(Reading time: 11 - 22 minutes)

ப்போதைக்கு அவளைக் குழப்பக் கூடாது, என்று தானும் அவளுடன், உள்ளே போனாள், இன்னும் அக்கா அண்ட் கோ வரவில்லை, இன்னும் ஆனந்தனுடன் ஆனந்தக் கண்ணீர் வழிந்துக் கொண்டிருக்கிறது போல் இருக்கிறது, சரி பார்ப்போம், என்று ரம்யாவை விரட்டினாள், ‘போ, மாடிக்குப் போய் உன்னைச் சரி செய்துக் கொண்டு வா,’ என்று தானும் அவளுடன் சென்றாள் ரஞ்சனா

சுந்தரம்தான், ராதாவைக் கட்டிக் கொண்டு போதும் கண்ணம்மா நாம் மூன்று போரும் நிறைய அழுதுவிட்டோம், முகத்தை சரி செய்துக் கொள்ளுங்கள்,போ ஆனந்தா, இங்கேயே சரி செய்துக் கொள்,’ என்று ராதாவுடன் தானும் சென்று முகத்தை அலம்பிக் கொண்டு திரும்பி அவளை மேக்கப் போடச் சொன்னார், வெளியே வந்த ஆனந்தன், அப்பாவிடம், ‘நான் உங்களை தப்பா பேசிட்டேன்ப்பா, ரொம்ப சாரி,’

‘இல்லப்பா நீ யாரையோ கல்யாணம் பண்ணிக்கிறேன்னதும், நீ என்னை விட்டு ரொம்ப தூரம் போய்டுவியோ என்று தான் அப்படியெல்லாம் பேசிட்டேன், நான் நினைக்கவே இல்லை இது எப்படிப்பா சாத்தியம்? அது மட்டுமில்லை அவங்களப் பார்த்தால் ரொம்ப சின்னவ மாதிரி இருக்காங்களேப்பா,’என்றான்

‘ஆமாம், அவ உன்னைவிட சின்னவ,’ என்றார் சுந்தரம்

‘அப்படியா? அப்ப, எப்படிப்பா, உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னாங்க?’

‘அதை நீ உங்க அம்மாவைத்தான் கேக்கணும்? அப்பா, நான் அம்மான்னு எப்படிப்பா கூப்பிடறது? என்னை விடச் சின்னவங்களாச்சே?’ என்று கேட்டான்

‘அவளையே கேளு நீ எப்படிக் கூப்பிடனும்னு,அவ உன் மேலே ரொம்ப பாசமா இருக்கா தெரியுமா? உன் பேரை சொன்னாலே அவள் முகத்திலே ஒரு பூரிப்பு தெரியுமா அதைப் பார்த்து நானே வியந்திருக்கிறேன்’ என்றார் சுந்தரம்

‘அது எப்படிப்பா என்னை தெரியும், நானே அவங்களை போட்டோவில் தான் பார்த்திருக்கேன், எப்படிப்பா?’ என்று கேட்டான் ஆனந்தன்

‘அவள் சினிமா பார்பதுப் போல் அவள் மும் ஜென்மத்தை பார்த்திருக்கிறாள்’ என்றார் சுந்தரம்

அவன் சிரித்துக்கொண்டே 'அப்பா நான் சீரியஸ் ஆக பேசறேன் நீ காமடி பண்ணற,’ என்றான் மகன்

‘ நானும் சீரியசாக சொல்றேன், உங்க அம்மா என் கிட்ட சொன்னதைத்தான் சொல்றேன், அவள்தான் நான் கண்ணிலேயே படவில்லை என்றால் கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன், உங்கள் நினைவிலேயே வாழ்ந்திருப்பேன் என்று சொன்னாள்,’ என்று கூறினார்

ராதாவும் வெளியே வந்தாள், அழகே உருவாக,அவள் வருவதை இருவரும் ரசித்துக் கொண்டிருந்தனர், சுந்தரம் அவள் அருகில் போய், அவளுக்கு தலை உச்சியில் முத்தம் கொடுத்து, அனைத்துக் கொண்டார், மகனோ அவர்களை ரசித்துக் கொண்டிருந்தான்,

ராதா, ஆனந்தனை கண் காண்பித்து, இருக்கிறான் என்றாள், ‘அவன் இருந்தால் என்ன, அவன் அமெரிக்காவில் இருக்கிறவன், அது மட்டுமில்லை நம் இருவரையும் ஒன்று சேர பார்பதுதான் அவன் ஆசையும் வாடா,’ என்று அவனையும் கூப்பிட்டார்

அவனும் சிரித்துக் கொண்டே வந்தான், ‘சரி வாங்க போய்ச் சாப்பிடலாம், எல்லோரும் காத்திருப்பார்கள்’ என்று சுந்தரம் சொன்னார், எனக்கு வெட்கமாக இருக்குது என்றாள் ராதா

‘ஹாய், நான் இருக்கும் போது உனக்கு என்ன வெட்கம்? அது சரி உன் மகனைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே அவன் எப்படி இருக்கிறான்? நீ எதிர்பார்த்தது போல் இருக்கிறானா? ம், ஒன்றும் சொல்லவில்லையே,’ என்று சுந்தரம் கேட்க

‘அவனுக்கு என்ன? அவன் அப்பா போல அச்சு அசல் மாறாமல், மிகவும் அழகாக இருக்கிறான், உங்களை சின்ன வயதில் பார்பதுப் போல் இருக்கிறது,’என்று அவள் சொல்லவும்,

 'அது சரி, எப்படியும் என்னை கிழவன் என்று சொல்லி விட்டாய்' என்று சுந்தரம் கேட்கவும்

‘ஐயோ, உங்களை அப்படி சொல்ற மாதிரியா இருக்கீங்க? இன்னும் இளமையா... நீங்க சொன்னாத்தான் உங்க வயது தெரியும் என்ன ஆனந்தா சொல்றே? உன்னை நான் அப்படி கூப்பிடலாம் இல்லையா?’ என்று அவள் ஆனந்தனிடம் கேட்கவும், “அவளைக் அனைத்துக் கொண்டு இது எனக்கு வரம், இத்தனை வருடங்களாக வெறும் போட்டோவிலேயே பார்துண்டிருந்த இந்த அம்மாவைப் பார்த்தவுடன், நான், எனக்கு பெரிய வரம் கிடைத்தால் போல் நினைத்திருக்கிறேன், நீங்க இப்படி கேக்கறீங்க?’ என்றான் ஆனந்தன்

‘ஏன் உங்க அப்பாவைக் கூப்பிடற மாதிரி என்னை அம்மான்னு கூப்பிட மாட்டியா ஆனந்தா? அதுக்காக நான் காத்துண்டிருக்கேன்,’ என்று அவள் கூறிய போது கண்ணிலிருந்து ஒரு சொட்டு விழுந்தது அதைப் பார்த்த ஆனந்தன், ‘அவளை அனைத்துக் கொண்டு, நீ என்னை விடச் சின்னவள் என்று சொன்னார் அதனால் எப்படி கூப்பிடறது, உனக்குப் பிடிக்குமா என்று நினைத்திருந்தேன்,’ என்று அவன் சொன்னதைக் கேட்டு

‘நான் உன்னைவிடச் சின்னவளாக இருந்தாலும் உங்கள் இருவருக்காகவும் இன்னொரு பிறவி எடுத்து வந்திருக்கிறேன், இனி வரும் வாழ்க்கையில் உங்களுக்காக வாழப் போகிறேன், அதனால் நான் உன் அம்மாதான்’ என்று உணர்ச்சி பூர்வமாக கூறினாள்

‘நீ என்னை அம்மா என்றே கூப்பிடு, என்ன சொல்றீங்க? ‘

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.