(Reading time: 9 - 17 minutes)

விவேக் ஸ்ரீநிவாசன் - 02 - வத்ஸலா

Vivek Srinivasan

மேலே ஏறி, விமானம் காற்றில் மிதக்க துவங்க அவன் எதிரில் இருந்த அந்த கண்ணாடியின் வழியே கண் முன்னே விரிந்தது முடிவில்லா ஆகாய வீதி. மேகங்களின் இடையே பூமியிலிருந்து  11,000  அடி மேலே பறந்துக்கொண்டிருந்தது அவனது ராட்சத பறவை.

'வீ ஹேவ் ஜஸ்ட் ஹிட் தி அல்டிடியூட் ஆஃப் 11000 ஃபீட் லேடீஸ் அண்ட் ஜெண்டில்மென், நவ் யூ கேன் டேக் ஆஃப் தி சீட் பெல்ட்ஸ்' பயணிகளுக்கான அடுத்த அறிவிப்பை கொடுத்தான் விவேக்.

'நவ் யூ ஆர் ஃப்ரீ டு மூவ் அபௌட் இன் தி கேபின் லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன்.... பட்..... ப்ளீஸ் ஸ்டே இன்சைட் தி பிளைட் டில் வி லேன்ட் அண்ட்  ப்ளீஸ் அவாய்ட் வாக்கிங் ஆன் தி விங்ஸ்!!!'

தயவு செய்து இறக்கைகளில் நடந்து விடாதீர்கள் என நகைச்சுவையாக அவன் சொல்ல பயணிகளின் மத்தியில் சிரிப்பலை.

சூரிய கதிர்கள் சுள்ளென ஊடுருவி அவன் கண்களை தொட, குளிர் கண்ணாடியை எடுத்து அணிந்துக்கொண்டவனின் கண்கள், மேகங்களுக்கு நடுவே எதையோ.... இல்லை இல்லை யாரையோ தேட ஆரம்பித்தன....

'இருப்பேன்... உன் கூடவே இருப்பேன்... வானத்திலே இருந்து உன்னையே பார்த்திட்டு இருப்பேன்....'  முன்பு ஒரு முறை அவன் கதறி துடித்து விழுந்த போது அவனருகே ஒலித்த குரல் மேகங்களுக்கு இடையிலிருந்து அவனை தொட்டது போலே ஒரு பிரமை!!!

கண்கள் இங்கமங்கும் சுழன்ற போதும் ...அவனுடன் ஒட்டப்பந்தயம் வைத்து முந்திச்செல்லும் மேகக்கூட்டங்களை தவிர வேறெதுவும் கண்களுக்கு தட்டுப்படவில்லை!!!! ஆனால் அவன் மனதிற்கு தட்டுப்பட்டது ஒரு அமைதி!!! வெயிலை கடந்து வந்தவனுக்கு குளிர் நிழலில் கிடைக்கும் ஒரு ஆறுதல்!!! ஒரு ஆழமான சுவாசம் அவனிடம்.

தே நேரத்தில்...

டெல்லியின் அந்த மருத்துவமனையில் தோள்களில் கிடந்த ஸ்டெதஸ்கோப்புடன் நின்றிருந்தாள் டாக்டர் சுஹாசினி!!! அங்கே இருந்த மருத்துவர்கள் அவளுக்கு பிரியா விடை கொடுத்துக்கொண்டிருந்தனர்.

அவளது கணவன் ராகுலுக்கு சென்னையில் வேலை. அவன் மாற்றாலாகி சென்று ஆறு மாதங்கள் ஆகி விட்ட நிலையில் மூன்று வயது மகனையும், கணவனையும் அங்கே விட்டுட்டு விட்டு இவள் இத்தனை நாட்கள் இங்கே இருந்ததே பெரிய விஷயம்!!!

'இன்னைக்கு நைட் சென்னைக்கு பிளைட்......' யாரிடமோ மகிழ்ச்சியாக சொல்லிக்கொண்டிருந்தாள் அவள்.  தமிழ் நாட்டுக்கு போவதில் அவளுக்கு இன்னொரு சந்தோஷமும்   இருக்கிறது.

'சந்தித்து விட வேண்டும்!!! 'இத்தனை நாட்களாக அவள் பார்க்க வேண்டும் என்று தவித்துகொண்டிருக்கும் அந்த நபரை சந்திக்கும் சந்தர்ப்பம் எப்படியாவது கிடைக்க வேண்டும்!!!!

'அவரை எப்படியாவது சந்தித்து விட வேண்டும்!!!' தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள் ஹாசினி.

'ன்டா உனக்கு இந்த லவ் எல்லாம் வரவே வராதா???' இப்படி ஜாலியா சுத்திட்டு இருக்கியே??? நாங்க எல்லாரும் படாத பாடு படறோம்???'

விமானம் மேகங்களுக்குள் ஊடுருவி சென்றுக்கொண்டிருக்க விசிலடித்துக்கொண்டே அதை இயக்கிகொண்டிருந்த விவேக்கை பார்த்து ஆங்கிலத்தில் கேட்டான் அவனருகே அமர்ந்திருந்த ஃபர்ஸ்ட் ஆஃபிசர் தருண்!!!

'ஐ அம் அல்ரெடி எங்கேஜெட் மேன் ...' என்றான் விவேக் அழகாக சிரித்தபடியே. அவன் பார்வை வானத்தை சுட்டியது. புரிந்துக்கொண்டவனாக புன்னகைத்தான் அந்த பைலட் நண்பன்.

மேகங்கள்!!! அடுக்குமாடி கட்டிடம் போல் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கடுக்காய் மேகங்கள்!!! அலையலையாய் ஒன்றோடு ஒன்று ஓடி விளையாடி கடந்து கலைந்து....

இந்த மேகங்களின் இடையே புகுந்து, இதன் மேலே ஏறி, கீழே இறங்கி அனைவரையும் பாதுக்காப்பாக அழைத்து செல்வது தான் அவனது தினசரி வேலை!!! அவன் ரசிக்கும் விளையாட்டும் கூட!!!!

ஒரு காலத்தில் இரு சக்கர வாகனத்தை செலுத்த கூட உயிர்  நடுங்கும் இவனுக்கு!!!

'என்னடா ஆகும்??? அப்படி என்ன ஆயிடும். பார்த்துடலாம் வா...' என அவனை சாலையில் இறக்கி விட்டவர் அப்பா! இன்று அனாயாசமாக வானில் ஏறி பறந்துக்கொண்டிருக்கிறான். அவனுடைய இந்த வளர்ச்சிக்கு காரணம். அப்பா!!! அப்பா!!! அவன் அப்பா மட்டுமே!!!

அவர் ஒரு மருத்துவரும் கூட. அதனாலேயே மருத்துவர்கள் என்றால் அவனுக்கு எப்போதுமே ஒரு பிரமிப்பும் மரியாதையும் உண்டு.

'வீட்டிலே அப்பா அம்மா எல்லாரும் எப்படி இருக்காங்க???'. கேட்டான் தருண். ஒரு முறை அவனை திரும்பி பார்த்து ஒரு பெருமூச்சு கலந்த புன்னகையுடன் தலை அசைத்தான் விவேக்.

பொதுவாக ஆட்டோ பைலட் முறையை இயக்க விவேக் அதிகம் விரும்புவதில்லை. உடலில் சோர்வு ஏற்படும் வரை, விமானம் அவனது கட்டுப்பாட்டிலேயே இருக்கும். உற்சாகமாய் மேகங்களை துரத்தி, விலக்கி முத்தமிட்டு காதலித்துக்கொண்டிருந்தான் விவேக்!!!

இந்த வானத்தின் மீது, மேகங்களின் மீது, அவனோடு விளையாடி அவனை அலைக்கழிக்கும் இந்த காற்றின் மீது என எல்லாவற்றின் மீதும் காதல் அவனுக்கு. டெல்லியை நோக்கி பறந்துக்கொண்டிருந்தது விமானம்!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.