(Reading time: 8 - 15 minutes)

த்தனைக்கும் இவர்கள் இரண்டு அலல்து மூன்று நாட்களுக்கு மேல் எந்த ஊரிலும் தங்குவதில்லை. அந்த பதினைந்து நாட்களில் ஆறு அல்லது ஏழு ஊர்கள் முடிக்க திட்டம் போட்டு இருந்தனர். அர்ஜுன்க்கும் மிதுன்க்கும் ஆச்சர்யம் என்னவென்றால் இரண்டு நாட்களில் கிராமத்து மனிதர்களிடம் நன்றாக பழகி தனக்கு தேவையானதை பெற்றுக் கொள்ளும் அவளின் சாமர்த்தியம் தான் வியப்பு.

ஆரம்பத்தில் சுபத்ரா மேல் ஒரு விதமான எரிச்சல் கலந்த கோபம் இருந்தாலும், அங்கே தங்கி இருந்த நாட்களில் அவளின் கலாட்டாக்கள் ஹர்ம்லேஸ் என்று உணர்ந்து கொண்டார்கள்.

இவர்கள் சென்றது half யியர்லி லீவ் என்பதால் அப்போது நியூ இயர் வர, அன்று இரவு பனிரெண்டு மணிக்கு யார்க்கும் தெரியாமல் ஸ்கூல் வாசலில் ஆரம்பித்து, அந்த தெரு முடியும் வரை நீளமான பத்தாயிரம் வாலா சர வெடி வெடித்தனர். போதாதா குறைக்கு அவர்கள் செல் போனில்

“ஹாய்.. everybody.. விஷ் யு எ ஹாப்பி நியூ இயர் “ இந்த வரிகள் மட்டும் பதிந்து வைத்து அதையும் ஊர் கோவிலில் இருக்கும் மைக் செட்டில் போட்டனர்.

இதை கேட்டு ஊரில் இருந்த அனைவரும் எழுந்து வர, அங்கே நம் நாயகி சுபத்ரா தலைமையில் ஒரு கேக் இருக்க, அதை ஒரு சின்ன குழந்தையை கொண்டு கட் செய்ய வைத்தார்கள். அதோடு எல்லாருக்கும் சாக்லேட் வேறு கொடுக்க, யாரும் அவர்களை திட்ட முடியாமல் சென்று விட்டனர்.

அவர்களின் ஆசிரியரோ முறைத்து பார்த்து சென்று விட்டனர்.

மிதுன் அர்ஜுனிடம் “அடேங்கப்பா.. என்னடா இவ... ? இந்த போடு போடறா.. ஸ்கூல் படிக்கும் போதே இவ்ளோ வாலா இருக்காளே... காலேஜ் போனால் அந்த ஊரே தாங்காதுடா சாமி” என்று அங்கலாய்த்தான்.

அர்ஜுன் மனதிலோ எப்படி இவ்ளோ எனேர்சிடிக்கா இருக்கா என்று தான் தோன்றியது. மறுநாள் அவர்களின் ஆசிரயர் கொடுத்த punishment அவர்கள் வெடி வெடித்த தெரு மட்டும் இல்லாது, அந்த ஊரில் இருக்கும் அத்தனை தெருக்களும் சுத்தம் செய்ய வைத்தார் சுபத்ரா தலைமையில் ஆன வானரங்களை.

ஆனால் இத்தனை சேட்டை செய்பவள், NCC ட்ரைனிங் போது, மார்ச் பாஸ்ட், பரடே, மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற பய்றிசிகளில் முதன்மையாக இருந்தாள். ஜூனியர் கிராடில் அவள்தான் எல்லாவற்றிலும் முதல்.. அதே போல் சீனியர் பிரிவில் அர்ஜுன் தான் முதல்.

கேம்ப் முடிந்து மறுநாள் கிளம்ப வேண்டும் என்ற நிலையில், அன்று இரவு எல்லோரும் அவரவர்களுக்கு தெரிந்த விஷயங்களை செய்தனர். அர்ஜுன் நன்றாக கிடார் வாசிப்பான்.. மிதுன் drums ... 

அர்ஜுன் அவனுக்கு மிகவும் பிடித்த  “என் இனிய பொன் நிலவே “ பாடல் பாடினான்..

சுபத்ராவோ “சுற்றும் விழி சுடர்தான் கண்ணம்மா “ பாட்டிற்கு பரதம் ஆடினாள்.

மிதுன் drums வாசிப்பதை பார்த்து சுபத்ரா அவனிடம் ஏதோ சொல்ல, அவனும் சரி என “தில் தொ பாகல் ஹாய் ‘ படத்தில் ஷாருக்கான் வாசிக்கும் drums பீட் வாசிக்க, மகிமாவும் அழகாக western டான்ஸ் ஆடினாள்.

சுபா, மகி இருவரும் teenage பருவத்தில் இருந்தாலும், அந்த நேரத்தை அவர்கள் ஸ்கூலில் cultural என்பது போல் மட்டுமே எண்ணினார்கள்.

ஆனால் அர்ஜுன், மிதுன் அந்த பருவத்தை எல்லாம் தாண்டி விட்டதால் , ஒரு மாதிரி நெகிழ்ந்து இருந்தனர். இருவரின் மனமும் சுபாவையும் , மகியையும் மட்டுமே சுற்றி வந்தது.

மறுநாள் அனைவரும் கிளம்ப, அர்ஜுனின் தாத்தா இவர்களை வழி அனுப்ப திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷன் வந்தார்.

எப்போதும் அர்ஜுன் தன் தாத்தாவிடம் ஓடி வந்து கட்டி கொண்டு

“ஹாய் .. young man .. எப்படி உன்னை அந்த ஓல்ட் லேடி தனியா அனுபின்னாங்க” என்று வம்பு செய்பவன். அன்று “ஹாய் தாத்தா” என்று கூறவும், அவர் மனதில் என்னாச்சு அர்ஜுன்க்கு என்று தோன்றியது.

மிதுனிடம் பார்வையை திருப்பினால், அவனோ இவர் வந்ததை கூட கவனிக்காமல் paltform இருந்த மற்ற பசங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

எதுவோ சரி இல்லை என்று தோன்ற, ரயில் வர நேரமிருப்பதால், இருவரையும் ஜங்ஷன் அருகில் இருந்த அரசன் ஐஸ் கிரீம்ஸ் அழைத்து சென்றார். 

அங்கே கிளோர்க் ரூமில் தங்கள் lugguage வைத்து விட்டு, எல்லோருமே அந்த தெரு முழுதும் shpppoing வந்திருக்க, வேறு வழியில்லாமல் அர்ஜுன், மிதுன் தாத்தாவோடு சென்றனர்.

தாத்தா “ டேய் பசங்களா... என்னடா ஆச்சு? கல கலன்னு இல்லாமல் இப்படி இருக்கீங்க.. ? “ என்று வினவ, முதலில் கொஞ்சம் யோசித்த அர்ஜுன் , பின்

“தாத்தா... “ என்றழைத்து... அந்த முறை சுபத்ரவை சந்தித்தது முதல் , முதல் நாள் வரை உள்ள விஷயங்களை சொல்லி முடித்தவன்,

“தாத்தா.. .எனக்கு என்னவோ அவளை பற்றி நினைக்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கு. .அதோடு அவள் எனக்கு எப்பவும் வேணும்நு தோணுது.. “ என்றான்.

தாத்தா யோசனையோடு மிதுனிடம் “உனக்கு என்னடா பிரச்சினை” என்று வினவ,

அவனும் தான் மகிமாவை பற்றி யோசிப்பதாக கூறினான்.. இதை கேட்ட தாத்தா... ஒரு யோசனை சொன்னார்

மழை பொழியும்

Episode 09

Episode 11

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.