(Reading time: 18 - 35 minutes)

வள் அவனை அணைத்தவாறு நிற்க, விஷ்ணுவிற்கோ உலகமே சுழன்று தலை கீழாய் நின்றது. அவளது அணைப்பும், அவளின் கூந்தல் வாசமும், இதமான குளிர்ந்த காற்றும், என எல்லாம் ஒன்று சேர்ந்து அவனை உலகை மறக்க வைத்தது. அவள் மற்றொருவனுக்குச் சொந்தம் ஆகப் போகிறவள் என்பதை மறந்து அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

பெண்ணவளோ அவன் அணைத்ததில் தன்னிலை மறந்து நின்றாள். அவள் உதடுகள் “அர்ஜுனா” என்ற சொல்லை மறந்தது. தன்னவன் உடன் இருக்க அந்த அர்ஜுனன் துணை அவளுக்கு எதற்கு. உலகம் அப்படியே நின்று போய் விடக் கூடாதா? இந்த நொடி இன்னும் நீளாத? இந்த அணைப்பு இன்னும் தொடராதா? என்று அவன் மீது கிறங்கி கிடந்தாள்.

சிறிது நேரம் அப்படியே நின்றுவிட்டு இருவரும், சட்டென்று சுய நினைவு வந்தவர்களாய், இருவரும் விலகி நின்றனர். 

அவளை வெட்கமும், நாணமும் ஆட் கொள்ள, இவனையோ தவறு செய்து விட்டோமே, தவறாக எண்ணிருப்பாளோ? என்ற பயம் ஆட் கொண்டது.

அனு நாணப் பார்வையால், ஓர கண்ணால் அவனைப் பார்க்க, விஷ்ணுவோ வேறு திசை முகம் காட்டி நின்றான்.

மழையின் சத்தத்தை தவிர வேறு ஏதும் அங்குக் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் மழை விட இருவரும், காரில் கிளம்பினர். காரிலும் அதே அமைதி. இன்னும் அவளுக்கு அவன் அணைப்பில் இருந்த மயக்கம் தெளியவில்லை. அதை அதிகரிக்கும் வகையில், ரேடியோவில் மென்மையாக ஒளித்தது அந்தப் பாடல்

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்

ஏன் என்று கேளுங்கள்

 

இளமை சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ

புலம்பும் அலையை கடல் மூடி கொள்ளுமோ

குளிக்கும்  ஓர் கிளி கொதிக்கும் நீர்த்  துளி

ஊதலான மார்கழி நீளமான ராத்திரி

நீ வந்து ஆதரி

 

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

 

இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ

கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ

பாதை தேடியே பாதம் போகுமோ

பாதை தேடியே பாதம் போகுமோ

காதலான  நேசமோ கனவு கண்டு கூசுமோ

தனிமையோடு பேசுமோ

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்..இது

மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்

ஏன் என்று கேளுங்கள்

இது  மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

 

மென்மையாகப் பாடலை முணுமுணுத்தவாறே அவனை அவள் காதல் பார்வைப் பார்க்க,  அவனுக்கோ அவள் பேசாதது பயத்தை அதிகம் ஆக்கியது.

இப்படியாக அவள், அவன் வீட்டின் முன் காரை நிறுத்த, அவன் பேசுவான் என்று அவளும், அவள் பேசுவாள் என்று அவனும் நினைத்து, கடைசியில் இருவரும் பேசவில்லை.  அவன் இறங்கி வீட்டிற்குள் செல்ல, அவன் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துவிட்டு, வீடு வந்து சேர்ந்தாள் அனு.

 மழையில் நினைந்து வரும் மகளைப்  பார்த்த பார்வதி, கோபத்தில் கத்த தொடங்க, அவளோ தன் தாயைக் கட்டி அனைத்து, அவர் கண்ணத்தில் முத்தமிட்டு விட்டு தன் அறைக்கு நோக்கிச் சென்றாள். பார்வதியோ, தன் மகளின் செயலை ஆச்சரியமாகப் பார்த்த வாரு நின்று கொண்டிருந்தாள்.

தன் அறைக்கு வந்தவள், உடையைக் கூட மாற்றாமல் அப்படியே தன் படுக்கையில் சாய்ந்தாள். மேலே விட்டத்தைப் பார்த்தவளுக்கு தெரிந்தது என்னவோ விஷ்ணுவின் முகம்தான். வெட்கத்தில் அவள் முகம் மீண்டும் சிவந்தது. தன் கழுத்தில் அணிந்திருந்த செயினில் இருந்த டாலரை வாயில் கடித்தவாறு, தன் கனவில் கண்ட கனவு முதல் அன்றைய நாள் முழுதும் நடந்த நிகழ்வுகளை எல்லாம் எண்ணிப் பார்த்து தனக்கு சிரித்துக் கொண்டும், வெட்க பட்டுக் கொண்டும் இருந்தாள்.

அவனை விட்டு விலகி இருந்தும், அவன் அருகிலே இருப்பது போல் அவளுக்கு உணர்வு. அவனை அனைத்து நின்ற போது ஏற்பட்டது போல் ஒரு உணர்வை அவளுக்கு இதுவரை யாரும் தந்தது இல்லை. அவன் ஸ்பரிசம் தீண்டும் போதெல்லாம் அனு செத்து செத்துப் பிழைத்ததாய் உணர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.