(Reading time: 15 - 29 minutes)

02. மார்பில் ஊறும் உயிரே!!! - மது

மழலைப் பிழைகளின் கவிதை நீ!!

Marbil oorum uyire

கொண்டை முடி அலங்கரித்து

கொஞ்சும் கிளி கையில் வைத்து

அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்...

அந்த அழகிய மாநகர்

மதுரையிலே மதுரையிலே மதுரையிலே"

பாடலுக்கு ஏற்ப அழகாய் அபிநயம் செய்து தனது நாட்டியத்தினால் அரங்கத்தில் இருந்த அனைவரையும் மதுரை மாநகருக்கே அபூர்வா அழைத்துச் சென்றிருக்க சித்தார்த்தோ காலத்தின் ஏட்டினிலே நினைவுப் பக்கங்களை பின்னோக்கி புரட்டிக் கொண்டிருந்தான்.

ர். கே. புரம்.

தமிழர்கள் அதிகமாக வாழும் தில்லியின் முக்கிய பகுதிகளில் ஒன்று. மத்திய அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள் அமைத்துள்ள இடம்.  கடவுளான முருகன் ஸ்வாமிநாதனாக காட்சி தரும் “மலை மந்திர்” இங்கு பிரதானம். தில்லி தமிழ் சங்கமும் இங்கு தான் அமையப் பெற்றிருக்கிறது.

அங்கு உள்ள பிரசித்தி பெற்ற பள்ளியில்  ஒன்றாம் வகுப்பில் சித்தார்த் படித்துக் கொண்டிருந்தான்.

"சித்தார்த்  இஸ் வெரி வெரி நாட்டி. யாருக்கும் தொல்லை எல்லாம் தர மாட்டான். பட் ஏதாச்சும் சேட்டை செஞ்சுட்டே இருப்பான்...  ஸ்டடீஸ் அண்ட் அதர் ஆக்டிவிட்டீஸ்ல பர்ஸ்ட். ரொம்ப இன்டெலிஜெண்ட். அதனாலேயே அவன் செய்யுற சேட்டை  எல்லாம் கண்ணனின் குறும்பாகவே நாங்க ரசிக்கிறதுண்டு"

சித்தார்த்தின் நர்சரி வகுப்பு ஆசிரியைகள் இப்படி தான் அவனைப் பற்றி முன்னுரை வாசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒன்றாம் வகுப்பு ஆசிரியை ஒவ்வொரு முறை பெற்றோர் ஆசிரியர் சந்திப்பின் போது முற்றிலும் எதிர்பதமாகவே சொன்னார்.

"ஹோல் கிளாஸ் எல்லா செக்ஷன்ஸ் சேர்த்து பர்ஸ்ட் வரான். புத்திசாலியா இருக்கான். ஆனா எப்போவுமே ஒரு உணர்ச்சியே இல்லாத முகத்தோட எதிலும் இன்டரஸ்ட் இல்லாத மாதிரியே இருக்கான். யார் கூடவும் பேசுறது இல்ல.. அவன் ஒரிஜினல் நேச்சர் இதுன்னா ஓகே. பட் நர்சரில இவனோட சேட்டை ஹோல் ஸ்கூலேயும் பாப்புலர். நவ் ஹி இஸ் நாட் ஆல்ரைட்"

இதைக் கேட்கும் போதெல்லாம் சுசீலா மனம் நொறுங்கிப் போவார்.

"இன்னிக்கு  அவன் டீச்சர் இப்படி சொல்றாங்கங்க" கணவர் தோள் சாய்ந்து கண்ணீர் வடிப்பார்.

"சின்னக் குழந்தை தானே.  நமக்கே இன்னும் ஆறலையே சுசி"  கிருஷ்ணமூர்த்தி உள்ளுக்குள் மிகுந்த வேதனை கொண்டிருந்தாலும் மனைவியை சமாதானம் செய்தார்.

"யாராச்சும் சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போகலாமா"

"எனக்கு என்னவோ அது வேஸ்ட்ன்னு தோணுது. அவங்ககிட்ட நல்லபடியா பேசிட்டு வந்திருவான். அவங்க ஒன்னும் இல்லைன்னு அனுப்பிருவாங்க. அப்படி தானே மத்தவங்க கிட்ட பிஹேவ் செய்யறான்.. உள்ளுக்குள்ளே மருகுறான்"

"அவன் கிளாஸ்ல டல்லா இருக்கானே"

"அவன் நாள்ல பாதி நேரம் ஸ்கூல்ல தான் இருக்கான். அதுனால அவன் ஒதுங்கி இருக்கது வெளிப்படையா தெரியுது. சந்தோஷ் இருக்கானே இவன் பிரண்ட். அவன் கூட நல்லா பேசி விளையாடுறானா"

"எங்க.. நீங்க வேற. அவன் கூடவே முன்னாடி எல்லாம் சுத்துவான். இப்போ என்னவோ தெரில அவன் வீட்டுக்கு போயிட்டு வருவோமான்னு சொன்னா நான் வரலைன்னு சொல்லிடறான்"

"சுசி நம்ம சித்து வெரி வெரி பிரைட் சைல்டு. அம்மாவை வேற இந்த பத்மா அங்கேயே இருத்தி வச்சுட்டா"

"அது சரி பத்மா குழந்தைகளோட தனியா எப்படி இருப்பா...என்ன நீங்க இப்படி பேசுறீங்க"

"அதுக்கில்ல சுசி. அவன் அம்மாகிட்ட நம்மள விட அட்டாச்ட்"

"அதான் பொங்கலுக்கு வரேன்னு சொல்லிருக்காங்களே...உங்க தங்கை புருஷரும் லண்டன்ல இருந்து இந்த மாசம் வந்திடுவார்"

"அம்மா கிட்ட இவன் இப்படி இருக்கான்னு சொல்லி லெட்டர் எல்லாம் போடலையே"

"அதெல்லாம் அவங்ககிட்ட ஏதும் சொல்லல...அவங்க வரதுக்குள்ள இவன் சரியாகிடனும். இல்லைனா ஏன் முன்னாடியே சொல்லலைன்னு நமக்கு தான் டோஸ் விழும்"

மனைவி இயல்பிற்கு வந்ததும் கிருஷ்ணமூர்த்தி நிம்மதி அடைந்தார்.

ந்தப் பள்ளியில் கால், அரை மற்றும் ஆண்டுத் தேர்வில் வகுப்பின் எல்லா பிரிவுகளிலும் முதல் வரும் மாணவருக்கு காலை அசம்பிளியில் மொத்த பள்ளியின் மாணவர்கள் முன்னிலையில்  ஷீல்டு கொடுத்து பாராட்டும் வழக்கம் இருந்தது.

நர்சரியிலும் சரி, கடந்த கால் ஆண்டு தேர்விலும் சரி சித்தார்த் தான் எப்போதும் ஷீல்டை தட்டிச் செல்வான்.

அந்த ஆறு வயதிலும் சற்று உயரமாக மிடுக்காக இருக்கும் அவனுக்கு ஒரு தனி ஃபேன் க்ளப்பே இருந்தது.

அவனிடம் சிநேகிதம் பாராட்ட அவன் பிரிவு மாணவர்கள் மட்டுமில்லாது அடுத்த பிரிவு மாணவர்களும் முயல்வதுண்டு.

ஆனால் அவனோ ஒன்றாம் வகுப்பு தொடங்கியதில் இருந்தே சந்தோஷ் தவிர யாரிடமும் தேவைக்கு அதிகமாக பேசுவது கூட இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.