(Reading time: 18 - 36 minutes)

ன்ன டிடெக்டிவ் சார் கல்யாணத்துக்கப்பறம் பொண்டாட்டி பேசுறது போரடிக்குதா..இருக்கறது நாம ரெண்டு பேரு இதுல அமைதியாவே இருந்தா வீடுங்கிறதே மறந்துடும்..நா அப்படிதான் பேசுவேன் நீங்க வேணா காத மூடிக்கோங்க..

ம்ம்ம் நீயெல்லாம் சொன்னா கேக்கமாட்ட..நா காத ஏன் மூடனும் உன்ன எப்படி அமைதியாக்கனும்னு தெரியும் இதோ வரேன் என்று அவளை பின்னிருந்து அணைக்க..

அய்யோ காலைலயே வா போங்கப்பா..என வீடு முழுவதும் ஓடி திரிந்தது நினைவிற்கு வந்தது..

மகியின் அழைப்பில் நினைவுலகிற்கு வந்தவன் அவளோடு சேர்ந்து உணவு உண்ண அமர்ந்தான்..மகி எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு சாக்ட்சிய வர சொல்லிருக்கேன்..உனக்கும் பேச்சு துணைக்கு இருந்தாமாறியிருக்கும்..அண்ட் கொஞ்சம் சேவ்வா இருடா..ட்டோர் நல்ல லாக் பண்ணிக்கோ..யாரு என்னனு கேட்டுட்டு கதவை திற இல்லனா உடனே எனக்கு போன் பண்ணு..பாத்துப்பல??அத்தனை தவிப்பு அவன் குரலில்..

நா பாத்து இருந்துப்பேன்ங்க..நீங்க கவலபடாம போய்ட்டு வாங்க..ஐ வில் மேனேஜ்..

.கே டா..லன்ஞ்க்கு வந்துருவேன்..என சாப்பிட்டு முடித்து அவன் கிளம்பவும் சாக்ட்சி வரவும் சரியாயிருந்தது..இருவரிடமும் விடைபெற்று ராம் செல்ல பெண்கள் இருவரும் பேசியபடியே மதிய உணவிற்கான வேலையில் ஈடுபட்டிருந்தனர்..சிறிது நேரத்தில் அழைப்பு மணி ஓசை கேட்க மகியை அமர வைத்துவிட்டு சாக்ட்சி சென்று பார்த்தாள்..உள்ளே வந்தவள் கொரியர் வந்திருப்பதாய் கூறி மகியிடம் பெரிய பார்சலை கொடுத்தாள்..பிரித்து பார்த்தவளுக்கு கண்களில் ஆர்வம் எட்டிபார்த்தது..அதிலிருந்தது அவளின் திருமண ஆல்பமுடன் கூடிய டீவிடீ..ஹே அண்ணி வாங்க வாங்க போட்டோ பாக்கலாம் என ஆர்பரித்தாள் சாக்ட்சிமகிக்குமே ஆசை தாளவில்லை..இருவருமாய் முதலில் ஆல்பத்தை பார்க்க சாக்ட்சி ஒவ்வொரு புகைபடத்திற்கும் எதாவது கூறி சிரித்து கொண்டிருந்தாள் அதற்க்கு காரணம் அவர்கள் இருவரின் முகத்திலும் பிரதிபலிக்கும் காதல்..ஒரு புகைப்படத்தால் நம் உணர்வுகளை பிரதிபலிக்க முடியுமா என்று எண்ணுமளவிற்கு அத்தனை தத்ரூபம்..அதிலும் ராம் மகியின் விரல் பிடித்து மெட்டி போடும் புகைப்படம் பெரியதாய் ஒரு பக்கத்திற்கு..ராம் அவளை அழகாய் ஏறிட்டு பார்க்க மகி நாணத்தோடு தன் காலை அவன் கைகளில் வைத்திருந்தாள்

நிஜமா அண்ணி நா பாத்ததுலயே நீங்க தான் பெஸ்ட் பேர்எவ்ளோ அண்டெர்ஸ்டாண்டிங்,எவ்ளோ லவ்,..சான்ஸ் லெஸ் யு ஆர்..தெரியுமா அண்ணி உங்க ரெண்டு பேருக்கும் பொசஸிவ்னெஸ்ஸே கிடையாது..லவ்ல அது இருக்கனும்தான் பட் அதையும் தாண்டி ஒருத்தர் மேல இன்னோருத்தர் வச்சுருக்குற அன்பும்,நம்பிக்கையும் அதிகமாகும் போது அந்த பொஸஸிவ்னெஸ்ஸோட அவசியமில்லாம போய்டுது..நா உங்க மேரேஜ் அன்னைக்குதான் உங்கள பாத்தேன்..பட் அந்த ஒரு நாள்ளயே உங்களோட ஹெமிஸ்ட்ரிய பாத்து நா அசந்துட்டேன்..ம்ம் என் கண்ணே பட்டுடுச்சோ என்னவோ உங்களுக்கு இப்படி ஆய்டுச்சு..எல்லாம் என் ராசிதான் என லேசாக கண்கலங்க..

ஹே சாக்ட்சி இங்க பாருங்க அப்படிலா ஒண்ணுமில்லை எந்த ஒரு விஷயத்துக்கும் யாரோட ராசியும் காரணமா இருக்க முடியாது..கடவுள் நமக்குநு கொடுக்குறத நாம ஏத்துகிட்டுதான் வாழனும் நல்லதுனாலும் சரி கெட்டதுனாலும் சரி..இதுக்கு எப்படி நீங்க பொறுப்பாக முடியும்..இன்னொரு தடவ அப்படி பேசாதீங்க..சரியா??

அப்போ நீங்களும் என்ன பழையபடி நீ வானே கூப்பிடுங்க ஒ.கே வா??

அழகாய் சிரித்தவள்..ஆல்பத்தை பார்க்க தொடங்க அதை முடித்து டீவிடீயை பார்க்க ஆரம்பித்தனர்..சாக்ட்சி வழக்கம்போல் ஏதோ பேசி கொண்டிருக்க மகிக்கு தான் ஒன்றும் காதில் ஏறவில்லை..டீவியை விட்டு கண்கள் நகர மறுத்தது..ராமும் அவளும் எவ்வளவு சந்தோஷமாய் அன்யோன்யமாய் ஒவ்வொரு காட்சியும் கண்களை நிறைத்தது..திருமாங்கல்யத்தை அவளுக்கு அணிவித்து ராம் அவளை தோளோடு சாய்த்து கொள்ள இருதுளி நீர் மகியின் கண்களில்..

அண்ணி ஆனா அண்ணா ரொமான்ஸ் தாங்கல..எல்லாரும் சொன்னாங்க அண்ணா ரொம்ப காம் டைப்பாம் இத்தனை வருஷமா தனக்குள்ளே இருந்த மொத்த காதலையும் உங்க மேல கொட்டிதீர்த்துட்டார் போல..என்று சிரிக்க..மகியின் முகத்தில் சின்னதாய் நாணத்தின் சாயல்..அடுத்ததாக மணமக்களுக்கான நலுங்கு விளையாட்டுகள் அனைத்திலும் மகியே வெற்றி பெற்றாள்..அவளுக்கே ஆச்சரியமாய்தான் இருந்தது..ஆனால் அதற்கும் பதில் சாக்ட்சியிடமிருந்து வந்தது..

எல்லா கேம்லயும் அண்ணா விட்டு கொடுத்துட்டாரு அண்ணி..அவ்ளோ ஏன் அவரு ட்ரை கூட பண்ணல..புல் சரண்டர் உங்ககிட்ட..நீங்க அண்ணாகிட்ட கண்ணாலயே பேச அவரு பதிலுக்கு சிரிப்பாலேயே ரிப்ளை பண்ண வந்தவங்க எல்லாரும் அந்த கேம்மை பாத்தாங்களோ இல்லையோ உங்க காதல் விளையாட்டை நல்லாவே பாத்தாங்க பாருங்க பின்னாடி இருக்குறவங்கலா எப்படி கலாய்குறாங்கநு..மகியும் முகத்தில் புன்னகை மாறாமல் அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தாள்இவ்வாறு நேரம் போவதே தெரியாமல் இருவரும் பார்த்து கொண்டிருக்க மதிய உணவுவேளையில் ராம் வந்த பின்புதான் நேரத்தையே கவனித்தனர்..சாக்ட்சி பரணியோடு லஞ்ச்சிற்கு வெளியே செல்வதாக கூறிவிட்டு அவர்களிடமிருந்து விடை பெற்றாள்..

ராமிற்கு பரிமாறிவிட்டு தானும் எதிரே அமர்ந்து சாப்பிட தொடங்கினாள்..திருமண வீடியோவை பார்த்தவாறே ராம் உணவு உண்ண ஆரம்பித்தான்..அவனையே பார்த்திருந்தவளுக்கு அவன் கண்களிலிருந்து வெளிப்பட்ட கண்ணீர் குழப்பத்தை ஏற்படுத்தியது அவள் வாய் திறந்து கேட்பதற்குள் தன்னை சுதாரித்து கொண்டு எழுந்து சென்றுவிட்டான் ராம்...அவனின் நிலையறிந்தவள் மனம் வருந்தினாள்..டீவிடீயை நிறுத்திவிட்டு டீவியை உயிர்பித்தாள் அதற்குள் அங்கிருந்த கப்போர்டில் எதையோ தேடி கொண்டிருந்தான் ராம்..டீவியின் பாடலை கண்டவள் ராமிற்காக மாற்ற போக,ஏன் மகி நல்ல பாட்டுதான உனக்கும் பிடிக்குமே இருக்கட்டும் என்றான் வேறு வழியின்றி அதை ஓடவிட்டு விட்டு சமையலறை நுழைந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.