(Reading time: 11 - 22 minutes)

15. அனு என் அனுராதா - VJ G

Anu en Anuratha

ன் எனக்கு அந்த ஆசை வரக் கூடாதா,’ என்றார் அப்பா

அதில்லைப்ப சின்ன வயதில் வராத ஆசை இப்போது ஏன் என்று கேட்கிறேன் அவ்வளவுதான், என்றான் ஆனந்த்

'நீ உங்க அம்மாவைப் பார்த்தால், அது ஏன் என்று உனக்குப் புரியும்' என்றார் சுந்தரம்

சாரிப்பா, அவங்களை அம்மா என்று கூப்பிட கட்டாயப் படுத்தாதீங்க,'என்றான் மகன்

‘இல்லைப்பா நான் கட்டாயப் படுத்தவில்லை, சரி, இந்தா, இந்த வேஷ்டியை கட்டிக் கொண்டு கீழே வா, உனக்காக காத்திருக்கிறோம், மாமா வெங்கடேசனும் அவங்க பாமிலியும் வந்திருக்காங்க, எனக்கு நீ வந்தது ரொம்ப சந்தோஷம்டா' என்றார் சுந்தரம், அவர் கண் லேசாக கலங்கியிருந்தது

‘சாரிப்பா, நான் அப்படி பேசியிருக்கக் கூடாது, ஐ அம் ரியல்லி சாரிப்பா, நீங்க எனக்காக இத்தனை வருடங்கள், உங்கள் இளமை காலத்தை வேஸ்ட் செய்தீர்கள், நான் உங்களை இந்த மாதிரி கேள்வி கேட்டிருக்கக்கூடாது, தப்பு, என்றான்’ அவர் மகன்

அவர், அவனை தட்டிக் கொடுத்து, ‘இந்த நாளுக்காக நான் காத்திருந்தேன், இந்த பெண்ணிற்க்காக நான் காத்திருந்தேன் நீ அவளைப் பார்த்த பிறகு நாம் பேசலாம், நீ சீக்கிரம் கீழே வா,’ என்று கூறி கீழே சென்றார், சுந்தரம்

எல்லோரும், சல, சல என்று பேசிக் கொண்டிருந்தார்கள்

ரம்யா, மாடியையே, பார்த்திருந்தாள், சுந்தரம் இறங்கி வந்தார், அவர் யாரிடமும் இன்னும் ஆனந்தன் வந்த விஷயத்தையே சொல்லவில்லை, எல்லாம் ராதாவுக்கு சர்ப்ரைஸ், கொடுக்கத்தான்,அவர் மறைத்து வைத்தார். அவரும் மாடியையே பார்த்திருந்தார், அவர் எதேச்சையாக ரம்யாவைப் பார்த்தார் அவளும் மாடியையே திரும்பி, திரும்பி பார்த்தாள், என்ன நடக்கிறது, இப்போத்தான் அவருக்கு ஞாபகம் வந்தது, ஆனந்தன் கதவைத் திறக்கும் போது அவர்களையே பார்த்திருந்தான், ஒ,அவன் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தானா? கதை அப்படிப் போகிறதா, ஐயோ, அப்படியாக இருந்தால்? என்ன செய்வது....? என்று ஏதேதோ , நினைத்துக் கொண்டிருந்தபோது ஆனந்தன் இறங்கி வருவது தெரிந்தது, அவன் கையை பிடித்து அழைத்து வந்தார், அப்போது ஆனந்தன் கண் ரம்யாவை தேடியது,அத்தனை நேரம் அவள்தான் அப்பாவை கல்யாணம் செய்துக்கொள்ளப் போகிறவள் என்று நினைத்திருந்தான், அவளிடம்தான் தன்னைக் கூட்டிக்கொண்டு போய் அறிமுகப் படுத்தப் போகிறார் என்று நினைத்திருந்தான்,அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், சுந்தரமும், இதை கவனித்தார், ஆனால் அவனை தன் ரூமுக்கு அழைத்துச் சென்றார், ஆனந்த் நினைத்தான் ஒரு வேளை இந்தப் பெண்ணின் அம்மாவைத்தான் அப்பா தன் மனைவியாக்கிக் கொள்ளப் போகிறார் என்று நினைத்தான்,

உள்ளே கூட்டிக் கொண்டு போய்,’ ராதா,’ என்றார் சுந்தம், அவள் திரும்பி பார்த்தாள், ஆனந்தனும் அவளைப் பார்த்தான், மெதுவாக ‘அம்மா’ என்றான், அவன் உடம்பெல்லாம் நடுங்கியது, ‘அப்பா..... அம்ம்ம்ம்மா.....’வாய் உளறிற்று, சுந்தரம் கண் கலங்கினார், அவன் அம்மாவை போட்டோவில்தான் பார்த்திருக்கிறான், மூவரின் கண்களிலிருந்தும் கண்ணீர் கொட்டிகொண்டிருந்த்து, ஆனந்த், அம்மாவைக் கட்டிக் கொண்டான், அம்மா, அம்மா, என்று அனத்திக் கொண்டிருந்தான் வார்த்தை வரவில்லை, அவள் முகமெல்லாம் முத்தம் கொடுத்தான்.....

ஓ , என்று பெரிய அழுகை சத்தம் கேட்டு ரம்யாவும் ரஞ்சனாவும், அவர்கள் அம்மாவும் ஓடி வந்தனர், பின்னாடியே வெங்கடேசனும், அவர் மனைவியும் வந்தனர் அங்கு, ஆனந்தன் அழுகுரலும், ராதாவும் அழுவதைப் பார்த்து, அவர்களும் அழுதனர்,ரம்யாவுக்கும், ரஞ்சனாவுக்கும் ஒன்றும் புரியவில்லை, சுந்தரமும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார், என்னவோ நடக்கிறது என்று தெரியும், வெங்கடேசன், ‘ஆனந்த் எப்போ வந்தான் ?’ என்று தன் மனைவிடம் கேட்டார்,

அவர்களை கொஞ்சம் தனியே விடுவோம், அவர்கள் அழட்டும் மனது லேசா ஆனவுடன் சரியாகிடும் என்றார்

‘ஆனால் கல்யாண நாளும் அதுவும், இப்படி அழுதா நல்லதில்லை’ என்றார்,ராதா அம்மா

‘ஆமாம் ஆனால் இது ஆனந்தக் கண்ணீர், அழட்டும் மனசு லேசா ஆகிற மட்டும் அழட்டும் அவர்களை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் ப்ளீஸ்’ என்றார் வெங்கடேசன்,

எல்லோரும் வெளியே வந்துவிட்டனர்

ரம்யாவும் ரஞ்சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்

ஆமாம், நம்ம அக்காவுக்கும்,அவர்களுக்கும் என்ன சம்பந்தம் ஏன் இப்படி ஏதோ கால காலமாக பிரிந்ததைப் போல அழுகிறார்கள், என்று குழப்பமாக இருந்தது ,திரும்பி, ரம்யாவைப் பார்த்தாள், அவள் கண்ணிலிருந்து, கண்ணீர் கொட்டுகிறது ' என்னடி ஆச்சு, நீ ஏன் அழறே?’ என்று அவள் கேட்டபோது, ‘அக்காவும் அவரும் அழுவதைப் பார்த்தால், எனக்கும் அழுகை வருகிறது' என்றாள் ரம்யா,

இத்தனையிலும், ரஞ்சி சிரித்தாள்,' என்ன அவரா? அது எவர்? உனக்கு எதனால் அழுகை அக்காவும் அவரும் கட்டிக் கொண்டிருப்பதனாலா?' என்று ரஞ்சனா விளக்கமாகக் கேட்டாள்?

அவள் திரும்பி அழுதாள் ‘சரி, இப்ப சரி பண்ணிக்க, நாம் இப்போ கல்யாணத்துக்கு போகணும், இதப் பற்றி, அப்புறம் பேசலாம், இப்போ உன்னை போட்டு குழப்பிக்காதே,' என்று சொல்லி அவளை விரட்டினாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.