(Reading time: 11 - 21 minutes)

ல்யாணம் முடிந்தது , எல்லோரும் சாப்பிட கிளம்பினர், சீனு பாமிலி இவர்களுக்காக வெயிட் செய்தனர், எல்லோரையும் சாப்பிட அனுப்பிவிட்டு

ராதாவிடம் திரும்பினார், சுந்தரம், 'எவ்வளவு நிம்மதியாக இருக்கு தெரியுமா?' என்றார் சுந்தரம்

‘தெரியும்,’ என்றாள் ராதா

சுந்தரம் அவளிடம் பேசிக் கொண்டிருந்தாலும் எல்லாவற்றையும் சுற்றி என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தார்

சீனுவும்,ரஞ்சனாவும், ஆனந்தனும்,ரம்யாவும், சிவாவும் சுமதியும் என்று எல்லோரையும் கவனித்துக் கொண்டிருந்தார்

அந்த காலத்திருந்து இந்த காலம் வரை தன் மனைவியைக் காதலித்துக் கொண்டிருப்பவர் ஆயிற்றே, அவருக்குத் தெரியாதா

‘இன்று, நீ சந்தோஷமாக இருக்கிறாயா?’ என்று கேட்டார்

'நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன், ஆனால் என் தங்கைகளின் சந்தோஷமும் எனக்கு முக்கியம், எனக்கு கிடைத்த சந்தோசம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் இதே மாதிரி வாழ்க்கை அவர்களுக்கும் கிடைக்க வேண்டும், அப்போதான் ஒரு முழுமையான சந்தோஷத்தை நான் அடைவேன்,’என்றாள் ராதா

‘எல்லோருக்கும் முன் ஜென்மம் என்ன வென்று தெரிவதில்லை, எனக்கு அந்த கொடுப்பினை இருக்கிறது, என் குடும்பத்துடன் நான் சேர்ந்துவிட்டேன், இந்த பாக்கியம் எவ்வளவு பேருக்குக் கிடைக்கும்,’ என்றாள் மிகுந்த உணர்ச்சியுடன்.

சுமதி வந்தாள், ‘வாழ்த்துக்கள் ராதா,’ என்று வாழ்த்தினாள்.

சுந்தரம் சிவாவை கூப்பிட்டு, ‘உன்னை ஒன்று கேட்கவேண்டும் என்றார் இது பர்சனல் சிவா அதனால் கேட்கலாமா?’ என்றார்

‘என்ன சார்? நீங்கள் என்ன, என்னை வேற்று ஆள் போலவா நடத்துகிறீர்கள்?’என்றான் அவன்

‘சரி அப்போலேந்து பார்க்கறேன், நீ அந்தப் பெண்ணை விரும்புகிறாயா?’ என்று சுமதியை கண்ணால் காண்பித்துக் கேட்டார்.

அவன் முகம் சிவந்து' சார், இப்படி கேட்டால் எப்படி’ என்றான் வெட்ட்கப் பட்டுக் கொண்டே

‘இதில் என்ன, ராத விஷயம் வரும்போது உன்னிடம் நான் எல்லாவற்றையும் வெட்கப் படாமல் சொன்னேன் இல்லையா, இதில் வெட்கப் பட என்ன இருக்கிறது, உனக்கு இஷ்டம் என்றால் நான் பேசுகிறேன், உங்கள் வீட்டு சார்பில்,நான் உனக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் உன்னை என் சகோதரன் மாதிரித்தான் நினைக்கிறன்னு, அதனால் தைரியமாக சொல், ‘என்றார்

அவன் தலையைக் குனிந்துக் கொண்டு,’ ஆமாம்’ என்றான்

‘சரி நீ போய் வேலையைப் பார்’ என்று அனுப்பி விட்டு

சீனுவைக் கூட்டார் 'இங்கே வா' என்றார்

விவரம் கேட்டார் உன் அக்காதானே அவங்க? என்றார்

ஆமாம் சார் என்றான்

‘அவர்கள் எங்கே வேலைப் பார்கிறார்கள்?’

‘ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் அக்கௌன்ட்ஸ்ல இருக்காங்க சார்,’ என்றான்

‘அப்படியா அவங்களுக்கு கல்யாணத்துக்கு பார்க்கிறோம் சார், ஆனா எல்லோரும் நிறைய செய்யச் சொல்லி கேக்கிறாங்க எங்களால் முடியாது அவ்வளவு செய்ய,அதனால் வரும் வரன்கள் எல்லாம் தட்டிப் போறது ’ என்றான்

‘அப்படியா, என் செக்ரட்டரி சிவா ரொம்ப நல்லவன், நீங்க என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் உங்க அக்காவை நல்லா பார்த்துப்பான் என்ன சொல்றே ? உங்க அப்பாவிடம் பேசி சொல்றியா’ என்றார்

அவனும்,’ சரி இப்பவே சொல்றேன் சார்’ என்றான்

அவர் ஆனந்தனைக் கூப்பிட்டார் 'என்ன அப்பா?’

‘ஏன் நீ ஒரு மாதிரி இருக்கே?’

‘இல்லப்பா, அம்மா வருத்தப் பட்டாங்களே அவங்க குடும்பத்தை பற்றி, அதை நினைத்துக் கொண்டிருந்தேன்,’

‘அதை நினைக்க ஒன்றுமில்லை, இதெல்லாம் ஒரே குடும்பம் , நம் குடும்பம், அதனால் நீ கவலைப் படாதே’

‘அவர்கள் இனி நம்மை சேர்ந்தவர்கள் அதனால் அவர்களுக்கு ஒரு கஷ்டம் வர நான் விடமாட்டேன்’

அவன் அப்பாவைப் பார்த்து பெருமை அடைந்தான், இந்த மாதிரி குணம் ஒவ்வொரு ஆண் மகனுக்கும் இருந்தால், எந்த குடும்பத்திலும் கஷ்டமிருக்காது, என்று அவன் அப்பாவைப் பெருமையாக பார்த்தான்

தொடரும் 

Episode # 15

Episode # 17

{kunena_discuss:1005}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.