(Reading time: 11 - 21 minutes)

16. அனு என் அனுராதா - VJ G

Anu en Anuratha

'னக்குப் பசி இல்லை, போதும்’ என்றாள் ரம்யா,

ரஞ்சி,’ நாங்க கோவிலுக்குப் போறோம் அக்கா' என்றாள்,

'இரு எங்களோடு போகலாம் ' என்றாள் ராதா

'இல்லை, நாங்கள் போகிறோம், நீ உங்கள் ஆள்களுடன் வா,' என்றாள் ரஞ்சனா

'உங்கள் ஆள்களா என்ன சொல்கிறாள் இவள் ?' என்ற கவலையோடு எழுந்தாள்

சுந்தரம், ‘அவர்களைப் போக விடு, அவள் ஏதோ சின்னப் பெண் விடு, நீ சாப்பிடு, நாம் போவோம்’ என்றார்

அவள், ஏதோ நம் தங்கைகள் மனதில் உள்ளது, அதை சரி பண்ணவேண்டும், என்று சுந்தரத்தை பார்த்து, ‘அவர்களுக்கு சர்ப்ரைஸ்ன்னு ஒண்ணுமே சொல்லல , அவங்க நாம ஏதோ மறைக்கரோம்னு நினைகிறார்கள், அவர்களை நம்மோடு கூட்டிக் கொண்டு போகலாம், இல்லன்னா காம்ப்ளெக்ஸ் வந்து விடும், ப்ளீஸ்’ என்றாள்

‘நானா வேண்டாம் என்கிறேன், அவர்களைக் கூப்பிடுகிறேன் இரு என்று சொல்லி, சிவா, அவர்களை கூப்பிடுப்பா’ என்றார்,

‘ சார் அவர்கள் கிளம்பி போய் விட்டார்கள்’ என்று சொன்னான்.

அவள் கையை அழுத்தி‘சரி சாப்பிடு போகலாம்’ என்றார்,

அவளுக்கு மனம் சரியில்லை.

‘மூன்று பேரும் காலேஜிலிருந்து வந்தவுடன் ஒன்றாக உட்கார்ந்து பேசுவோம், சீனுவும் நானும் உட்கார்ந்து படிப்போம் அவனும் நல்ல பையன்’

‘யார் அந்த சீனு?’’ என்றார் சுந்தரம்

அவனும் அவன் அக்கா சுமதியும் எங்களுக்கு ரொம்ப க்ளோஸ், எங்களுக்கு, அப்பா உடம்பு சரியில்லாமல் இருக்கும்போதும், பணமில்லாமல் தவிக்கும்போதும், எல்லாவிதமாகவும் அவர்கள் எங்களுக்கு துணையாக இருந்திருக்கிறார்கள், இதையேன் இப்போது சொல்கிறேனென்றால் அவர்களை நான் அறிமுகப் படுத்தும்போது நீங்கள் கொஞ்சம் நன்றாகப் பேசவேண்டும் அவர்களிடம்' என்றாள்

‘உனக்கு யார் யார் முக்கியமோ, அவர்களெல்லாம், எனக்கு முக்கியம்,’ என்று சொன்னார்

‘எனக்கும் தான் அம்மா, நாங்கள் இவ்வளவு பணம் என்ஜாய் பண்ணின்டிருக்கும் போது நீ எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கிறாய்' என்றான் ஆனந்தன்

‘இந்த பசங்க, ஏன் இப்படி இருக்காங்க? என்னை தப்பாக நினைதிருக்கிரார்களோ?’

‘அதெல்லாம் ஒன்றுமில்லை கண்ணம்மா சும்மா புலம்பாதே,'

‘இந்த கல்யாணம் முடியட்டும் எல்லாம் பேசி சரி பண்ணிடலாம், ‘என்றார் சுந்தரம்

காரில், ஆனந்தன் ஒரு பக்கம், சுந்தரம் ஒரு பக்கம் நடுவில் ராதா உட்கார்ந்தார்கள், கார் கிளம்பி கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தது .

மணி ஒன்பது ஆகியது, இவர்கள்தான் கடைசியாக கிளம்பினார்கள் வீட்டிலிருந்து.

கோவில் போய்ச் சேர்ந்தார்கள், ராதாவிற்கு வெட்கமாக இருந்தது ஆனாலும் அவள் சுந்தரத்தின் கையை உதறி விட்டாள் காரை விட்டு இறங்கும் போது, அவருக்குப் புரிந்தது, அவளுக்கு வெட்கம் என்று, ஆனந்தன் அவள் கையை விடவில்லை அவன், அவள் தோளில் கையை போட்டு அனைத்துக் கூட்டிக் கொண்டு போனான்,தெரியாதவர்களுக்கு அவன் தான் மாப்பிள்ளை என்று நினைத்தார்கள் .

ரம்யா அதைப் பார்த்தவுடன் தலையை திருப்பிக் கொண்டாள் ஆனாலும் அப்பப்போ, திரும்பி அவனைப் பார்த்தாள், அவனும் அவளைப் பார்த்தான், அவளை தான் காலையில் பார்த்தது தன் மனதில் அப்படியே பதிந்திருந்தது.

ரஞ்சனா, ரம்யா, சுமதி, சீனு, அவங்க பாமிலி எல்லோரும் அப்படித்தான் நினைத்தார்கள் .

சீனு வந்தவுடன் ரஞ்சனாவைத்தான் பார்த்தான், அவள் கொஞ்சம் தாமதமாக வந்தாள், 'சாரி, லேட், ஆகிடுத்து,' என்றாள் சீனுவைப் பார்த்து, சுமதியிடம் சொல்வது போல்.

ராதா, சுமதி, சீனு ரெண்டு போரையும் பார்த்தாள்,அவர்களை கூப்பிட்டாள்,அவர்கள் வந்தவுடன், ‘எப்படியிக்கீங்க, சாரி, நேரே வந்து கூப்பிட முடியவில்லை அதான் போனிலே கூப்பிட்டேன் தப்பா நினைக்காதீங்க,என்று கூறி,'இது ஆனந்தன் , இவர்கள்தான் நான் சொன்ன எங்க நண்பர்கள்,’ என்று சொல்லிக் கொண்டிருந்த போது, சுந்தரம் அங்கு வந்தார், இவர்கள் தான் சுமதி, சீனு என்று அறிமுகப் படுத்தினாள், சீனுவை நன்றாக பார்த்தார், ‘நீ என்ன செய்துண்டிருக்க?’ என்று கேட்டார், நான் வேலைத் தேடிண்டிருக்கேன் சார்,’ என்றான்,

‘அவர், ஓ, அப்படியா, ரஞ்சனாவிடம் என் போன் நம்பர் இருக்கு, ஒரு இரண்டுநாள் கழித்து கால் செய்துவிட்டு என்னை வந்து பார்’ என்றார்,

‘சரி சார், ‘என்றான் சீனு

தூரத்திலிருந்து, சிவா, சுமதியை பார்த்துக் கொண்டிருந்தான்.

டைம் ஆயிடுத்து சார் என்று சிவா வந்து சொல்லும்போது, சுமதியின் கண்ணும், சிவாவின் கண்ணும் பார்த்துக் கொண்டது, ரெண்டு பேருக்குமே ஓர் நொடி மின்னலடிதாற் போல் இருந்தது.

சிவா, அங்கிருந்து போய்விட்டான்,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.