‘நீ எப்படி சொல்றியோ அப்படியே, இப்போ டிபன் சாப்பிடப் போவோம், அப்புறம் நான் உன்னை இன்னைக்கே கல்யாணம் பண்ணிக்கணும் அப்புறம் எவ்வளவோ இருக்கு’ என்று அவளைப் பார்த்து கண்ணடித்தார், அவள் முகம் சிவந்தது, அவரைப் பார்த்து ஒரு முறை, முறைத்து, ‘போதுமே, வாங்க போகலாம் என்றாள், 'அப்பா, மகன் இருவரும் சத்தமாக சிரித்தனர்.
அவளை தோளோடு அனைத்து வந்தான் ஆனந்தன், டேய், அவள் என் பெண்டாட்டிடா, என்று சொன்னபோது, அப்பா இன்னும் தாலியே கட்டலே, அதனால் எங்கம்மாவை, கொஞ்சநேரம் மகனோட பேசவிடுங்கப்பா, உங்க பெண்டாட்டியை ராதிரியெல்லாம் கொஞ்சுங்க வேண்டாம்னா சொன்னேன்' என்று அவன் சொன்னதும் அவள் நின்று விட்டாள்
'என்ன அப்பா, மகன் பேசற மாதிரியா பேசறீங்க ரெண்டு பேரும், அசிங்கமாக இருக்கு, ரெண்டு பேரும் கொஞ்சம் தள்ளியே வாங்க,' என்றாள் அவள்.
இரண்டு பேரும் உரக்க சிரித்துக் கொண்டே வந்தனர், ஆனந்த் அவளைக் கை பிடித்துக் கொண்டு வந்தான், சுந்தரம் .அவள் தோளில் கை போட்டு மூவரும் வெளியே வந்தனர்
எல்லோரையும் சுந்தரம்,' சாப்பிட்டீர்களா? 'என்று கேட்டார்
வெங்கடேசன், ஆனந்தா, எப்ப வந்த எங்களுக்கெல்லாம் தெரியவில்லையே, பார்த்தியா, அனுவை? என்று கேட்டார்
'ஆமாம் மாமா, அதிசயமாய் இல்லை? எங்கப்பாவை கடவுள் கை விடவில்லை இல்லை மாமா' என்றான் ஆனந்த், அவன் கண்ணோ சுத்திவர தேடியது அந்தப் பெண்ணை, சுந்தரம் அதைக் கவனித்து விட்டார்
‘நீங்கள் மூவரும், போய் சாப்பிட்டு வாங்க,’ என்றார் வெங்கடேசன்,
‘நீங்க எல்லோரும் கோவிலுக்கு போய்விடுங்கள் நாங்க வருகிறோம்’ என்றார் சுந்தரம்
‘அதுவும் சரிதான்’ என்றார் வெங்கடேசன்.
‘சிவா எங்கே?’ என்று கேட்டார்
'இதோ இருக்கேன் சார் 'என்றான் சிவா
'எல்லாம் சரியாய் இருக்கா சிவா' என்று கேட்டார்
'எல்லாம் சரியாய் இருக்கு சார்' என்றான் சிவா
“சரி நீ சாப்பிட்டாயா?’ என்று கேட்டார்,
' நான் அப்புறம் சாப்பிடறேன் சார், நீங்கள் சாப்பிடுங்கள்' என்றான் சிவா
‘வா, வந்து எங்களுடன் உட்கார், ம்ம்,' என்றார்
இதற்குமேல் அவரிடம் ஒன்றும் சொல்லமுடியாது என்று அவனுக்குத் தெரியும்
‘ரம்யா, ரஞ்சனா, அவங்க அம்மா, அப்பா எல்லோரும் சாப்பிட்டார்களா?’ அவர்கள் எங்கே என்றார் சுந்தரம் டேபிளில் இருந்து எழுந்தார், அவர்களைப் பார்பதற்கு, அப்போ, ராதாவின் அம்மா வந்தார், ‘நாங்கள் சாப்பிட்டு விட்டோம் இந்த ரெண்டு பெண்களை மட்டும் காணவில்லை எங்கே போனார்களோ?’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்
அவர்கள் போன் நம்பர் அவரிடம் இருந்தது, அதில் கால் செய்தார்,
ரஞ்சனா எடுத்தாள்,’ நீங்க ரெண்டு பேரும் எங்கே இருக்கீங்க?’ என்று கேட்டார் சுந்தரம்
‘நீங்க யார்? ‘என்று கேட்டாள் ரஞ்சனா
‘நான் சுந்தரம்’ என்றார்
‘ஒ, நாங்க இங்க தான் மாடியில் இருக்கிறோம்,’என்றாள்
‘சாப்பிட வாங்க’ என்று கூப்பிட்டார் சுந்தரம்
‘இதோ வருகிறோம்’ என்றாள்
‘யார்?’ என்று ஆனந்த் கேட்டான்
அவர், அவனை பார்த்து குறும்பாக சிரித்துக் கொண்டே ‘அவர்கள் ராதாவின் தங்கைகள்,’ என்றார்
அவனுக்கு முகம் தொங்கி விட்டது, அவன் ‘அந்தப் பெண் ஒ! நோ!’ என்று மனசுக்குள் மருகினான்.
அவர்கள் வரும்போது, அவன் ராதாவின் கையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான், அவன் ரம்யாவைப் பார்த்தான் ஆனால் அவளோ அவன் பக்கம் கூட திரும்பவில்லை, ரஞ்சனா தான் அவர்கள் மூவரையும் பார்த்தாள், இருபுறமும் சுந்தரமும் அவர் டூப்பும், என்று நினைத்துக் கொண்டாள்.
'என்ன அக்கா எப்படி இருக்கே?’ என்று கேட்டாள் ரஞ்சனா
ஆனந்த் ரஞ்சனாவைப் பார்த்தான் ‘ஹலோ !’ என்றான் அவளைப் பார்த்து அவளும் ‘ஹலோ!’ என்றாள்,’ நான் ஆனந்தன்’ என்றான்
அவள் " நான் ரஞ்சனா, இவள் ரம்யா' என்றாள், ரம்யா நறுக் என்று கிள்ளிவிட்டாள் ரஞ்சனாவை, ரஞ்சனா, ஆ....என்றாள்? என்ன ஆச்சு என்று எல்லோரும் கேட்டார்கள், ரஞ்சனா, ‘ஏண்டி கிள்ளின, நான் வெறும் உன் பேர் மட்டும்தானே சொன்னேன்,’ என்றாள்.
ரம்யா தலை குனிந்தபடியே இருந்தாள்.
‘ஏன் ரம்யா? ஏன் என்னவோ போல் இருக்கே என்ன அச்சு?’ என்று கேட்டாள் ராதா
‘ஒன்னுமில்லைக்கா’ என்றாள் ரம்யா, ‘என்ன ஆச்சு?’ என்று ஜாடையில், ரஞ்சனாவிடம் கேட்டாள்? அவள் ஆனந்தனைப் பார்த்தாள், அவன் புரிந்துக் கொண்டான் அவளுக்கு விஷயம் தெரியுமென்று, அவன் வேறு பக்கம் பார்த்தான், ‘எனக்கு ஒன்றும் தெரியாதக்கா’ என்று ரஞ்சனா சொன்னாள், ‘சீக்கிரம் சாப்பிட்டால் கோவிலுக்குப் போலாம் ரம்யா’ என்று சொன்னாள், ரஞ்சி
தொடரும்
{kunena_discuss:1005}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.