(Reading time: 9 - 18 minutes)

09. வசந்த காலம் - கிருத்திகா

Vsantha kalam

பூஜை அறையில் அமர்ந்தாள் ..பிரபஞ்சினி ....அவள் வாழக்கை புரட்டி போட்ட சில நாட்களில் இதுவும் ஒன்று .. சிவா கர்பம் என்று தெரிந்த நாள் .. தூங்கி எழுந்த சிவா பிரம்மை பிடித்ததுபோல் இருந்தால் ..

ரஞ்சிக்கு என்ன செய்வது என்று தெரியவே இல்லை .. சங்கீ மட்டும் இல்லை என்றால் இருவரும் உண்ணா நோம்பிருந்து இறந்து பொய் இருப்பார்கள் ..சங்கியின் தயவால் உயிர் வாழவும் நடக்கவும் தெம்பு இருந்தது ..ரஞ்சிக்கோ தான் எங்கே தப்பு செய்தோம் என புரியவில்லை ...அம்மாவின் வளர்ப்பு எப்படி தப்பானது என்றும் தெரியவில்லை ...உயிராக இருந்த விக்ரம் அருகில் உட்காரகூட தயங்கினாள் இவள் ..ஆனால் தங்கை செய்து வைத்திருப்பது அம்மா இருந்தாள் இப்படி நடந்திருக்காது ... தவறு என் மேல் தானோ ..???????????????

இருவர் மட்டும் இருக்கும்போது அவளிடம் தெரிந்த மாற்றத்தை கவனிக்காமல் விட்டது எப்படி ???? இல்லை என்னிடம் மறைக்கும் திறமை அவளுக்கு வந்து விட்டதா ? ஒன்றும் புரியவில்லை ...

தன்னிலை மீண்டு வந்து ... 

சிவா எந்திரிமா ... வா சாப்பிடலாம் .. எதற்கும் பதில் இல்லை ..

ரஞ்சியின் கோபம் அதிகமானது ஏய் பண்ணறதையும் பண்ணிட்டு இப்படி இருக்கற ????? உன்னை பத்தி இல்லை என்றாலும் குழந்தைபத்தி நினை கொஞ்சமாவது சாப்பிடு ...அதற்கும் பதில் இல்லை ..

கோவத்தில் ஒரு அறை விட்டாள் ....

அடியின் வேகத்தில் தன்  கை திகு திகு என எரிய ... அடிவாங்கியவளோ ஒன்றுமே நடவாததுபோல் அமர்ந்திருந்தாள் ...எதுவோ தவறு என புரிய சங்கியை அழைத்து விஷயம் கூறினாள் ...  சங்கீயும் தான் டாக்டர் அப்பொய்ன்ட்மென்ட்  வாங்குவதாகவும் சாயங்காலம் அவளை அழைத்து செல்லலாம் என கூறி சமாதானப்படுத்தினாள் ....

பின் சாதம் பிசைந்து கொடுக்க கடனே என சிவா அதை சாப்பிட்டால் ....

சாயங்காலம் சங்கீவந்தவுடன் மருத்துவமனை சென்றவளுக்கு கடவுள் என ஒருவரும் இல்லை என புரிந்துபோனது ....சிவாவிற்கு தன்னை பற்றிய என்னமோ ரஞ்சி ... குழந்தை எதுவும் நினைவில்லை .. ஏன் அவள் தன் நினைவிலே  இல்லை ... நடந்த நிகழ்ச்சிகளின் தாக்கம் அவள் மூளையை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது ....அவள் குணம் ஆகலாம் இல்லாமலும் போகலாம் ...

இம்முறை ரஞ்சி அழுக அவளை சமாதான படுத்தும் வழி தெரியவில்லை சங்கீக்கு ....

ஒருவழியாக உண்மை உரைக்க சிவாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்கள் ...ரஞ்சி தொடர்ந்து விடுமுறை எடுக்க முடியாததால் ஒரு ஆளை ஏற்பாடு செய்துவிட்டு ... வேலைக்கு போக தொடங்கி இருந்தால் .....சிவாவிற்கு மனதிற்கு இதமான பாடல்களும் ... பிடித்த உணவும் .. இன்னும் பல இருந்தும் அவளுக்கு அது சந்தோசம் கொடுப்பதாய்  இல்லை அவள் மனநிலையில் மாற்றமும் ஏற்படவில்லை ...

ஒருநாள் வேலை சீக்கிரமாக முடிந்து வீட்டிற்கு வந்த ரஞ்சி .. சிவாவை பார்த்துக்கொள்ள இருந்த பெண்மணி அவளை அடிப்பதை பார்த்தாள் ... மனது ஆறவில்லை ....ஏற்கனவே தங்கையை சரியாக கவனிக்கவில்லை என இருந்தவளுக்கு இதுவும் சேர்ந்துகொள்ள .... நிம்மதியும் தூக்கமும் தொலைத்தாள் ..

மறுமுறை டாக்டரிடம் போகும்போது ரஞ்சியை பார்த்தவர் ... என்னம்மா நீ ஏன் இப்படி இருக்கிறாய் அவள்  குழந்தை மாதிரி இருக்கிறாள் அவளை நீதானே கவனிக்க வேண்டும் ????

உடன் வந்த சங்கீ ..நடந்ததை கூறியவள் இப்போதைக்கு இவள் விடுமுறை எடுத்து சிவாவை பார்த்துக்கொள்கிறாள் .... என்று கூறினாள் ...

அவர்கள் கிளம்பும் பொது அந்த டாக்டர் எனக்கு ஒரு யோசனை தோணுகிறது அது உங்களுக்கு சரிவருமா ???? என பாருங்கள் என்று கூறி ..

எனக்கு தெரிந்த ஒருவர் கேரளா - வயநாட்டில்  ஒரு ஆஸ்ரமம் நடத்திவருகிறார் ... உங்கள் தங்கை அங்கே விடலாமே ?????.. அவளுக்கு பாதுகாப்பும் கிடைக்கும் .. அந்த சூழ்நிலை அவளுக்கு ஒரு மாற்றமாகவும் அவளை குணப்படுத்தவும் உதவும் ...

ரஞ்சி என்ன செய்வதென குழம்பி இருக்க ...

மேலும் அவளிடம் நான் வளர்ந்ததும் அங்கே தான் ... நீங்க யோசிங்க அப்புறமா சொல்லுங்க நான்  அம்மாவிடம் பேசுகிறேன் கண்டீப்பா அவங்க சிவாவை ஒரு பெண்போல பார்த்துக்கொள்வார்கள் ...

நீங்க மெதுவா முடிவெடுத்து சொல்லுங்க .... போய்ட்டுவாங்க ...

சங்கீ வீட்டிற்கு வந்தவுடன் டாக்டர் கூறியதுதான் சரியான வழி .. என மெல்ல பேசி ரஞ்சியை சம்மதிக்க வைத்தால் .... ரஞ்சிக்கு எங்கே இதுவும் தப்பாகிவிடுமோ என ஒரு பயமும் தன்  தங்கை குணமானால் போதும் என்ற நம்பிக்கையாய் அதற்க்கு ஒத்துக்கொண்டாள் ...

அதன்பின் ஒரு 10 நாளில் ... சங்கீ ...ரஞ்சி... சிவா ... கேரளாவை நோக்கி பயணித்தார்கள் ... வேலை இருந்ததால் சங்கீயின் கணவன் வரவில்லை .... 

ரஞ்சிக்கு சிவாவின் எதிர்காலமும் குழந்தையின் எதிர்காலமும் மிகப்பெரிய கேள்விக்குறியாய் முன்னே நின்றது ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.