(Reading time: 11 - 21 minutes)

ராதா சுத்தி பார்த்தாள் தன் தங்கைகள், அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள், ரெண்டு பேருமே, அந்த பட்டுப் புடவையில் ரொம்ப அழகாக இருந்தார்கள், அவர்களை கூப்பிட்டாள், பரவாயில்லை என்று ஜாடை காட்டினர், அவள் இறங்கிப் போனாள் பின்னாடியே சுந்தரமும் போனார் அவர்களையும் ,அம்மா, அப்பாவையும் கையோடு அழைத்து வந்தார்கள், தங்களுடன் நிற்க சொன்னார் ஒரு பக்கம் வெங்கடேசன், அவர் மனைவியையும் தங்களுடன் நிற்கச் சொன்னார்

முதலில் மாலையை கொடுத்தார்கள், சுந்தரம்,ஆனந்தனிடம் கொடுக்கச் சொன்னார், ரஞ்சனாவையும், ரம்யாவையும் முன்னாடி வந்து நில்லுங்கள் என்றார்,அவர்களும் வந்து நின்றார்கள், ஆனந்தனிடம், ‘மாலையைக் குடப்பா’ என்றார் வெங்கடேசன், அவன் அப்பாவிடமும் அம்மாவிடமும் கொடுத்தான், அவர்கள் சிரித்துக் கொண்டே வாங்கினார்கள் சுந்தரமும், ராதாவும் மாலையை ஒருவருக்கொருவர் போட்டுவிட்டனர், ஆனந்தன் மாலை மாற்றிக் கொள்ளுங்கள் என்றான் சிரித்துக் கொண்டே,

ராதா வெட்கப் பட்டுக் கொண்டே ஆனந்தனைப் பார்க்க அவன் ‘அங்கே பாரும்மா அப்புறம் உன் புருஷனுக்கு என் மேலே கோபம் வந்துடும்’ என்றான் சிரித்துக் கொண்டே,

‘ஆமாம், என்னைப் பாரு,’ என்றார் சுந்தரம்

ரம்யாவிற்கும், ரஞ்சனாவிர்க்கும், ஷாக் அடித்தார் போல் பார்த்துக் கொண்டார்கள், என்ன இது ஜோடி மாறிப் போய்விட்டதர என்ற சந்தேகம்,தாலியை, ராதா அப்பா, அம்மாவிடமும் கொடுக்க சொல்லி விட்டு, வெங்கடேசனும் அவர் மனைவியும் ஆசீர்வாதம் செய்து ஆனந்தனிடம் கொடுத்தார்கள், அவன், அப்பாவிடம் கொடுத்தான்.

சுந்தரம் அவனைக் கட்டிக் கொண்டு, அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து அதை வாங்கிக் கொண்டார், அவன் அம்மாவிடம் வந்து அவளைக் கட்டிக் கொண்டான், அவளும் அவனுக்கு முத்தம் கொடுத்து

'தேங்க்ஸ், ஆனந்தா,’

‘ தேங்க்ஸ் ம்மா,' என்று சொல்லும்போது அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது, மூன்று பேருக்கும் அதே போல்தான் இருந்தது, இதைக் கண்ட வெங்கடேசனுக்கும் அவர் மனைவிக்கும் கண்ணீர் வந்தது, அவர்களுக்கு, அனு இறந்த போது, சுந்தரம் தாங்கள் மூன்று பேரும் ஒன்றாக காரில் வருகிறோம் என்று அவளிடம் பேசிக் கொண்டே வந்தது ஞாபகம் வந்தது வெங்கடேசன் மனைவிக்கு, இன்னும் தேம்பி அழுதாள், ‘என்ன இது’ என்று அடக்கினார்வெங்கடேசன், சுந்தரம், ராதாவின் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டு, அவளைக் கட்டிக் கொண்டு அவரும் தேம்பினார்.

‘ரொம்ப தேங்க்ஸ் கண்ணம்மா, நானே என்னைப் பயித்தியம் போல நீ வருவாய் என்று நம்புகிறோமே என்று நினைத்தேன், ஆனால் நீ வந்து நான் பயித்தியமில்லை, உண்மையான காதல் இருந்தால் அது என்றென்றும் சாகாது என்று நிரூபித்தாய், இது ஒவ்வொரு உண்மையான காதலர்களும், கணவன் மனைவியும் தங்கள் காதலில் நம்பிக்கை வைக்க வேண்டுமென்று நம் மூலம் அறிந்துக் கொள்வார்கள்.’

ரஞ்சனாவுக்கும், ரம்யாவுக்கும் ஒன்றும் புரியவில்லை ஏன் சுந்தரம் சார் இப்படி தேம்பி அழுகிறார், ஆனந்தன் வெங்கடேசன் அங்கிள், அந்த ஆண்டி, எல்லோரும் ஏன் தேம்பி அழுகிறார்கள் என்று புரியவில்லை, அதே போல் சீனுக்கும், சுமதிக்கும் அவர்கள் அப்பா அம்மாவுக்கும் புரியவில்லை, எல்லோரும் என்ன நடக்கிறது, என்று பார்த்தார்கள்

ராதாவின் பெற்றோர்களோ யாருக்கோ கல்யாணம் போல் ஒன்றும் பற்று இல்லாமல் இருந்தார்கள்,

ராதாவைக் கட்டிக் கொண்டு அவள் தலை உச்சியில் முத்தம் கொடுத்தார் சுந்தரம் அதே போல் ஆனந்தனும் அவளைக் கட்டிக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்

பிறகு வெங்கடேசனும் அதைப் போல் அவளைக் கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்தார்,’ கண்ணா என் பரிபூர்ண ஆசீர்வாதம் நூறாண்டு உன் புருஷனுடன் சகல சந்தோஷத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார், இதோ பார் அனு, உன் புருஷனைப் போல் எந்த ஒருவரையும் பார்க்க முடியாது, உலகத்திலிருக்கும் அத்தனை சந்தோஷத்தையும் இருவரும் இனி அனுபவிக்க வேண்டும் நூறாண்டுகாலம் உன் புருஷனுடன் வாழவேண்டும்,’ என்றார் கண்ணில் ஆனந்தக் கண்ணீருடன்

அப்பா அம்மா காலில் விழுந்தார்கள்,எங்களுக்கு இது அதனையும் கனவு மாதிரி இருக்கு, ஒன்றும் புரியவில்லை, நீ எவ்வளவு வேதனையை அனுபவித்திருக்கிறாய் என்று நீ சொன்னவுடன் தான் எங்களுக்கு தெரியும், எல்லோரும் சொல்கிற மாதிரி நீங்க இருவரும் நூறாண்டு காலம் உன் பிள்ளை குடும்பத்தோடு எல்லாவித சந்தோஷத்தோடும் வாழ வேண்டும். நீ உன் குடும்பத்தோடு சேர்ந்தது எங்களுக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா? இந்த ஒரு அருமையான குடும்பத்துக்காக நாங்கள் உன்னை வளர்த்து பெரும் பாக்கியம் பெற்றோம் என் செல்லமே,’ என்றார், அவள் அப்பா கண்ணில் நீருடன்.

‘என் பெண் நீயும் அந்தக் குழந்தையும் அழுதது, ஆனந்தக் கண்ணீர், ஆனால் நாங்கள் உறைந்து விட்டோம் என் கண்ணே,’ என்றார்,

‘அவனிடம், நீ தாத்தாவைப் பார்த்தாயா?’ என்றார் சுந்தரம்

‘இல்லைப்பா, நான் பார்கலை, சாரி தாத்தா உங்களை நான் பார்க்கவில்லை,பாட்டி என்று ரெண்டு பே ரையும் கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்து அவர்கள் காலில் விழுந்தான், நீ, என்றென்றும் உன் பெற்றோர்களுடன் இதே சந்தோஷத்துடன் வாழவேண்டும் என் கண்ணா’ என்று ஆசிவழங்கினார் , தாத்தா ராஜேந்திரன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.