(Reading time: 18 - 35 minutes)

ப்படி இருக்கானா? ஆளே உடஞ்சி போயிடான் மா. பார்க்கவே பாவமா இருக்கான்” என்று அவர் கூறும் போதே அவர் கூறல் விம்மியது.

“ஏன் பா என்ன ஆச்சி சகா அங்கிள்க்கு. உடம்புக்கு எதுவும் பிரச்சனையா” என்றாள் அனு.

“அவனுக்கு உன் வயசுல ஒரு பொண்ணு இருக்கா தெரியும் இல்ல” என்று கேட்டு விட்டு அனுவின் பதிலுக்காக நிறுத்தினார் ராஜ சேகர்.

“ஆமாம் பா நானும் பாத்துருக்கேன். அவங்களுக்கு என்ன” என்றாள் அனு.

“கொஞ்ச நாளைக்கு முன்னாடி பாத்தப்ப, பொண்ணுக்கு ஒரு நல்ல வரன் வந்துருக்கு, பொண்ணும் சரி னு சொல்லிட்டா னு சொல்லி கல்யாண பத்திரிக்கை கொடுத்தான் மா. உன் கல்யாணம் முடுஞ்சி ஒரு வாரத்துல அந்த பொண்ணு கல்யாணம்” என்று சற்று நிறுத்தி தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டு மீண்டும் தொடங்கினார் “இன்னைக்கு சொல்றான், அந்த பொண்ணு யாரோ ஒரு பையன லவ் பண்ணாலாம்” என்று அவர் கூறியவுடனே அனுவின் முகம் சுருங்கி போனது.

ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொல்லாமல் அவர் கூறியதை கவனித்தாள். “நடுவுல அந்தப் பையன் கூட ஏதோ சண்ட, ரெண்டு பேரும் பிரிஞ்சிடாங்களாம், அப்போதான் அப்பா பார்த்த பையனுக்கு சரி னு சொல்லிருக்க. போன வாரம் அந்த பொண்ணு சொல்லிருக்கா, அவளுக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கால, லவ் பண்ற பையனைத்தான் கட்டிக்க போறேன் னு” என்று சொல்லும் போதே அவர் வார்த்தையில் ஒரு வகை கோபமும், தன் நண்பனுக்காகப் பரிவும் தெரிங்தது.

அனு ஏதும் பேசவில்லை. மீண்டும் ராஜ சேகரே பேசத் தொடங்கினார் “அப்படி அந்த பொண்ணு சொன்னப்ப இவன் எல்லாம் எடுத்துச் சொல்லி, அந்த பையன பத்தி விசாரிக்கிறதா சொல்லி, 2 டேஸ் வெயிட் பண்ண சொல்லிருக்கான். ஆனா மறுநாளே அந்த பொண்ணு வீட்ட விட்டுப் போய் அந்தப் பையன் கூடக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலாம்” என்று கூறிவிட்டு நிறுத்தினார் ராஜ சேகர்.

அனுவிற்கோ என்ன கூறுவது என்றே தெரியவில்லை. கிட்டத்தட்ட இப்போது அவள் நிலமையும் அதுதான். தன் காதலை பற்றிப் பேச வரும் போதா இப்படி ஒரு செய்தியை அவள் தன் தந்தை மூலமாக கேட்க வேண்டும்.

அவளுக்குள் ஒரு கேள்வி எழ அதை தன் தந்தையிடமும்  கேட்டாள் அனு “ஏன் பா காதல் பண்றது தப்ப. அந்த பொண்ணு மனசுல ஒருதன நெனச்சிக்கிட்டு, இன்னொருத்தன் கூட எப்படிப்பா வாழ முடியும்”. கேள்வியைக் கேட்டுவிட்டு தந்தை என்ன கூறுவாரோ என்று அவரையே உற்று கவனித்துக் கொண்டிருந்தாள். அவர் கூற போகும் பதிலில் தான் தன் வாழ்க்கையே இருக்கிறது என்று கூட சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

தன் மகளின் கேள்வி அவருக்கு ஆச்சரியமாக இருந்தாலும், அதற்கான பதிலை நிதானமாகவும் தெளிவாகவும் கூறினார். “உங்களைக் காதலிக்க வேண்டா னு சொல்லல, உங்கள் வாழ்க்கை துணையைத் தேர்ந்து எடுக்குறதுல உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனா உங்களை கேட்டுத்தான் நாங்க உங்க கல்யாணத்த முடிவு பண்ணோம். சரியா?” என்று தன் மகளின் பதிலுக்காக நிறுத்தினார்.

அனுவும் “ஆம்” என்று தலையாட்டினாள். மீண்டும் அவர் “நான் மட்டும் இல்ல, சகாவும் அப்படிதான். அவன் பொண்ணுக் கிட்ட கேட்டுட்டு தான் கல்யாணத்துக்கு முடிவு பண்ணிருக்கான். கல்யாணத்தைப் பற்றி பேசும் போதே, இந்த மாதிரி ஒரு பையன லவ் பண்ணேன் ஒரு சின்ன ப்ரபளம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பா னு சொல்லிருந்தா, அவனும் அவசரப் பட்டு இறங்கியிருக்கமாட்டான் இல்லையா. லாஸ்டா அந்த பொண்ணு கல்யாணம் வேண்டா னு சொன்ன ப கூட, இவன் முடியாது னு சொல்லலயே. வெயிட் பண்ணுமா னு தானே சொல்லிருக்கான். அதையாவது அந்த பொண்ணு புரிஞ்சிருக்க வேண்டாமா. அதுக் குள்ள அவசரப் பட்டு அந்த பொண்ணு அப்படி பண்ணிடுச்சு” என்று கூறிவிட்டு தன் மகளைப் பார்த்தார்.

அதுவரை ராஜ சேகர் கூறியது யாவையும் உண்மையே, ஆனாலும் அவள் கேட்ட கேள்விக்கான பதிலுக்காக காத்திருந்தாள் அனு.

“இப்போ இதனால யாருக்குமா நஸ்டம். பாவம் சகா, பார்த்த மாப்பிளை வீட்டிலேயும் பதில் சொல்ல முடியாம, வெளியில கேக்குர கேள்விக்கும் பதில் சொல்ல முடியாம், மனசு ஒடஞ்சி போயிட்டான் மா. இன்னைக்கு அவன் பேசும் போது தற்கொலை அது, இது னு பேசிட்டான் மா” என்று அவர் கூறும் போதே அவர் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது.

இதுவரை சிறிதும் கலங்காத தந்தையின் கண்களில் கண்ணீரை பார்த்தவுடன் அனுவின் கண்களும் கலங்கி விட்டது. அவளின் கண்ணீர் அவள் தந்தைக்காகவா, அல்லது அவர் கூறிய பதிலில் தன் காதல் சுக்குநூறாக உடைந்து போனதே அதற்காகவா, என்று அவளுக்குத் தெரியவில்லை.

இவள் அழுவதைப் பார்த்த ராஜ சேகர் “ஏய், அனு மா நீ ஏன் டா அழர.” என்று தன் கண்ணீரைத் துடைத்து விட்டு அனுவின் முகத்தையும் ஒரு கையில் ஏந்தி மறு கையால் அவள் கண்ணீரை துடைத்தார்.

அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டு “எனக்கு வருத்தத்தை விட, என் பொண்ண நினைச்ச வரப் பெருமை தான் டா அதிகமா இருக்கு. சகாவுக்கு ஏற்பட்ட நிலமை மட்டும் எனக்கு ஏற்ப்பட்டுச்சினா நான் உயிரோடவே” என்று அவர் கூறி முடிக்கும் முன்பே அவர் வாயை தன் கைகளால் மூடினாள் அனு.

“அப்பா, நா உங்க பொண்ணு பா. எனக்கு நீங்கதான் பா முக்கியம். எனக்காவது, காதலாவது”

ஹலோ பிரெண்ட்ஸ், இந்த எப்பிஸோட் படிச்ச நிறைய பேர் கெஸ் பண்ணிருப்பிங்க, இந்த ஸ்டொரி ரீச்சிங் இட்ஸ் எண்ட். இன்னும் சரியா 2 எப்பிஸோட்தான். பட் அந்த 2 எப்பிஸோடும் நல்ல ஸாவாரசியமா இருக்கும் நு நான் பிராமிஸ் பண்றேன். தேங்ஸ் பிரெண்ட்ஸ் சீக்கிரமா சந்திக்கிறேன்.”

தொடரும் . . .

Episode # 17

Episode # 19

{kunena_discuss:906}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.