அரை மனதாய் சரி என்று தலையாட்டி வைத்தேன்…
“வாராய் என் தோழியே.. குலம் வாழவே நடை போட்டுவா..
பொற்கோவில் தீபமே… பஞ்சசீலமே விளக்கேற்றவா…”
மிக அருகில் ஒரு அவலக்குரல்.. சீ… சீ.. ஒரு அழகுக்குரல் கேட்டு பிரகாசம் ஆனேன்..
வாயெல்லாம் பல்லாக துறுதுறுவென வந்து நின்றாள் எனது அருமை பெஸ்டீ அமிழ்தினி மது..
“ஹேய்… சத்யா.. சூப்பரா இருக்கடி, மாப்பிள்ளை கண்டிப்பா உன்னை பார்த்த உடனே தாலி கட்டினா கூட ஆச்சரியம் இல்ல..”
“வாடி என் கானக்குயில் அமிழ்தி.. இதான் வர்ற நேரமா?. உன் கிண்டலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. இவ்வளோ நகை அள்ளி போட்டிருக்காங்கன்னு நானே கடுப்புல இருக்கேன்.. நீ வேற.. சரி சரி. எப்படி இருக்காரு உன் வுட்பீ…”
“சூப்பரா இருக்காரு. கடலை டெய்லி கருக்கிட்டு தான் இருக்காரு. அவரைப் பத்தி அப்பறம் பேசலாம். ஏண்டி ரெண்டு வருஷம் கழிச்சு தான் மேரேஜ் பண்ணிப்பேன்னு சொன்ன, இப்போ பொண்ணு பார்க்க வராங்கன்னு ஷாக் கொடுக்குற.. என்னடி நடக்குது?..”
“போடீ.. சித்தப்பா பண்ணின வேலை இது. எனக்கு பிடிக்கவே இல்லை தெரியுமா?..”
“சரி சரி கூல்.. நாம ரெண்டுபேருக்கும் எப்பவும் ஒன்னுபோலதான எல்லாம் நடக்கும்.. நாம ரெண்டு பேர் பேரும் மது.. என் பேரு அமிழ்தினி மது.. உன் பேரு சத்யா மது.. எனக்கும் ஒரு அண்ணா, ஒரு தம்பி.. உனக்கும் அப்படிதான்.. கிளாஸ்ல மாத்தி மாத்தி ஃபர்ஸ்ட் ரேங்க் வருவோம்.. எனக்கு பிடிச்ச எல்லாமே உனக்கு பிடிக்கும்.. இப்போ எனக்கு மேரேஜ் செட் ஆகிடுச்சு சோ உனக்கும் செட் ஆகணும் தான.. நமக்குள்ள உள்ள வேவ் லென்த் பண்ணுற வேலை மச்சி..”
“என்ன வேவ் லென்த்தோ? ஆனாலும் எனக்கு பிடிக்கவே இல்லை சுத்தமா.. எவ்வளவோ ட்ரீம்ஸ் வச்சிருந்தேன்.. நல்லா வேலையில முன்னேறனும்,, நிறைய சம்பாதிக்கணும், வெல் செட்டில் ஆகணும் அப்பறம் தான் கல்யாணம்னு…. பட் யாரு கேட்குறாங்க.. அம்மா அப்பா இல்லாத எனக்கு அவங்கதான் எல்லாம்.. அவங்க சொல்லுறதையும் தட்ட முடியலை.. மாப்பிள்ளைக்கு என்னை பிடிக்கலைன்னா ரொம்ப நல்லாயிருக்கும்..” கலங்கியபடி சொன்ன என்னை அணைத்துக்கொண்டாள் அவள்..
“போடீ.. லூசு மாதிரி பேசாத.. சரி மாப்பிள்ளைக்கு உன்னை பிடிக்கலைன்னா நானே சொல்லுறேன் உன் சித்தப்பாகிட்ட.. அவ கல்யாணத்துல அவசரப்படாதீங்கன்னு.. சரியா?. கொஞ்சம் சிரியேன்..” என்றாள்..
“ஈஈஈ………………………….” என்று இளித்து வைத்தேன்..
“இப்போதான் என் சத்யா சூப்பரா இருக்குறா..” என்றபடி அணைத்துக்கொண்டாள்..
மாப்பிள்ளை வீட்டாளுங்க வந்துட்டாங்க வந்துட்டாங்க… சிறு பதட்டத்துடன் என் சித்தப்பா சொன்னார்..
ஜன்னல் வழியாக நானும் அமிழ்தியும் எட்டி பார்த்தோம்.. ஒரு பெரிய பட்டாளமே வந்து கொண்டிருந்தது..
இவ்வளோ பேரா… ஆயாசமாக இருந்தது.. வீடு சிறிதென்பதால் பாதிபேருக்கு இடமில்லை…
பெண்களில் ஒரு ஒன்பது பேர் தபதப என்று ரூமிற்குள் நுழைந்தனர்.. அனைவரும் நடுத்தர வயது பெண்கள்..
அதில் மூன்றுபேர் பையனின் அண்ணியாம். மற்றவர்கள் மாப்பிள்ளையின் அக்காவாம்.. அறிமுகப்படுத்திக்கொண்டனர்..
“நல்லாதான் இருக்கு பொண்ணு…” இருப்பதிலேயே வயதான பெண் கூறினார்..
“என் பேரு அகிலா.. மாப்பிள்ளையோட பெரிய அண்ணி… அவனை நான் தான் வளர்த்தேன்..”
ஒன்றும் பேசாமல் புன்சிரிப்புடன் தலை அசைத்தேன்..
அனைவரும் உத்து உத்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தனர்..
“ஹேர் ஸ்டைல் இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்.. ஏன் இந்த வாட்சை ரைட் ஹேண்ட்ல கட்டிருக்குற?. இப்படியா சேலை கட்டுவாங்க.. முடி இவ்வளவுதானா?..”
அப்படி இப்படின்னு ஒரே குறையா சொல்லிட்டு இருந்தாங்க.. எதற்குமே பதில் கூறாமல் விழித்துக்கொண்டிருந்தேன்.. அமிழ்தினியையும் விட்டுவைக்கவில்லை… அவளை யார் என்ன ஏது, ஏன் தனியா வந்துருக்கான்னு குடைந்து எடுத்தார்கள்…
“சரி வாம்மா வெளியே அவன் பார்க்கணும்ல உன்னை..” என என்னை இழுக்காத குறையாக வெளியே கூட்டிச் சென்றனர்…
கொஞ்சம் தள்ளி போம்மா காத்து வரட்டும்னு கத்தணும் போல இருந்தது.. கஷ்டப்பட்டு அடக்கியபடி வலிய பூசிக்கொண்ட வெட்கத்துடன் ஹாலுக்கு நடந்தேன்…
“இதான்ப்பா பொண்ணு. நல்லா பார்த்துக்கோ..” யாரோ சொன்னார்கள்.. என் குனிந்த தலையை நிமிர்த்தி மாப்பிள்ளையின் அக்கா அவனை பார்க்க வைத்தாள்..
கருமையான அடர் கேசம், கூர்மையான மூக்கு, சிவந்த நிறம், என்னைவிட கலர் அதிகம்.. அழகான புசுபுசுவென்ற கன்னம், சராசரி உயரம், அவன் உடலுக்கு ஏற்ற கச்சிதமான உடை, பார்க்க ரொம்ப நன்றாகவே இருந்தான்.. ஒரு முறை பார்த்தாலே கவரும் அழகுடன் இருந்தான்..
பொண்ணைப் பிடிச்சிருக்காப்பா?... அவனிடம் யாரோ கேட்டார்கள்…
பொண்ணுகிட்ட கேளுங்க ஃபர்ஸ்ட்… அவன் என்னை பார்த்தபடி சொன்னான்..
யாரும் கேட்காமலேயே ஒரு நிமிடம் கூட யோசிக்காமலே டக்கென்று கூறிவிட்டேன்.. எனக்கு பிடிச்சிருக்கு என்று…
பின்பு என்ன செய்திருக்கிறோம் என உணர்ந்தவளாக நாக்கை கடித்துக்கொண்டே வெட்கத்துடன் உள் அறைக்கு ஓடினேன்…
அறையில், இதை எல்லாம் கவனித்த என் தோழி அடிப்பாவி என்பது போல் நக்கலுடன் பார்த்தாளே ஒரு பார்வை…
தொடரும்
{kunena_discuss:1065}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.