(Reading time: 15 - 29 minutes)

ங்கிலம் அபூர்வாவிற்கு மிகச் சரளமாக வரும். அவளது நர்சரி ஆசிரியை ஒரு ஆங்கிலோ இந்திய பெண்மணி. சரியான உச்சரிப்புடன் ஆங்கிலத்தில் உரையாட பயிற்றுவித்திருந்தார். ஆகையால் மீசைக்கு அவளுக்கு ஆங்கிலத்தில் என்னவென்று தெரிந்திருந்தது.

சித்தார்த்தும் சந்தோஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவள் தமிழ் பேசும் பெண் என அறிந்ததில் அவர்களுக்கும்  மகிழ்ச்சி...

 “ நீ பில்லி...உன் மூஞ்சில மீசை... வைட் மீசை"  சிரிப்புடன் சித்தார்த் அவளை பார்த்து சொல்லிக் கொண்டிருந்தான்.

சந்தோஷிற்கு வியப்பு ...இத்தனை நாள் சித்தார்த் அமைதியாக இருந்தவன் இப்போது உற்சாகமாகி விட்டது குறித்து சந்தோஷமானான். ஏனோ அபூர்வா மீது அவனுக்குப் பிரியம் தோன்றி விட்டிருந்தது. தன் நண்பனை சிரிக்க வைத்தவள் என்பதாலோ என்னவோ…

"பில்லினா பூனை தானே” சந்தேகமாகக் கேட்டாள் அபூர்வா.

"பில்லினா பூனை தான்... உன் மூஞ்சில மீசை இருக்கே. அதான் நீ பூனைக்குட்டி"

சித்தார்த் முற்றிலுமாக மடை திறந்த  வெள்ளமானான்

“உனக்கு ஹிந்தி நல்லா தெரியுமா”

“பேச  தெரியாது... கிளாஸ்ல மிஸ் சொல்லிக்குடுத்தாங்க பில்லினா பூனைன்னு. நாங்க மெட்ராஸ்ல இருந்து வந்தோம்"

"எங்க  அத்தை வீடு கூட மெட்ராஸ்ல தான் இருக்கு. காவ்யாக்கு கூட ஹிந்தி தெரியாது" உற்சாகமாக சொல்ல ஆரம்பித்தவன் உடனேயே  ஊசி குத்திய பலூனை போல சுருங்கிப் போனான்.

“என்னாச்சு”

“நீ பில்லி தான்...பில்லி பில்லி பில்லி" சித்தார்த் மீண்டும் உற்சாகமானான்.

அபூர்வாவிற்கு அவன் தன்னை கேலி செய்கிறான் என்று தெரிந்தாலும் ஏனோ அவன் மீது கோபம் வரவில்லை. அவனது சந்தோஷமான  முகம் தான் அவளுக்குத் தெரிந்தது... ஆனாலும் தான் கேலி செய்யப்படுவதை அவளால் அனுமதிக்க முடியவில்லை. 

"நீ ஏன் என்ன கேலி பண்ற" மிகவும் மெல்லிய குரலில் அந்த சின்ன கண்கள் இன்னும் இடுங்க அவள் கேட்கவும் சித்துவுக்கோ அவளைப் பார்க்க கேலியாக எல்லாம் இல்லை... கேலி செய்யும் நோக்கத்திலும் அவன் சொல்லவில்லை.

அவள் அவனை விட சிறியவளாக இருந்தாள். அந்த குல்லாவிலும் வுல்லன் உடையிலும் பொடி பொடியாக கண்கள், குண்டு கன்னங்கள் அதோடு பாதாம் பால் வரைந்து விட்டிருந்த  மீசையிலும் ஒரு பூனைக்குட்டியைப் போலவே சித்தார்த்துக்குத் தெரிந்தாள்.

"நீ பூனைக்குட்டி மாதிரி அழகா இருக்க..அதான் பில்லின்னு சொன்னேன்" அவள் சோகமாக, கேலி செய்கிறாயா என கேட்கவும் உடனே அதை மறுத்துச் சொன்னான். யாரையும் ஹர்ட் செய்யக் கூடாது என்பது சித்துவிற்குச்  சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்த பால பாடம்.

" பூக்குட்டி அழகா இருக்க" என்று  டாடி கொஞ்சுவதைப் போல சித்தார்த்தும் தன்னை அழகா இருக்கேனு கொஞ்சுறான் போல என்று நினைத்தாள். தந்தைக்கு நிகர் அவன் என மனதில் பதிந்து விட்டதோ அன்றே.

 சித் அவனை தோற்கடித்தப் பெண்ணுடன் உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு அங்கு மற்ற மாணவர்கள் கூடி விட்டிருந்தனர்.

சித்தார்த் பில்லி என்று அபூர்வாவை கேலி செய்கிறான் என்று மற்ற மாணவர்கள் நினைத்துக் கொண்டனர்.

சித்துவின் மற்றொரு வகுப்புத் தோழன் மிதுன் சித்து  சொன்னதை தானும் பின்பற்றியே," பில்லி தேக்கோ பில்லி" என அபூர்வாவை பார்த்துக் கேலி செய்ய மற்றவர்களும் கோரஸ் பாடினர்.

"பில்லி மத் போலோ (பூனைன்னு சொல்லாதே).. ஹர் நேம் இஸ் அபூர்வா… கோயி பி உசே ச்சேடா மாரூங்கா” ( யாராச்சும் அவளை வம்பிழுத்தா அடிப்பேன்) அவளைப் பரிகாசம் செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட சித்தார்த் கோபமாய்   சொல்ல மற்ற மாணவர்கள் திகைத்து போயினர்.

அபூர்வா திருதிருவென முழிக்க சந்தோஷ் அவளுக்கு  மொழிபெயர்த்துக் கொண்டிருந்தான்.

ஹிந்தி புரியாத தமிழ் பேசும் பூனைக்குட்டி போல இருந்த அச்சிறிய பெண் இனி தன் பொறுப்பு என்று மற்றவர்களுக்கு சொல்வதைப் போல

"நீ வா " என்று அவள் கையைப் பிடித்து கொண்டு அங்கிருந்து அகன்றான் சித்தார்த். சந்தோஷும் இவர்களுடன் இணைந்து பின் தொடர்ந்து சென்றான்.

அவனது இந்தச் செயலும் அபூர்வாவின் மனதில் ஆழப் பதிந்து போனது. எப்போதும் சிறு வயதில் நடக்கும் நிகழ்வுகள் நம் மனதின் ஆழத்தில் பதிந்து போகும். எத்தனை மாற்றங்கள் வந்தாலும் அந்த நிகழ்வின் தாக்கம் என்றும் இறுதி வரை நம்மை அறியாமலே தொடர்ந்து வரும்.

சித்தார்த் தன் பழைய தோழர்களை அவளுக்காக  எதிர்த்து நின்றது, ஏற்கனவே அப்பாவை போல என்ற நினைப்பும் இதுவும் சேர்ந்து அபூர்வா மனதில் அவன் மேல் நம்பிக்கையாய் வேர் விட்டிருந்தது. அந்த அறியா பருவத்தில் இதை எல்லாம் உணரும் நிலை இல்லை எனினும் வரும் காலங்களில் இந்த நம்பிக்கை தான் அவளைக் காத்து நிற்கப் போகிறது என்று அப்போது அவள் அறியவில்லை தான்.

கைதட்டல் கரகோஷம் அந்த அரங்கத்தையே அதிர செய்ய சித்தார்த் கடந்த காலத்தின் சுவடிகளை  தன் நினைவுப் பெட்டகத்தில் பத்திரமாய் பூட்டி வைத்து நிகழ்கால தருணத்திற்கு வந்து சேர்ந்தான்.

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1080}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.