(Reading time: 11 - 22 minutes)

17. அனு என் அனுராதா - VJ G

Anu en Anuratha

சீனு அவன் அப்பா அம்மாவை அழைத்து வந்து அறிமுகப் படுத்தினான்.’ என் மகன் சொன்னான், உங்கள் செச்ரடரியை பற்றி,’ என்றார் சீனுவின் அப்பா

‘ஆமாம், அவனை மாப்பிள்ளையாக கிடைக்க ரொம்ப கொடுத்து வைத்திருக்கனும், உங்கள் பெண்ணிடம் கேளுங்கள், அவங்களுக்கு பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசி முடிக்கலாம் ‘என்றார் சுந்தரம்

‘இதோ உங்கள் எதிரிலேயே கேட்கிறேன்’ என்றார் அவர்

‘சுமதி இங்கே வா’ என்றார் அவள் அப்பா

அவளும் ராதாவும் எழுந்து வந்தனர், ராதாவுக்கு ஆச்சர்யம், நாம் சாதாரணமாக சொன்னோம் அவர்களிடம் நன்றாக பேசும்படி, ஆனால் இவரோ இப்படி உட்கார்ந்து பேசி அவர்களை குளிர்விக்கிறாரே என்று நினைத்தாள்

சுமதி வந்தவுடன் அவர் விஷயத்தைச் சொன்னவுடன், ‘அப்பா நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் சரிப்பா,’ என்னை எதுக்குக் கேட்கறீங்க என்றாள்

‘சந்தோஷம்மா’ என்றார் அவள் அப்பா

‘ஆனால் சுந்தரம் விடவில்லை, அப்படி இல்லைம்மா, உனக்கு மாப்பிள்ளையை பிடிக்கவேண்டும் இல்லையா,’ என்று கேட்டார்

‘நீங்க சொன்னா சரி சார்,’ என்றாள்

ஆனால் அவள்தான் ஏற்கனவே அவனைப் பார்த்து விட்டாளே

அப்படியும் சுந்தரம் விடவில்லை, ‘இதோ அவனே வந்து விட்டான் சிவா இங்கே வா’ என்றார், அவனும் வந்தான்

‘இதோ இவன் தான் என் செக்ரட்டரி, அவனும் வணக்கம் சார்’ என்றான்

அவள் புறம் திரும்பாமலேயே,

சுந்தரம் விஷயத்தை சொன்னார், ‘அவர்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது இப்போது நீங்கள் இருவரும் பேசிக் கொள்ளுங்கள் உங்களுக்கு ஒற்றுவந்தால் மேற்கொண்டு பேசுவோம் என்ன சொல்கிறீர்கள்?’ என்று சீனுவின் அப்பாவைக் கேட்டார் சுந்தரம்

அவரும்,’ ஆமாம் அப்படியே பேசிவிட்டு வாருங்கள்’ என்றார்

சுந்தரம் சிவாவைப் பார்த்து கண் ஜாடை காட்டினார், எப்பேர்பட்ட ஆள் இவர், எவ்வளவு ஈசியாக எல்லோரையும் சரி கட்டுகிறார், என்று நினைத்தார்கள்

அவர்கள் இருவரும் பேசுவற்கு போனார்கள் வெட்கப் பட்டுக்கொண்டே, அப்போதுதான் ,சிவாவின் அசிச்டன்ட் வந்து ஒரு பை நிறைய புடவைகள் ஷர்ட்ஸ், இன்னும் என்னென்னவோ வருபவர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்தான்,சிவா பேசிக் கொண்டிருப்பதால் அவன் காத்துக் கொண்டிருந்தான்

’ எனக்கு உங்களை பிடித்திருக்கிறது, உங்களுக்கும் என்னைப் பிடித்தால் கல்யாணம் செய்துக் கொள்ளலாம் என்றான் சிவா

அவளோ,’ பிடித்திருந்தால் மட்டும் போதுமா? நமக்கு ஒத்து வரவேண்டுமல்லவா?’ என்றாள்

அவன்,’ அப்படியென்றால், எனி கண்டிஷன்ஸ்?" என்றான்

‘கண்டிஷன்ஸ் இல்லை, டெர்ம்ச்ன்னு வச்சுக்கலாம்?’ என்றாள்

‘சரி, நீ என்ன சொல்லணுமோ சொல்லு,’ என்றான் சிவா

‘ஒன்றுமில்லை கல்யாணத்துக்கு பிறகும் நான் வேலைக்கு போகணும், அந்த பணத்தை என் பெற்றோர்களுக்குக் கொடுக்கணும் பாதி கொடுத்தால் போதும் இன்னும் பாதி உங்களிடம் கொடுத்து விடுவேன்’ என்றாள்

‘அப்புறம் என்றான்? அப்புறம் எங்களால் ரொம்ப சீர் செய்யமுடியாது, நான் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருக்கிறேன், கொஞ்சமாக நகை சேர்த்து வைத்திருக்கிறேன், உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்று தெரியாது’ என்றாள்

‘அவ்வளவுதானே நான் பயந்துவிட்டேன்,’ என்றான்

அவள்,’ என்ன பயந்தீர்கள்’ என்று கேட்டாள்

‘இல்லை, என்னை நீ உங்க வீட்டோடு மாப்பிளையாக வந்து விடு என்று சொல்வாயோ என்று,’ அவளைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே,’சரி நான் சொல்கிறேன் கேள் உன் வீட்டுக்கு முழு பணத்தையும் கொடு எனக்கு ஒன்றும் இல்லை, எனக்கு எந்த சீரும் வேண்டாம் நீயே எனக்கு சீர், உன்னைவிட வேறென்ன, உனக்கு நானே கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் செய்து கொடுக்கிறேன், இப்போ சம்மதம்தானே’ என்றான் சிவா

‘அவளும் சிரித்துக் கொண்டே, எனக்குச் சம்மதம்தான்’ என்றாள், ‘சரி சீக்கிரமே என்னோடு வந்து சேரு’ என்றான் சிவா

அவளோ ‘அது உங்களிடம் தான் இருக்கிறது,’

‘அப்போ…. நாம் இப்பவே கல்யாணம் செய்துக் கொள்ள, நான் ரெடி நீ எப்படி?’ என்றான்

‘அவசரத்தை பாரு’ என்றாள் அவள்

‘ஆமமாமாம், முதல் முதலில் உன்னோடு எப்போ மோதினேனோ, அப்போலேந்து தூங்கவேயில்லை தெரியுமா? நீ பேசுவே’ என்றான் சிவா

பேசிக் கொண்டே அவர்கள் அருகில் வந்தார்கள், அப்போது சிவாவின் பெற்றோர்கள் சாப்பிட்டுவிட்டு வந்துக் கொண்டிருந்தார்கள்.

சிவாவை விட்டு,’அவர்களைக் கூப்பிடு சிவா’ என்றார் சுந்தரம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.