(Reading time: 15 - 30 minutes)

ற்கனவே அர்ப்பணாவைப் பற்றிய செய்திகளுக்காக ஆர்வமாய் இருந்தவர்களுக்கு சத்யனின் பதில் அடுத்த துணுக்குசீட்டாய் அமைந்தது. சத்யனுக்கும் அர்ப்பணாவிற்கும் காதலா? என்று அடுத்த செய்தியை கிளப்பிவிட்டிருந்தார்கள் சிலர்.

இதற்கிடையில், சில வாரங்களிலேயே சொன்னதை நடத்தியிருந்தாள் அவள். தன்னை இந்நிலைக்கு தள்ளி வினயை போலிசின் உதவியுடன் தண்டித்திருந்தாள் அர்ப்பணா. ஏற்கனவே சொல்லி இருந்தது போல பத்திரிக்கை நிருபர்களை அழைத்து வினயைப் பற்றி மொத்தமாய் சொல்லியிருந்தாள் அவள். ஏற்கனவே அவள் பக்கம் பேசிய ரசிகர்களுக்கு இது பெரும் வெற்றிப் போல இருந்தது. அவதூறு பேசிய அனேக வாய்களை மூடிவிட்டிருந்தாள் அர்ப்பணா.

அதன்பின் நிமிர்ந்த அவளின் சிரம் எதற்காகவும் தாழ்த்தப்படவில்லை. அவளுக்கும் சத்யனுக்கும் காதல் என்று பேசப்பட்ட செய்தி மட்டும் இப்போதுவரை தொடர்ந்து கொண்டுத்தான் இருக்கிறது.

“பே” என்று கத்தி நிரூவை திடுக்கிட வைத்தாள் அர்ப்பணா.

“ ச்ச..லூசு பயந்துட்டேன் டீ”

“ ஹா ஹா .. தூங்காமல் என்னடீ பண்ணுற நீ?”

“ தூக்கம் வரல அபி !”

“ அதெல்லாம் வரும்..மைண்ட்ல எதையும் நினைக்காமல் இருந்தாலே,தூக்கம் தானாக வரும்..வா வந்து படு” என்று அவளை இழுத்துக் கொண்டு போனாள் அர்ப்பணா.

“நிரூ”

“என்னடீ?”

“ உனக்கு நாளைக்கு ஏதாவது முக்கிய வேலை இருக்கா?”

“இல்லையே ..ஏன் டீ?”

“நாளை ஒரு அவார்ட் ஃபங்க்ஷன் இருக்கு.என் கூட வாயேன்..எல்லாரும் அவங்கவங்க குடும்பத்தோடு வருவாங்க..எனக்காக நீ வரியா?”

“ ஹேய் வான்னு சொன்னால் வரப்போறென்..இதுக்கு ஏன்டீ சீரியல்நடிகை மாதிரி ஃபீலிங்க்ஸ் பொழியுற ? நீ சினிமா நடிகைம்மா”என்றுநிரூ கூறிட அவள் தலையில் செல்லமாய் கொட்டு வைத்தாள் அர்ப்பணா.அதன்பின் தோழியர் இருவரும் பேசிக்கொண்டே நித்திரையில் ஆழ்ந்தனர்.

“கண்மணி அன்போடு காதலன்

நான் அனுப்பும் மெசேஜே

பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா?

நான் இங்கு சௌக்கியமே”.காலையிலேயே கண்மணியின் ஃபோனுக்கு மெசேஜ் அனுப்பியிருந்தான் இந்திரன்.

“ இடியட்..!சண்டே கூட எனக்கு லீவ் விட மாட்டியா டா?” என்று முணுமுணுத்தபடி மெசேஜை டிலீட் செய்தாள் கண்மணி. யார் இந்த இந்திரன் ?வழக்கம் போல தனக்கு விடை தெரியாத அதே கேள்வியை கேட்டுக் கொண்டாள் கண்மணி. வெற்றியிடம் இதைப் பற்றி சொல்லிவிடலாமா ?என்று அவள் யோசிக்கும்போதே அவளின் செல்ஃபோன் சிணுங்கியது.

“ஹலோ”

“ஹேய் விஷூ..எப்படி இருக்க?” உற்சாகமாய் நண்பனின் காதலியிடம் பேசத் தொடங்கினாள் கண்மணி.

“ ம்ம் நான் நல்லா இருக்கேன் மணி..நீ எப்படி இருக்க?”

“அடியே அவன் என்னன்னா என்னை கண்ணுன்னு கூப்பிடுறான்..நீயோ மணிங்குற..அழகாய் கண்மணின்னு சொல்லாம ஏன் இப்படி மெதுவடை மாதிரி பிச்சு பிச்சு பேசுறிங்க?”

“ஹா ஹா..உன் பேரு அவ்வளோ அழகு மணி. அதான் ஆசையோடு கொஞ்சி கூப்பிடுறோம்”

“என்னத்தான் இருந்தாலும், இயக்குனரோட ஆளாச்சே.. உனக்கு பேசவா சொல்லித் தரணும்? என்ன காலையிலேயே ஃபோன்?”

“இல்ல..அவருக்கு ஃபோன் பண்ணேன் எடுக்கல..இன்னைக்கு என்னமோஃபங்க்ஷன் போகனும்னு சொன்னாரே”

“ உன் அவரு இந்நேரம் குறட்டை விட்டு தூங்கிட்டு இருப்பார்.நேத்து ஷூட்டிங் முடிஞ்சு கிளம்பறதுக்கே லேடாகிடுச்சு விஷூ..அதான்.. ஃபங்க்ஷன் சாயங்காலம்தான். நானும்தான் போறேன்.கவலைப் படாதே உன் ஆளை நான் பத்திரமா பார்த்துக்கோ,..நாந்தான் கூடவே இருக்கேன்ல?”

“ நீ கூட இருக்கியே அதான் கவலையே” என்று நக்கலாய் கூறினாள் விஹாஷினி. அவளுக்கு பதிலடி கொடுக்கிறேன் என்ற பெயரில் இன்னும் அரைமணி நேரம் பேசினாள் கண்மணி.

சொல்லி வைத்ததுபோல விஹாஷினி ஃபோனை வைத்த மறுநொடியே இந்திரனிடமிருந்து மெசேஜ் வந்தது.

“மை டார்லிங்..

இன்னைக்கு நீயும் ஃபங்க்ஷனுக்கு வருவியாமே !

நான் இப்போவே உனக்காக காத்திருக்க ஆரம்பிச்சுட்டேன்..

எப்பவும் போல பச்சை கலர் ஜிங்குச்சான்னு புடவை கட்டிக்காமல்,

ஆரஞ்சு கலர் புடவை கட்டிட்டு வா..உனக்கு அந்த கலர் ரொம்ப நல்லா இருக்கும்..நான் உன்னை அங்கே சந்திக்கிறேன்டா” என்று அனுப்பியிருந்தான் அவன்.

“ ஆரஞ்சு கலரா?என்னடா உன் டேஸ்ட்டு இவ்வளோ மட்டமா இருக்கு ?” என்று முணுமுணுத்தாள் கண்மணி. கூடவே அவளுக்கு நிறைய சந்தேகங்கள் உடன் எழுந்தது. டைரக்டர்சார், வெற்றி, விஹாஷினி இவர்களைத் தவிர யாருக்குமே அவள் இன்று அந்த விருது நிகழ்வுக்கு செல்வது பற்றித் தெரியாதே.. அப்படி இருக்கும்போது இவனுக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை இந்திரன் என்ற ஒரு ஆளே இல்லையோ ? விஷூவும் வெற்றியும் சேர்ந்து நடத்தும் நாடகம் இதுவோ ?குழப்பமாய் உணர்ந்தாள் கண்மணி. அந்த கேள்விக்கு பதில் தேடிட வேண்டும் என்ற தீவிரம் எழ,

உடனே அந்த எண்ணுக்கு ஃபோன் போட்டுவிட்டாள் கண்மணி.

இத்தனை நாள் மெசேஜை டிலீட் செய்துவிட்டு தன் வேலையை பார்ப்பவள்முதல்முறையாய் அவன் யாரென்று தெரிந்துகொள்ளும் தீவிரத்தில் அவனை அழைத்திருந்தாள்.

“ ஹலோ” அவளுக்கு மிகவும் பரிட்சயமான குரல் அது ! (யாருனு அடுத்த எபிசோட்ல சொல்லுறேன்)

-வீணை இசைந்திடும்-

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1055}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.