்ளான்!தமையனுக்காக உன்னிடம் மன்னிப்பும் வேண்ட கூறி இருந்தான்!"-அவள் அதிசமாய் பார்த்தாள்.

"ஆற்றிய தவறுக்களுக்கு பிராயசித்தம் செய்யும் அவகாசத்தை அளி மகளே!மன்றாடி வேண்டுகிறேன்!எம்மிடத்தில் குரோதம் பாராட்டாதே மகளே!நான் வருகிறேன்!"-மகாராணி விடைப்பெற்றார்.

நீண்ட நேரம் தனிமையில் சிந்தித்தாள் இளவரசி.காலம் சற்று நகர,அவள் முகத்தில் சிறு புன்னகை பூத்தது.

"ஆதித்யவர்மர்!"-ஒருமுறை இளவரசரின் பெயரை புன்னகையோடு கூறிப் பார்த்தாள் அவள்.

குளக்கரையில் மலர்களை பறித்துக் கொண்டிருந்தாள் யாத்ரீகா!

மனம் முழுதும் வியாபித்த சந்திப்பை எண்ணிக் கொண்டிருந்தாள்.

எதையும் கவனிக்கவில்லை அவள்!!தன் பின்னால் இருந்து அஸ்வம் ஒன்றின் ஒலிக்கேட்க திடுக்கிட்டு திரும்பினாள்.

அங்கே ஆதித்யவர்மரின் புரவி நின்றிருந்தது.

"மித்திரா!நீ தனித்து இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்!"-அதனருகே சென்று ஆறுதலாக அதன் முகத்தை வருடினாள் அவள்."தாகத்திற்கு நீர் அருந்த வந்தாயா?"-அது கனைத்தது.

"என்னுடன் வா!"-அதனை அழைத்துச் சென்று குளக்கரையில் நீர் பருக வைத்தாள்.

"நன்றாக நினைவு உள்ளது!நானும்,இளவரசரும் நந்தவனத்தில் இருந்த சமயத்தில் தான் ஜெனித்தாய்!அன்று,உனது பிறப்பினை கண்ட இளவரசர் துடித்துப் போனார்!உனது தாயினை ஆர தழுவிக் கொண்டார்.

கண்ணீர் வடித்தார்.அதன்பின்,ஒவ்வொரு நாளும் உன்னை காணாமல் அவரது பொழுது புலராது!!இன்று,நீ அவரது பிரியத்தை கவர்ந்தவனானாய்!தேஜா!அன்று உன் வதனத்தின் பொலிவைக் கண்டு அவர் உனக்களித்த பெயர் அதுவல்லவா!"-அப்புரவி அவள் முகத்தோடு தன் முகத்தை உரசியது!!

"நினைவுகள் யாவும் இன்னும் இதயத்தை வியாபித்துள்ளதா?"-பரிச்சயமான ஆண் குரலில் திடுக்கிட்டவள் எழுந்தாள்.நினைவுகளுக்கு பிரியமானவரே வருகை தந்திருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.