(Reading time: 8 - 15 minutes)

10. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ராகுலின் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான் அர்ஜுன்..

அர்ஜுனின் தந்தை ஜனார்த்தனன் கலெக்டர் .. அம்மா ஹவுஸ் wife .. அவர்களின் சொந்த ஊர் திருநெல்வேலி.. ஜனார்த்தனனுக்கு அடிக்கடி ஊர் மாறும் என்பதால்.. அர்ஜுனை அவர்கள் CBSE வழி கல்வி மற்றும் எந்த ஊருக்கு சென்றாலும் ஒரே பாட திட்டம் இருக்கும் என்பதாலும் (K.V) என்ற கேந்த்ரிய வித்யாலாயா பள்ளியில் தான் சேர்த்து இருந்தனர்.

பத்தாம் வகுப்பு வரை தன் அப்பாவோடு ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்த அர்ஜுன், அதற்கு பின் படிப்பின் முக்கியத்துவம் யோசித்து, பத்தாம் வகுப்பிற்கு பின் hostel தங்கி படிக்க ஆரம்பித்தான்.

அங்கே தான் ராகுல், மிதுன் இருவரின் நட்பும் கிடைத்தது.. .ராகுல் , மிதுன் தந்தைகளும் மத்திய அரசாங்க வேலையில் உள்ளவர்களே... சொல்லி வைத்தார் போல் மூவருமே வீட்டிற்கு ஒரே பிள்ளைகள் தான்.

மூவருமே படிப்பில் மட்டுமல்ல, விளையாட்டு மற்ற விஷயங்களிலும் கெட்டிக்கரார்களே.. KV பொறுத்தவரை NCC , NSS, ஸ்கௌட் போன்ற தேசிய சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.. இது அனைத்திலும் இவர்கள் மூவரின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

பத்தாம் வகுப்பிறகு பின் ஒவ்வொரு வருடமும், விடுமுறையில் கட்டாயம் NCC, NSS கேம்ப் மூவரும் செல்வார்கள்.

அதே போல் மூவரும் வெவ்வேறு பிரிவு என்றாலும் இன்ஜினியரிங் ஒரே காலேஜில் சேர்ந்து இருந்தார்கள். அங்கேயும் hostel தான்.

அர்ஜுன் மிகவும் கலகலப்பானவன். அதே சமயம் பொறுப்பானவனும் கூட.

காலேஜ் நாட்களில் ஜூனியர் ஆக இருந்த போது , சீனியர்களிடம் நடப்பாக பழகி அவர்கள் நன் மதிப்பு பெற்று இருந்தான். அதே போல் ஜூனியர்களிடம் சகோதர தன்மையோடு நடந்து கொண்டான்.

காலேஜ் final இயர் போது அர்ஜுன் தான் காலேஜ் chairman. அந்த அளவிற்கு செல்வாக்கு பெற்று இருந்தான்.

அர்ஜுன் chairman ஆக இருந்த போது காலேஜ் மூலம் சுற்றுசூழல் விழிப்புணர்வு முகாம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பரீட்சை நேரத்தில் முக்கியமாக டென்த், பிளஸ் டூ மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பது , பெண்களுக்கான தற்காப்பு கலைகள் பற்றிய டெமோ வகுப்பு போன்றவை எல்லாம் ஏற்பாடு செய்வான்.. அவனின் முயற்சிகளுக்கு ராகுலும், மிதுனும் உறுதுணையாக இருப்பார்கள்..

இவர்களின் மூன்றாம் வருட கல்லூரி விடுமுறையின் போது அர்ஜுனின் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு NCC கேம்ப் சென்றனர். அந்த முறை ராகுல்க்கு டைபாய்ட் ஜுரம் வந்து இவர்களோடு அவனால் செல்ல முடியவில்லை.

அவர்கள் தங்குவதற்கு ஒரு ஸ்கூல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.. அங்கேதான் அர்ஜுன் சுபத்ராவை பார்த்தான். அது  மாநிலம் முழுதும் உள்ள NCC students கலந்து கொண்ட நிகழ்வு.. அர்ஜுன் ஏற்கனவே பெஸ்ட் NCC ஸ்டுடென்ட் அவார்ட் வாங்கியவன். அதனால் அந்த NCC மாஸ்டர் அர்ஜுனை லீடர் ஆக்கி விட்டார்.

சுபத்ரா, மகிமா, வருண் மூவரும் சென்னையில் உள்ள பள்ளியை சேர்ந்தவர்கள். அந்த வருடம் வரை அவர்களுக்கு கேம்ப் எல்லாம் உள்ளூரில் தான் இருக்கும். அந்த முறைதான் வெளியூர் வந்தது. இவர்களுக்கு பாடி கார்ட்  வருண். அவன் பாய்ஸ் கூட இருந்தாலும், அவ்வப்போது அவர்களிடம் சென்று பேசிவிட்டு வருவான். அர்ஜுனும், மிதுனும் இதை கவனித்துக் கொண்டு இருந்தார்கள். அப்போதுதான் அலாரம் வைத்து மாட்டியது..

சுபத்ரா வந்த இடத்திலும் விளையாட்டுதனமாகவே இருந்தாள். இதுவரை கலகலப்பனவர்கள் என்றாலும், அர்ஜுன் & கோ அவர்கள் நண்பர்களுக்குள் மட்டும் தான். சுபத்ராவோ யாரை பற்றியும் கவலைபடாமல் எல்லோரையும் கிண்டல் அடிப்பதும், பேர் வைப்பதுமாக இருந்தாள். இது இவர்களுக்கு எரிச்சல் ஊட்டியது.

மொத்தம் பதினைந்து நாட்கள் காம்பில் ... திருநெல்வேலி, தூத்துக்குடி இடையே உள்ள பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று அங்குள்ள நீர்நிலைகளை சுத்தம் செய்வது, தெருக்களில் குப்பை தொட்டி வைத்து மக்கும் குப்பைகள் , மக்கா குப்பைகள் பற்றிய விழுப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற வேலைகள் செய்தார்கள்.

நீர்நிலைகளை சுத்தம் செய்யும் போது சுபத்ரா “அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்” என்று பாட அவளை தொடர்ந்து எல்லோரும்  “ல ..லா. ல.லா  “ என்று பின் பாட்டு பாடினர்.

அதே போல் தெருக்களை சுத்தம் செய்யும் போது “சுத்தம் என்பது நமக்கு “ என்று கமல் மாதிரி கையில் விளக்குமாறுடன் டான்ஸ் ஆட , அதையும் பின்பற்றினர் நம் மாணவ மணிகள்.

அங்குள்ள சின்ன சின்ன பிள்ளைகள் திறந்த வெளியில் தங்கள் கடன்கள் கழிப்பதை பார்த்து விட்டு, அர்ஜுன் , மிதுன் போன்றோர்கள் அவர்கள் பெற்றவர்களிடம் தொத்து நோய்களை பற்றி விளக்கம் அளித்தனர்,.

ஆனால் சுபத்ராவோ அந்த பிள்ளைகளிடம் போய் தன் மொபைல் போனில் அதை பற்றின வீடியோ கார்ட்டூன் மூலமாக வெளிவந்து இருந்ததை போட்டு காண்பித்தாள்.

இது எல்லாம் போதாது என்று , இவர்கள் எல்லோருக்கும் ஸ்கூலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சாப்பாடு இருக்க, சுபத்ரா மட்டும் அங்கு இருந்த பெண்களிடம் நன்றாக பழகி ஏதோ ஒரு சைடு டிஷ் ஆவது வாங்கி வந்து விடுவாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.