(Reading time: 18 - 36 minutes)

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒஹோ ஹோ...ஒரே ஞாபகம்
ஒஹோ ஹோ...உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும்போது
தூக்கம் இங்கே ஏது
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்

கையில் புக்கோடு சிந்தனை எங்கோ இருக்க பாடலை பார்த்திருந்தவனின் நிலையை பார்க்கும் போது தன்னால் எத்தனை துன்பம் இவனுக்கு என மனமுடைய கண்களில் நீர் கோர்க்க ஆரம்பித்தது வேகமாய் தனதறைக்குச் சென்றுவிட்டாள்..சில நிமிடத்தில் உள்ளே எட்டிபார்த்தவனுக்கு முதுகு காட்டி படுத்திருக்க ரெஸ்ட் எடுக்கட்டுமென்று வெளியிலேயே அமர்ந்து டீவி பார்த்து கொண்டிருந்தான் ராம் ஆனால் உள்ளிருந்தவலோ கண்ணீரால் தலையணையை நனைத்து கொண்டிருந்தாள்..அழுதழுது ஒரு எல்லையில் ஓய்ந்து போனவள் எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை..

மணி இரவு எட்டை நெருங்க மகியை சாப்பிட எழுப்பலாம் என்று உள்ளே நுழைந்தவனுக்கு கன்னங்களில் இருந்த சுவடே அவள் அழுதிருப்பதை உறுதிபடுத்த என்னவென்று யோசிக்கலானான்..அப்போதுதான் அதை கவனித்தவன்,அவளிடமிருந்து ஏதோ ஒரு முனகல் மெல்லியதாய்..என்னவென்று கேட்பதற்காக அருகில் சென்றவனோ பேச்சிழந்திருந்தான்..

ராம் ஐ அம் வெரி சாரி..நா எவ்ளோ யோசிச்சாலும் எனக்கு ஞாபகமே வரல..என்னால நீங்க ரொம்ப கஷ்டபடுறீங்க நா எங்கயாவது போய்ட்ரேன்..சாரி ராம்..என கூறியதையே கூறி கொண்டிருந்தாள்..லேசாய் நெற்றியில் கை வைத்து பார்க்க நெருப்பாய் கொதித்தது..அந்த தாக்கத்தில் தான் உளறி கொண்டிருக்கிறாள்..பதறி போனவன் கன்னத்தை தட்டி எழுப்ப முயற்ச்சிக்க எந்த பலனுமில்லை….அவளை தன் மடியில் கிடத்தி எவ்வளவோ முயற்ச்சிக்க அரை மயக்கத்திலேயே இருந்தாள்..உடனே பரணியை அழைத்து டாக்ரை வர சொல்ல பத்து நிமிடத்தில் டாக்டரோடு வந்தான் பரணி..

நத்திங் டு வொரி மிஸ்டர் ராம்..ரொம்ப டிஸ்டப்ர்ட்டா இருக்காங்க அதனாலதான்..மத்தபடி பயப்பட வேண்டியதில்லை என்று கூறி சில மருந்துகளை எழுதி கொடுத்துவிட்டு சென்றார்..அவரை வாசல்வரை சென்று அனுப்பிவிட்டு உள்நுழைந்த பரணிக்கோ தன் நண்பனுக்காக கவலைபபடுவதா இல்லை இந்த குட்டி தங்கையை நினைத்து வருந்துவதா என்றே தெரியவில்லை..ஆதரவாய் ராமின் தோளை பற்றினான்..

தேங்க்ஸ் மச்சான்..மதியானம் நல்லாதான்டா இருந்தா அதுகுள்ள ஏன் இப்படி ஆச்சுனே புரில..பேசாம அவ அம்மா வீட்டுலயே கொஞ்ச நாள் இருக்கட்டுமோநு தோணுது..

ராம் தைரியமா இருடா ஆன்ட்டிகிட்ட இப்போ எதுவும் சொல்ல வேண்டாம்..முதல்ல மகி குணமாகட்டும் அப்பறம் மத்தத பத்தி யோசிப்போம்…நீயும் சாப்ட்டு படு எப்போ வேணாலும் கால் பண்ணு என்றவாறு வீட்டிற்கு கிளம்பினான்..

மணி இரவு 11ஐ எட்டியது ராம் மகியைவிட்டு எங்கும் நகரவில்லை..காய்ச்சல் குறைந்திருந்தது..லேசாக கண் திறந்து பார்வையை சுழற்றியவளுக்கு அருகிலேயே அமர்ந்திருந்த ராம் கண்ணில் பட்டான்..

குட்டிமா இப்போ எப்படிடா இருக்கு??இரு நா பால் எடுத்துட்டு வரேன் சாப்ட்டு டப்லெட் போடு..மார்னிங் சரியாயிடும் என சென்று பால் எடுத்து வந்தான்..

அவனையே பார்த்திருந்தவளின் கண்களில் கண்ணீர்..திரும்பி வந்தவன் அவளருகில் அமர்ந்து கண்ணீரை துடைக்க பின்னால் சாய்ந்தவாறு எழுந்து அமர்ந்தாள்..

பாலை அவளிடம் கொடுக்க கையில் வாங்கிக் கொண்டு அவனையே ஏறிட்டாள்..

என்ன மகி??ஏன் உன்னை நீயே கஷ்டபடுத்திக்குற??என்னாச்சுடா??என்ன ஒரு ப்ரெண்டா நினைச்சுக்கோ மனசுவிட்டு பேசுடா..இப்படியே உனக்குள்ளேயே போட்டு ஏன் நொந்துக்குற..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.