(Reading time: 18 - 36 minutes)

16. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ

Ennul nirainthavane

தாலாட்டும் காற்றே வா ,
தலை கோதும் விரலே வா ,
தொலை தூர நிலவே வா ,
தொட வேண்டும் வானே வா ,
கண்ணுக்குள் கண் வைத்து ,
கண் இமையால் கண் தடவி ,
சின்ன தொரு சிங்காரம் ,
செய்யாமல் போவேனோ ?
 
பேச்சியழந்த வேளையிலே ,
பெண் அழகு என் மார்பில் ,
மூச்சு விடும் வாசனையை ,
நுகராமால் போவேனோ
 
உன் கட்டு கூந்தல் காட்டில் ,
நுழையாமல் போவேனோ ?
அதில் கள்ளத் தேனைக் கொஞ்சம் ,
பருகாமல் போவேனோ ?
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை ,
ஒலிப்பதிவு நான்  செய்ய மாட்டேனோ ?
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை ,
ஒலிப்பதிவு  நான் செய்ய மாட்டேனோ ?
நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில் ,
அதை உனக்கு ஒலி பரப்ப மாட்டேனோ ?
 
என்னுயிரே நீதானோ ?
என்னுயிரே நீதானோ ?

தர்வாவிடம் அவ்வாறு பேசிவிட்டு தன் வீட்டிற்கு சென்று மகிக்கு தேவையான சில பொருட்களை  எடுத்து கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பினான் ராம்..அங்கே பரணியும் சாக்ட்சியும் மகியோடு பேசிக் கொண்டிருந்தனர்..

என்ன அண்ணா அண்ணிய தனியாவிட்டுட்டு எங்க போனீங்க??அவங்களுக்கு போர் அடிக்கும் தான..-சாக்ட்சி..மகியின் முன் இயல்பாக இருக்க முயற்சிக்கிறாள் என்று புரிகிறது தான்..

ம்ம்ம் நா இங்கேயே இருந்தா உங்க அண்ணிக்கு வேண்டியதெல்லாம் யார் எடுத்துட்டு வருவா??

அப்படி சொல்லு மச்சான்..பாத்தியா என் தங்கச்சி மேல எவ்ளோ அக்கறைநு.ஆம்பளைங்க நாங்க எது பண்ணாலும் ஒரு அர்த்தம் இருக்கும்..-பரணி..

அண்ணிக்கு உடம்பு முடியாததால நீங்க இவ்ளோ பேச்சு பேசிட்டு இருக்கீங்க..அண்ணி மட்டும் தெம்பாகட்டும்..அப்பறம் இருக்கு இல்ல அண்ணி..

புன்னகையே பதிலளித்தவள்.,.ராமையே கவனித்துக் கொண்டிருந்தாள்..ராம் பரணியிடம் ஏதோ கூறிவிட்டு இந்தா மகி இதுல உன் ட்ரெஸ்லா இருக்கு மாத்திட்டு ரெடியாயிரு நாங்க போய் டிஸ்சார்ச் பார்மாலிடீஸ்லா முடிச்சுட்டு வந்துரோம்..வா பரணி என்றவாறு வெளியே சென்றான்..

மச்சான் எங்கடா போய்ட்டு வர??-பரணி

அதர்வாவ பாத்துட்டு வரேன்டா என அங்கு நடந்ததை கூறினான்..

என்ன ராம் நீ அவசரப்பட்டு இப்படி சொல்லிட்டியே கொஞ்சம் நிதானமா பண்ணிருக்கலாம்டா..

இல்ல பரணி நல்ல யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்தேன்..என் மகியை காயப்படுத்தி எனக்கு பயத்தை காட்டினான்..இனி நா அவனுக்கு பயம்னா என்னனு காட்டப் போறேன்..இப்படி ஒரு கண்ணுக்கு தெரிஞ்ச எதிரி இருக்கான்ற நினைப்பே அவனை பலவீனமாக்கும்டா..அத வச்சே அவன தோக்கடிக்குறேன்..சரி நா மகிய வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்டா..நீ சாக்ட்சிய விட்டுட்டு வீட்டுக்கு வா..

இல்லடா நா நாளைக்கு வரேன் மகிக்கும் கொஞ்சம் டைம் வேணும்டா..நாளைக்கு பாப்போம்..எதுவும் வேணும்னா கால் பண்ணு..

டிஸ்சார்ஜ் பார்மாலிட்டி எல்லாம் முடித்து மகியுடன் வீட்டை அடைந்தான் ராம்..தலையிலிருந்த சிறு கட்டை தவிர ஓரளவு நார்மலாகியிருந்தாள் மகி..உள்ளே நுழைந்ததும் வீட்டை சுற்றி கண்களை சுழற்றியவள்,அமைதியாய் ராமை பின் தொடர்ந்தாள்..தங்களறைக்கு அழைத்து சென்றவன் நீ படு மகி நா உனக்கு சாப்ட எதாவது கொண்டு வரேன் என்றவாறு சமையலறை நோக்கிச் சென்றான்..அறையை பார்த்தவளுக்கு அவளுக்கு பிடித்த மாதிரியே அந்த அறை இருப்பதாய் தோன்றியது..அடுத்து அவளின் கண்களில் பட்டது அந்த புகைப்படம்..ராமும் மகியுமாய் ராம் அவளின் தோளை சுற்றி கைப் போட்டபடி அழகாய் இருவரும் புன்னகைக்க அந்த அறைக்கு பாந்தமாய் இருந்தது அந்த படம்..அதையே பார்த்து கொண்டிருந்தவளின் பின் இரு கைகளிலும் தட்டோடு வந்து நின்றான் ராம்..

இந்தா குட்டிமா இப்போதைக்கு நூடுல்ஸ் தான் இருக்கு நாளைக்கு வேற எதாவது பண்ணிக்கலாம் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ என ஒரு தட்டை அவள் கையில் கொடுத்தான்..அதை வாங்கி கொண்டவள்,பரவால்லங்க..எதுனாலும் எனக்கு ஓ.,கே தான் என்று கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்தாள்..ராம் அங்கிருந்த சேரை எடுத்து போட்டு அமர்ந்தான்..உணவை உண்ண ஆரம்பித்தவள்,நல்லாயிருக்கு ராம் தேங்க்ஸ்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.