(Reading time: 11 - 22 minutes)

17. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

ந்த குமார் கேஸ்க்காக மட்டும் நீங்க பாடுபடலை... ரெண்டு பேரும் ஒன்றரை வருஷமா எந்த கேஸ் எடுத்தாலும் ஜெயிச்சு டிபார்ட்மெண்டுக்கும் பேர் வாங்கி கொடுத்திருக்கீங்க…” என்ற சோமநாதன் இருவரையும் வெகுவாக பாராட்டிவிட்டு,

இனி நீங்க முழுக்க முழுக்க ஹேண்டில் பண்ண போறது இந்த கேஸ் தான்அதுக்காக நான் உங்க ரெண்டு பேரையும் ஸ்பெஷலா அப்பாயிண்ட்மெண்ட் பண்ணுறேன் மிஸ்டர் ஜெய் & இஷான்கங்கிராட்ஸ்….” என வாழ்த்தி கை கொடுக்க, இருவருமே அவருக்கு தங்களது மரியாதை செலுத்திவிட்டு கை கொடுத்தனர்…

இதுல யாரோட குறுக்கீடும் இருக்காதுஏன் என்னோட குறுக்கீடு கூட இருக்காதுஅஸ் அ சீனியர் ஆஃபீசரா எனக்கு நீங்க ரிப்போர்ட் மட்டும் பண்ணினா போதும்மத்தபடி நீங்க தாராளமா சுயமா எந்த முடிவையும் எடுக்கலாம்அதுக்கு நான் பர்மிஷன் தரேன்ஐ நோ மத்த கேஸ் மாதிரி இந்த கேஸ் அவ்வளவு ஈசி இல்லபட் உங்க ரெண்டு பேர் மேலயும் இருக்குற நம்பிக்கை உங்ககிட்ட இந்த கேஸை ஒப்படைக்க வச்சிடுச்சுநீங்க அத சக்ஸஸ்ஃபுல்லா முடிப்பீங்கன்னு நான் நம்புறேன்இதுவரை இதுல கொஞ்சம் இன்வால்வ் ஆன நீங்க இனி முழுக்க பார்க்க போறது இந்த கேஸ் மட்டும் தான்… ”

நிச்சயமா இந்த கேஸ் முடிச்சிட்டா அடுத்தது உங்க ப்ரோமோஷன் தான்…என சிரித்து வாழ்த்தியவரிடம்

தேங்க்யூ சார்வீ வில் கிவ் அவர் பெஸ்ட்…” என பதிலுக்கு சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து வெளியேறியதும்,

மச்சான் இதை உடனே வீட்டுல சொல்லணும்டா

சரிடா போய் சொல்லு…” என்ற ஜெய் ஒருவித சிந்தனையிலேயே இருக்க,

என்னடா இப்படி சுரத்தே இல்லாம சொல்லுற?... ஆமா நீ என்ன யோசிச்சிட்டிருக்குற?..” என இஷான் கேட்டதும் அவனை கூர்மையாக பார்த்த ஜெய்,

மச்சான் நாம ஐபிஎஸ் பாஸ் பண்ணி இப்போ ட்ரெயினிங்க் பீரியட்ல தான் இருக்குறோம்ரெண்டு வருஷம் கம்ப்ளீட் ஆனா தான் ப்ரோமோஷன்இப்போ இந்த கேஸ் நம்ம கையில கிடைச்சதுல சந்தோஷப்படுறதா இல்லை பயப்படுறதான்னு தெரியலை…”

பயமா?... அதும் உனக்கா?...” என இஷான் கண்களை விரித்து ஆச்சரியப் பார்வை ஒன்றை பார்க்க, ஜெய் சிரித்தான்

நான் சொன்னது அந்த பயம் இல்லடாஇவ்வளவு பெரிய பொறுப்பை சொதப்பாம செய்யணுமே அந்த பயம் தான்இதுவரை எப்படியோ இனி இந்த கேஸ்ல ரொம்பவே இன்வால்வ்மென்ட்டா இருக்கணும் மச்சான்அதான் யோசிச்சிட்டிருக்கேன்…”

ஜெய்யின் வார்த்தைகளில் நிறைவு கொண்ட இஷான், “நீ சொல்லுறதும் சரிதான் மச்சான்ஆனா நீ தான் எந்த கேஸ் எடுத்தாலும் அதுல ஃபுல் இன்வால்மென்ட் எடுத்து செய்வீயே பின்ன என்ன?..” என கேட்க,

இதுவரை நாம டீல் செய்த கேஸ் இவ்வளவு சென்சிட்டிவ் கிடையாது...” என்ற ஜெய்யின் வார்த்தைகளில் இருந்த அழுத்தம் இஷானுக்கும் புரியத்தான் செய்தது

மெல்ல நண்பனை பார்த்து இதமாக புன்னகைத்தபடி, “எனக்கு உன்னை நினைச்சு பெருமைப்படுறதா இல்லை சந்தோஷப்படுறதான்னு தெரியலை மச்சான்….” என்ற இஷான், ஜெய் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சட்டென ஜெய்யை அணைத்துக்கொண்டான்

தன்னை அணைத்துக்கொண்டவனை மெல்ல தட்டிக்கொடுத்தவன், “போதும்டா பில்டப்போகலாம் வா…” என ஜெய் இஷானை அழைத்துக்கொண்டு சென்றான்

மாலையில், “அம்மா.. எங்க இருக்கீங்க?...” என கத்திக்கொண்டே பிரசுதியைத் தேடினான் இஷான்

இங்க இருக்குறேன்ப்பாவா…” என சமையலறையிலிருந்து குரல் கொடுத்த பிரசுதி மகன் தன்னை தேடி வந்ததும்,

என்ன இஷான்காபி வேணுமா?... அம்மா போட்டு எடுத்துட்டுவரேன்நீ போய் டீவி பாரு…” என நகரப் போன பிரசுதியின் கைப்பிடித்து ஹாலுக்கு அழைத்து வந்தவன்,

அம்மாநான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குறேன்வெளியே போயிட்டு வரவாம்மா?...”

தாராளமா போயிட்டுவாப்பா…”

சந்தோஷமான விஷயம் என்னன்னு கேட்கமாட்டீங்களாம்மா?..”

அது சொல்லக்கூடிய விஷயமா இருந்தா, நீ வந்ததுமே சொல்லியிருப்பியே இஷான்…”

பிரசுதி சொன்னதும், தாயின் கைகளைப் பிடித்துக்கொண்டவன்,

நிஜமாவே நீங்க சூப்பர் அம்மா தான்அதெப்படி தான் என்னை இப்படி புரிஞ்சு வச்சிருக்கீங்களோ தெரியலை…”

எல்லா அம்மாவுமே இப்படித்தான்…” என சிரித்த பிரசுதி, மகனுக்கு குடிக்க காபி போட்டு கொண்டு வர, அவன் அதை குடித்துவிட்டு,

ம்மாநான் சதியை கூட்டிட்டு வெளியே போயிட்டுவரவா?...”

உன் தங்கச்சியை நீ கூட்டிட்டு போக எங்கிட்ட எதுக்குப்பா பர்மிஷன் கேட்குற?...”

இல்லம்மா அப்பா….” என அவன் இழுத்துக்கொண்டிருக்கும்போதே,

என்னடா என் தலை உருளுதுஎன்ன விஷயம்?...” என்றபடி உள்ளே வர,

உங்க தலையை யாரும் உருட்டலை…” என்ற பிரசுதி, தட்சேஷ்வரிடம், இஷான் சொன்னதை சொல்ல,

அதென்ன உங்க அம்மா கிட்ட மட்டும் பர்மிஷன் கேட்குற?.. என் பொண்ணை வெளியே கூட்டிட்டு போறதுக்கு நீ எங்கிட்ட தான பர்மிஷன் கேட்டுருக்கணும்…” என அவர் நிதானமாக சொல்ல, பிரசுதி கணவனை முறைத்தார்

சதி அவனுக்கு தங்கச்சிஅது நினைவிருக்கட்டும்…” என கொஞ்சம் அழுத்தமாகவே பிரசுதி சொல்ல, தட்சேஷ்வர், “சரி சரிபோயிட்டு நேரத்தோட வீட்டுக்கு வாங்க…” என்றபடி நகன்றார்

அவர் சென்றதும், “அம்மாதைஜூவையும் அப்படியே…..” என அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

சரிப்பா போயிட்டுவாஆனா நேரத்தோட வீட்டுக்கு வந்துடணும்…” என்ற கண்டிஷனோடு சம்மதம் தெரிவிக்க, அவன் சந்தோஷத்துடன் சதியைத் தேடிச் சென்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.