(Reading time: 9 - 17 minutes)

தே நேரத்தில்...

பூமியில் அவனை தாக்க அவனை நோக்கி வந்துக்கொண்டிருந்த அந்த புயலால் தானோ என்னவோ ... டெல்லி நோக்கி வந்துக்கொண்டிருந்த அந்த விமானத்தில்... டர்புலன்ஸ்!!! லேசாக ஆட்டம் கண்டது விமானம்!!!

காற்றை விட சற்றே அடர்த்தியான மேகங்கள், இல்லை சற்றே அடர்த்தி குறைவான மேகங்கள் விமானத்தின் இறக்கைகளுடன் உராயும் போது விமானங்களில் அடிக்கடி நிகழும் இந்த ஆட்டம்.

'சீட் பெல்ட்ஸ்...' அணிவதற்கான இன்டிகேடரை எரியவிட்டு.....  அறிவித்தான் விவேக்.....

'இட்ஸ் டைம் டு வேர் யுவர் சீட் பெல்ட்ஸ் லேடீஸ் அண்ட் ஜென்டில் மென்.......அன்டில் தி நெக்ஸ்ட் அன்னௌன்ஸ்மெண்ட் ப்ளீஸ் ஸ்டே ஆன் யுவர் சீட்ஸ் மை டியர் கேபின் ஸ்டாஃப்ஸ்...'

அவர்களுக்கு சற்று முன் கடந்து சென்ற விமானத்தில் இருந்து தகவல் வர.......... அருகில் இருக்கும் ஃபர்ஸ்ட் ஆபிசரிடமிருந்து கட்டளை வர........... மெதுவாக விமானத்தின் வேகத்தை குறைத்து சற்றே கீழிறக்கினான் விமானத்தை!!!!

'உன்னை திக்குமுக்காட செய்யும் ஒரு ரகசியம் மறைந்திருக்கிறதடா ஹரிணியிடம்... சொல்லத்தான் அவனை உரசினவோ அந்த மேகங்கள்??? அறியவில்லை அவன்.

அடுத்த பத்து நிமிடங்களில் அந்த மேகங்களை கடந்திருந்தது விமானம். மெல்ல திரும்பி தருணை பார்த்து கண் சிமிட்டி சிரித்தான் விவேக்.

டெல்லி விமான நிலையத்தை விமானம் அடைந்திருக்க அதை தரை இறக்கும் படலம்!!! மேகங்களையும் வானத்தையும் பிரிய மனமில்லாதது போலே அவற்றை ஒரு பார்வை பார்த்துக்கொண்டான் விவேக். இதோ அடுத்த அரை மணி நேரத்தில் மறுபடியும் வரப்போகிறேனே!!! மானசீகமாக அவர்களிடம் சொல்லிக்கொண்டான்.

'தரை இறங்குகிறோம்...' என்பதை பயணிகளுக்கு அறிவித்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக கீழிறக்கினான் விமானத்தை. விமான நிலையத்தின் ஓடு தளம் கொஞ்சமாக கண்களில் தெரிய துவங்கியது.

இறங்கிக்கொண்டிருந்தான் பூமியை நோக்கி!!! அதே நேரத்தில் அந்த விமான நிலையத்துக்குள் நுழைந்தாள் ஹரிணி!!! சற்று முன் இறங்கி இருந்த இன்னொரு விமானத்தில் இருந்து இறங்கக் தயாராகிக்கொண்டிருந்தனர் டாக்டர் சுஹாசினியின் கணவனும் மகனும்!!!

தொடரும்......

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1049}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.