ப்ரியா வானத்தில் இருந்து குதித்து கண்களைக் கூசச் செய்யும் மின்னல் என்றால், வர்ஷினி பூமியில் அமைதியாக மலர்ந்து வாசம் பரப்பும் அல்லி. வர்ஷினி வாயடிப்பாள் என்றாலும், அறியாதவர்களிடத்தில் சிறிது ஒதுக்கம் காட்டுவாள். ப்ரியா அவ்வாறு அல்ல. மறுபடியும் சந்திப்பதற்கு நம்மை அறியாமலேயே ஏங்குவோம். அவ்வளவு அன்பாக இருக்கும் இவளுடன் இருக்கும் தருணங்கள். ஆனால், இவர்கள் சேர்ந்திருந்தால் அந்த இடம் கலகலப்பாக மாறும் என்பது மட்டும் உண்மை. அதனாலேயே ப்ரியா வீட்டிற்கு வருவது அறிந்தால் தன் முக்கியமான வேலைகளைக் கூட ஒதுக்கிவைத்துவிடுவார் வர்ஷினியின் தந்தை.
“வந்துட்டேன் சுக்கிரீவன் தங்கையே” என்றாள் ப்ரியா. இருவரும் ஆரம்பித்தால் நிறுத்தமாட்டர் என்பது அறிந்ததால் வர்ஷினி ஏதேனும் கூறுவதற்குமுன் வைதேகி அனைவரையும் வரச்சொன்னார் கோவிலுக்கு.
அனைவரும் லக்ஷுமணனின் காரில் கோவிலை நோக்கி விரைந்தனர். போகும்வழியில் வர்ஷினியிடம் லக்ஷ்மணன் கேட்டார், “மாப்பிள்ளை வரலியாமா?”
“அவருக்கு ஏதோ வேலை இருக்காம்பா. ஈவினிங் வீட்டுக்கு வருவதாக சொன்னார்”
அதற்குமேல் இதனைப்பற்றி எதுவும் பேசவில்லை இருவரும். ஒருவரையொருவர் கலாய்த்துக்கொண்டே கோவிலுக்கு வந்தனர் அனைவரும்.
சாமியைக் கும்பிட்டுவிட்டு இரு பெரியவர்கள் பெயரிலும் அர்ச்சனை செய்துவிட்டு அருகிலேயே இருந்த ஆசிரமத்திற்கு சென்று அங்கு அனைவருக்கும் உணவு வழங்கிவிட்டு திரும்பினர். அந்த இடத்தில் இருந்த ஒவ்வொருவரும் தங்கள் கவலைகளை மறந்து இருவரையும் வாழ்த்தியதில் அனைவரது மனம் நிறைந்தாலும், கணத்தும்போனதும் நிஜம்.
இன்று அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்ததால் மதியம் வர்ஷினியின் அம்மா செய்த பல்சுவை உணவை ஒருபிடி பிடித்துவிட்டு ஒரு குட்டித்தூக்கம் போட்டனர் வர்ஷினியும் ப்ரியாவும்.
முதல் அத்தியாயத்தை உங்களிடம் அளித்துவிட்டேன். இதில் நடந்த அந்த Nescafe doubt வந்தது வேறு யாருக்கும் அல்ல ஃப்ரெண்ட்ஸ், எனக்குதான். என்னங்க பண்றது, புக்ல இருக்குற எல்லா sums-க்கும் formula கரெக்டா தெரியுது, ஆன இந்த சமையல்ல இருக்குற combination மட்டும் புரியவே மாட்டிங்குது. Nescafe sunrise எந்த வகைன்னு யாராவது சொன்னா ரொம்ப உபயோகமாக இருக்கும். எழுதியது பிடிச்சிருந்தா கமென்ட் பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்; இல்லையென்றாலும் suggestions தாங்க, so that I can improve. கூடிய சீக்கிரமே அடுத்த அத்தியாயத்துடன் உங்களை சந்திக்கிறேன். அதுவரை நன்றி, நன்றி, நன்றி!!!
{kunena_discuss:1075}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.