(Reading time: 11 - 22 minutes)

நானே கூப்பிடனுன்னு நினைச்சேன், நீ முந்திண்டுட்ட அப்பா’ என்றான் ஆனந்தன் ராதாவைப் பார்த்துக்கொண்டே,அவள் தன் மகனின் மீது சாய்ந்துக் கொண்டாள்.

சீனுவுக்கு இதைப் பார்த்தபோது மிகுந்த ஆச்சர்யம், ராதா ரொம்ப நல்லப் பெண், தாங்கள் சின்ன வயதிலிருந்து பழகினாலும், தள்ளியிருந்தே பழகுவாள், ஆனால் அவன் பார்ப்பது ஒரு புது ராதாவை இவ்வளவு ப்ரீயாக ஒரு இளைஞனிடம், பழகுகிறாள் என்றால்? ஒன்றும் புரியவில்லை, இவ்வளவு பெரிய மகனின் தந்தையை, என்னதான் அவர் பார்பதற்கு, ரொம்ப சின்னவராக தெரிந்தாலும், அவ்வளவு பெரியவரை திருமணம் செய்துக் கொண்டிருக்கிறாள், இவன் அவளை அம்மா என்று அழைக்கிறான், அதில் இவள் சந்தோஷமாக சிரிக்கிறாள்,என்ன ஒரு ஆச்சர்யம்!

என்று அவன் போக்குக்கு யோசித்துக் கொண்டிருந்தான், அவன் முதுகில் ஒரு அடி விழுந்தது, 'எங்கே போய் விட்டீர்கள் என் ராசா?’ என்று ரஞ்சி தான் கேட்டாள்

‘ஏய், ஏன் என்னை அடிக்கிற?’

‘நான் எவ்வளவு முறை உன்னைக் கூப்பிட்டேன் நீ ஏதோ உலகதுக்க்கு போய்விட்டாய் அதான் நம்ம வேலையைக் காண்பித்தேன்,’ என்றாள்

என்ன ஐயாவுக்கு யோசனை 'உன் கல்யாணமா?' என்றாள் ரஞ்சி

‘நீ வேற, எனக்கு இன்னும் வேலையே கிடைக்கல, அதுக்குள்ளே கல்யாணமா?' என்றான் சீனு

‘பின்ன வேறென்ன யோசனை?’ என்றாள் ரஞ்சி

‘எல்லாம் நம் ராதாவைப் பற்றிதான், எப்படி இந்த கல்யாணம், எப்படி இவ்வளவு பெரிய பையனை, தன் மகனாக ஒத்துக் கொண்டாள், அவனிடம் இன்று காலைதான் பார்த்தவள் இவ்வளவு அன்பாக இருக்கிறாளே, அது எப்படி என்று யோசிக்கிறேன்’, என்றான்

‘சரி, நாம் போகலாம் அவர்களெல்லாம் கிளம்பிவிட்டார்கள் ,’ என்றாள் ரஞ்சி

சுந்தரம், ராதாவை காரில் ஏற்றினார், தானும் பக்கத்தில் உட்கார்ந்தார்

ஆனந்தன்,’ நான் அந்தக் காரில் வரேன் என்றான், ஆனால் சுந்தரமோ, இல்லை ஆனந்தா நீ எங்களுடன் இப்போது வர வேண்டும் நாம் ஒரு குடும்பமாகத்தான் வீட்டுக்கு போகவேண்டும் வா,’ என்றார் அழுத்தமான குரலில், ஆனந்துக்குத் தெரியும் அப்பா அப்படிப் பேச மாட்டார், பேசினால் அதில் ஏதோ அர்த்தம் இருக்குமென்று, ஒன்றும் பேசாமல் ஏறிக் கொண்டான், ராதாவோ, அவரை நிமிர்ந்து பார்த்தாள், அவர் குரல் அவளுக்குப் புதிது, அவர் முகம் சிவந்திருந்தது, ஒரு நிமிஷம்தான் அவர் சரியாகி விட்டார், உடனே அவளைப் பார்த்து சிரித்து, அவள் வகிட்டில் ஒரு முத்தம் வைத்தார்.அவளுக்கு ஒரே ஆச்சர்யம், இது தெரிந்துக் கொள்ள வேண்டியது என்று அவள் மனதில் எண்ணிக் கொண்டாள்.

ரம்யாவோ அவன் ஏன் நம்முடன் வரவில்லை என்று ஏமாற்றம் அடைந்தாள், ஆனால் உள் மனமோ நீ அவனை எப்படி நினைக்கலாம் அவன் உன் அக்காவின் மகனாவான், என்றது, அவளுக்கு இதை நினைத்து கண்ணீர் வந்தது அடக்கிக் கொண்டாள்.

வீடு வந்து சேர்ந்தனர், அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே வரச் சொன்னார்கள், அவர்கள் மூவரும் உள்ளே வந்தவுடன் மற்றவர்களும் வந்தார்கள். ரம்யா அங்கிருந்து மாடிக்கு சென்றுவிட்டாள், யாரும் அவள் போவதைப் பார்க்கவில்லை,

எல்லோரும் புது தம்பதியருக்கு பால், பழம் கொடுக்க வேண்டும் என்று அவர்களை சோபாவில் உட்காரச் சொன்னார்கள், வெங்கடேசனின் மனைவி பால் பழத்துடன் வந்தாள், அவளுக்கு முதல் முறை அனுவிற்கு பால் பழம் கொடுத்தது ஞாபகம் வந்தது, அவளுக்கு மட்டுமில்லை, அனுவிற்கும், சுந்தரத்திற்கும் கூட ஞாபகம் வந்தது, ‘மன்னி,’ என்றாள் ராதா, அவளும் கண்ணில் நீர் வழிய ‘அனு’ என்று விசும்பினாள், சுந்தரத்திற்கும் கண்ணில் நீர் வழிந்தது

‘என்ன இந்த பெரிஸ் எல்லாம் பொட்டுன்னு பொட்டுன்னு அழுத்துங்க?’ என்று ரஞ்சி மெதுவா சீனு காதுல சொன்னா

'ஹாய், சும்மா இரு, ராதா பார் அழறா,’ என்றான்

'அவள் அன்னிலேர்ந்து இப்படித்தான், இது உனக்கு புதுசு எனக்கில்லே,' என்றாள்

அப்போ ஏதோ கதை இருக்கு, 'முட்டாள்' என்றான் சீனு,

அவள் முதலில் ஆனந்தனைக் கூட்டு 'உங்க, அப்பா, அம்மாவுக்கு குடுடா'என்று தன் கையில் இருந்த தட்டை அவனிடம் கொடுத்தாள்

அவன் சுற்றி ரம்யாவைத் தேடினான் அவளைக் காணோம், முகம் வாடியது, அதைப் பார்த்த சுந்தரத்திற்கு மனசு கஷ்டமாக இருந்தது, சுற்றி அவரும் தேடினார் அவள் கண்ணில் படவில்லை,

ரஞ்சனாவை நோக்கி, ரம்யா எங்கே என்று கேட்டார், ஆனந்தன் புரிந்துக் கொண்டான் அப்பாவிற்கு தெரிந்துவிட்டது தன் மனம் என்று நினைத்தான், அதற்குள் ரஞ்சி ‘அவள் மாடியில் இருக்கலாம்’ என்றாள்,’ இருந்தா கூட்டி வா,’ என்றார்

பிறகு தன் மகனை நோக்கினார், கண்களால், நன்றி சொன்னான், அவர்கள் இருவருக்கும் தன் கையால் ஊட்டினான், ஆனந்தன், ராதாவிற்கு ஊட்டும்போது அவனிடமிருந்து வாங்கி தன் கையால் அவனுக்கு, அவள் ஊட்டிவிட்டாள், அவன் அவளைக் கட்டிக் கொண்டான், இதுக்கு நான் எவளவு கொடுத்துவைதிருக்கிறேன் அம்மா,என் வாழ்க்கையில் எனக்கு அம்மா கிடையாதுன்னு நினைச்சேன், ஆனா என் அம்மா கையால் இன்னிக்கு.....இது போதம்மா எனக்கு’ என்றான்

'ஆனால் எனக்கு இது போதாதுடா.... 'என்றாள்

ஆனந்த் ராதாவைக் கட்டிக் கொண்டான், சுந்தரம் ராதாவையும் தன் மகனையும் சேர்த்து கட்டிக் கொண்டார், 'சரி, நீ உங்க அம்மாக்கு கொடுடா' என்று அவர்களை திசைத் திருப்பினார்

‘இனி அழுகையே கிடையாது, வெறும் சிரிப்புதான் இருக்கணும், ‘என்று கூறி

‘எங்கப்பா அந்த காமேடியனைக் கூபிடப்பா’ என்றார் சுந்தரம்

‘யார்?’ என்று எல்லோரும் கேட்டனர்

‘அட நம்ம ரஞ்சி எங்கே? ‘என்றார் அவர்

எல்லோரும் கொல்லென்று சிரித்தனர்

‘பெரிசுக்கு ஆனாலும் லொள்ளு ஜாஸ்தி’ என்று அவள் எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கவே கொஞ்சம் குரல் உயர்த்தியே சொன்னாள், ஆனால் அவளைப் பார்த்தவுடன் எல்லோரும் அமைதியாகி விட்டனர் அந்த அமைதியான நேரத்தில் அவள் சொன்னது எல்லோர் காதிலும் விழுந்தது,

தொடரும் 

Episode # 16

Episode # 18

{kunena_discuss:1005}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.