(Reading time: 10 - 19 minutes)

09. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ர்ஜுன் & கோ இங்கே வழக்கடித்துக் கொண்டிருக்க, அங்கே வருண் மிகவும் கோபமாக சுபத்ராவிடம் பேசிக் கொண்டிருந்தான்.. இதை கவனித்த அர்ஜுன், மற்ற இருவருக்கும் கண்ணால் காண்பிக்க, மூவரும் சத்தம் இல்லாமல் அருகில் சென்றனர்.

“ஹேய்.. சுறா.. என்னடி பண்ணி வச்ச.. ? “

“என்னடா கேட்குற..?”

“நீ முழிக்கிற முழியிலே தெரியுது .. அந்த கேப்டன் கூட ஏடாகூடமா ஏதோ வம்பு வளர்த்து வச்சிருக்கன்னு..  சொல்லு என்ன பண்ணின?”

“ஒன்னுமில்லடா.. அவர் .. நார்த் இந்தியன்னு நினைச்சு... தமிழ்ல அவர பத்தி எக்கச்சக்கமா கமெண்ட் அடிச்சு இருக்கேன்... அது எல்லாம் இப்போ அவருக்கு தெரியும்நு யோசிச்சா ஒரு மாதிரி இருக்கு.. “

“என்ன கமெண்ட் பண்ணின.. ? “

“அதா.. அவருக்கு நிறைய பேர் வச்சேன்.. ஆப்பிள் பையன், கேப்டன் பிரபாகரன் , அப்புறம் வாத்தியார் அந்தந்த நேரத்துக்கு சொன்னேன்.. அப்போ எல்லாம் அவர் எங்க பக்கத்துலே தான் இருந்தாரு... அவருக்கு என்ன புரியும்னு நினைச்சேன்.. இப்படி மாட்டிகிட்டனே.. ?” என்று புலம்பினாள்

இதை கேட்ட வருண் “உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? உனக்கு சுப்பீரியர் ஆபீசர் கிட்ட இப்படிதான் நடந்துக்குவியா.. ? உன் விளையாட்டு எல்லாம் இங்கே தான் காமிப்பியா?” என்று பொரிய ஆரம்பித்தான்..

அவனின் கோபம் பார்த்து நிஷா முகம் வெளிற, மகிமா அவனை கூல் பண்ணும் முயற்சியில்,

“ஹேய்.. சோடா.. அவங்கதான் இதை பெரிசு பண்ண மாதிரி தெரியலேயே .. அப்படி சீரியசா எடுத்துகிட்டு இருந்தாங்கன்னா .. முதல் தடவையே சுராகிட்ட சொல்லிருப்பாங்க தானே.. ?’ என,

“நீ கொஞ்சம் வாய மூடு.. எங்கே வந்து எப்படி பேசுறதுன்னு தெரியாது.. ? இவ என்ன மாதிரி இடத்துக்கு வேலைக்கு வந்துருக்கா? அதுக்கு தகுந்த பொறுப்பு வேணாம்.. ஜென்ட்ஸ் manage பண்ற மாதிரி லேடீஸ் ஆர்மிலே பண்றது ரொம்ப கஷ்டம்.. .கூடிய வரைக்கும் யார்கிட்டயும் பிரச்சினை பண்ணமால் நடந்துக்கணும்.. காலேஜ்லே இருந்த மாதிரியே இன்னும் இருந்தா என்ன அர்த்தம்..?”

இப்போது சுறா “ ஏண்டா.. என்ன என்னமோ சொல்ற?”

“பின்னே என்ன..? அவங்க உன்மேல் உள்ள கோபத்திலே .. எதாவது சிக்கல்லே மாட்டி விட்டாங்கன்னா என்ன செய்வே? வெளியில் எதுவும் பிரச்சினைனா ... மத்தவங்க பார்க்க முடியும்.. காம்பஸ்குள்ளே எதாவது மாட்டி விட்டா... நாங்க யாரும் உள்ளே வரமுடியாது ..”

“ஹேய் சோடா .. கேப்டன் அப்படிபட்டவர்னு தோணலைடா.. அவரும் நாங்க ஜாலிக்காகத்தான் பண்றோம்னு புரிஞ்சிருப்பார்.. அதான் ஒன்னும் சொல்லல..”

“ நீ உன்னை மட்டும் யோசிச்சு சொல்றே.. நிஷாவ பத்தி யோசிச்சியா..? அவங்களுக்கு எதாவது ப்ரோப்லேம் வந்தா என்ன செய்வ? அவங்க வீட்லே என்ன சொல்வ?”

அதை உணர்ந்த சுபத்ராவும் .. “ சாரி.. நிஷா.. என்னாலே.. உனக்கும் பிரச்சினையோ.. ? நான்தான் கொஞ்சம் கவனமா இருந்து இருக்கணும்..” என

“சுபா.. நம்ம ரெண்டு பேருக்குமே இது பிரச்சினை ஆகுமோன்னு தான் பயமாஇருக்கு.. “ என,

இப்போ மகிமா மீண்டும், “ஏய் .. ரெண்டு பேரும் சாரி சொல்லிடுங்க.. இனிமேல் ஜாக்கிரதையா இருங்க.. “ என்றாள்..

“ஆமாம்.. இப்போவே சொல்லிடு சுறா... அங்கிள், ஆன்ட்டிக்கு தெரிய வேண்டாம்.. ஒருவேளை அவங்க இவ்ளோ நாள் இல்லாட்டாலும் இனிமேலாவது உங்கள தப்பா நினைக்க மாட்டங்க.. “ என்றான் வருண்..

இருவரும் சரி என்றனர்.

வருண் மேலும் “அதோட.. அவங்க ரெண்டு பெரும் உங்கள பார்க்கிற பார்வை வித்தியாசமா இருக்கு.. அதுனாலே இனிமேல் லிமிட்டா இருங்க.. சரியா?”

இப்போது தன் பாரம்..க்கு வந்த சுறா

“சரிங்க எசமான்.. “ என்றவள், “டேய் சோடா.. ஏதோ லிமிட்ன்னு சொன்னியே.. ஆர்மிலே இருக்கோம்னு பேரு.. நாங்க ரெண்டு பெரும் சரக்கு கூட அடிக்கிறது இல்லை.. அப்புறம் என்னதுடா லிமிட்.. “

“ராட்சசி .. உன்னை.. நான் எத சொன்னா நீ எத கம்பர் பண்றே.. ? உன்னை எல்லாம் டிசைன் பண்ண அந்த ஆண்டவன சொல்லணும்..” என்றவன் தலையில் அடித்த படி,

“அவங்க ரெண்டு பேருக்கும் உங்ககிட்ட கலீக்ஸ் என்ற எண்ணம் தாண்டி வேற பார்வை தெரியுது.. தேவை இல்லாமல் போய் பேச்சு வச்சுக்காதீங்க..”

“அது உண்மைதான்.. அந்த ஜிங்குச்சா.. பச்சை சட்டை நிஷாவ ஒரு மாதிரி தான் பார்க்கிறார்.. ஆனால் கேப்டன் அப்படி இல்லை டா..” என,

நிஷாவோ “ஹேய்.. என்னடி புதுசா சொல்ற.. ? நான் இனிமே அவர்கிட்ட பேசவே போறதில்லை பா..”

ராகுல் பல்லை கடித்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.