(Reading time: 11 - 22 minutes)

வர்களும் வந்தனர்

சுந்தரம், இருவர் முகத்தையும் பார்த்தார், இருவரும் தலையை ஆட்டினர்சரி என்று சுந்தரம் சிவாவின் பெற்றோருடன் பேசினார், எல்லோரையும் அறிமுகப் படுத்தினார், அவர்களுக்கும் அவர்கள் மருமகளை பிடித்தது

எல்லோருக்கும் பிடித்திருந்தது, கல்யாணம் இன்னும் இரண்டு வாரத்தில் என்று முடிவு செய்தார்கள்,

சுந்தரத்திடம் இரண்டு குடும்பத்தாரும் நன்றி சொன்னார்கள்

‘நீங்க நன்றி சொல்ல வேண்டியதில்லை அவன் என் சகோதரன், அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் அதனால் எனக்கும் கடமை இருக்கு என்ன சிவா?’

‘முடிவாகிவிட்டது என்ஜாய்’ என்றார் அவனுக்கு கண்ணடித்து

ராதா தன் புருஷனை ஒரு கர்வத்துடன் பார்த்தாள்,’ என்ன அப்படிப் பார்க்கிறாய் என் பொண்டாட்டி?’ என்று கேட்டார் தன் காதல் மனைவியை பார்த்து சிரித்துக் கொண்டே, சுந்தரம்

‘இல்லை உங்களால் மட்டும் எப்படி, இப்படி இருக்கமுடியறது? நீங்க முதலாளி, அவர் செரட்டரி என்று தோன்றாமல் எப்படி அவருக்கு கல்யாணம் பேசி முடித்திருக்கீங்க, ஒரு நண்பனைப்போல்’ என்று கேட்டாள் ராதா,தன் காதல் கணவனின் அந்த சிரிப்பில் மயங்கிக் கொண்டே

‘முதலாளி என்றால் ஒரு நண்பனாக தன்னுடன் வேலை பார்பவரிடம் இருக்கக் கூடாதா? அப்புறம், அவனை நான் என்றுமே ஒரு வேலை ஆள் போல் நினைச்சதில்லை ,அவன் செக்ரட்டரி, என்னோடையே எ ப்பவும் இருக்கிறான் எனக்காக எந்நேரமும் வேலை செய்கிறான், அதனால் அவன் மேல் எனக்கு தனி பாசம், உனக்குத் தெரியுமா அவனுக்கும் அந்த பாசம் என் மேல் உண்டு, அதுமட்டுமில்லை, உன்னை சந்தோஷப் படுத்தவும் தான் இது, என்றார்

‘ஏன்? என்னை சந்தோஷப் படுத்த,’ என்று கேட்டாள்

'நீ தானே இன்று காலையில் அவர்கள் செய்த உதவிகளைப் பற்றி கூறினாய், உனக்கும் சந்தோஷம் இதனால், அதுமட்டுமில்லை, அவர்கள் ஒருவருக்கொருவர் பிடித்திருந்தது ஏற்கனவே, அதை நான் கவனித்தேன் அதனால் உடனே கூப்பிட்டு முடித்து விட்டேன். ஸோ, ஆர் யு ஹாப்பி?' என்று கேட்டார் சுந்தரம்

'வெரி மச்' என்றாள் ராதா

'சரி நாம் சாப்பிட போகலாம், பசிக்கிறது' என்றார் சுந்தரம்

'ஆனந்தா வா போகலாம், ரம்யா, ரஞ்சி வா, சீனு, சுமதி வாங்க சாப்பிடலாம்?' என்று எல்லோரையும் சாப்பிட கூப்பிட்டாள் ராதா அவள் முகம் சந்தோஷத்தை காட்டியது.

சீனுவும் ரஞ்சனாவும் மெதுவாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள், அதைப் பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரம்,ராதாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும் சுற்றி என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தார்

எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தனர், சிவாவும் சுமதியும் பக்கத்தில் உட்கார்ந்தனர், ஆனந்துக்கு மனதில் எப்படி ரம்யாவிடம் பேசுவது, அவள் முகத்தையே நிமிர்ந்து பார்க்க மாட்டேங்கிறாளே, என்ற கவலையில் இருந்தான், அவனை கூப்பிட்டு, ராதா பக்கத்தில் உட்கார வைத்தார் சுந்தரம்

மனதில் இவன் ஏன் இப்படி இருக்கிறான், ஏதோ அவன் மனதில் ஓடுகிறது ஒருவேளை, தான் நினைப்பது போலிருக்குமோ? என்று யோசித்துக் கொண்டிருந்தார்

ரம்யாவைக் கூப்பிட்டு இங்கே உட்கார், என்றார் ஆனால் அவளோ, உட்காராமல்,முழித்தாள், பிறகு ரஞ்சனாவையும் சீனுவையையும்,ரம்யாவிற்கு பக்கத்தில் உட்காரச் சொன்னார்,

ஆனந்தன் , அப்பாவைப் பார்த்த பார்வையில், நன்றி இருந்தது.

பக்கத்தில் உட்கார்ந்த ரம்யா நிமிர்ந்து பார்க்காமல், தலைக் குனிந்து உட்காந்திருந்தாள்,அவளிடம் ஆனந்தன் 'ஹாய் ரம்யா,’ என்றான்,

அவளுக்கும், அவனை பார்க்க வேண்டும் என்ற ஆசை, எப்படிப் பார்ப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள், அவன் கேட்டவுடன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்து 'ஹாய்' என்றாள்,

அவனோ 'கூல், ஏன் இப்படி பயப்படறே? ஐ ஆம், ஆனந்த், பீல் ப்ரீ வித் மீ,' என்றான்

அவள் ஒரு சிரிப்பு சிரித்து, தலை ஆட்டினாள். அவன் முகம் இப்போது கொஞ்சம் சரி ஆகியிருப்பதை பார்த்த சுந்தரத்தின் சந்தேகம் இப்போது உறுதி ஆகிவிட்டது, சரி இவள் இருந்தா, இவன் சந்தோஷமாக இருப்பான் என்று முடிவு செய்தார்.

‘ரம்யா என்ன படிக்கிற?எந்த காலேஜ்?’ என்று கேட்டான்

அவளும் 'நான் BBA,’என்று கூறி அவள் காலேஜ் பேரைச் சொன்னாள். குட் ' MBA பண்ணற ஐடியா இருக்கா’ என்று கேட்டான்

'தெரியாது, இன்னும் முடிவு பண்ணலே, அக்கா என்ன சொல்றாளோ அப்படி செய்வேன்' என்றாள்.

‘ஸோ, உங்க அக்கா என்ன சொன்னாலும் செய்வாயா?’ என்றான்

‘ம்ம்' என்றாள் அவள்

அவர்கள் சாப்பிட்டு முடித்தனர், எல்லோரும் கிளம்பினர், சீனுவிடம் ‘நீயும் வீட்டுக்கு வாயேன் உனக்கு வேறு முக்கியமான வேலை ஒன்றும் இல்லையென்றால்’ என்றார் சுந்தரம்

அவனும் இதற்காகவே காத்திருந்தால் போல் ‘நான் வறேன் சார்’ என்றான், அவர் கூப்பிட்டது ராதாவுக்கும் சந்தோஷம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.