(Reading time: 14 - 28 minutes)

03. மார்பில் ஊறும் உயிரே!!! - மது

வழிகின்ற விழிநீரின் பாலைவனம் நீ!!!

Marbil oorum uyire

மேடையில் அபூர்வா சபையோரின் பாராட்டினை ஏற்று கை கூப்பி வணங்கிக் கொண்டிருந்தாள்.

"அம்மா" அருகில் அமர்ந்திருந்த அன்னையின் பால் சாய்ந்து அவருக்கு கேட்கும் படி செவிகளின் அருகே சென்று அழைத்தான் மைந்தன்.

"என்னடா"

"நெக்ஸ்ட் என்னம்மா ப்ரோக்ராம்"

"நம்ம ருக்மணி மாமி டேன்ஸ் ஸ்கூல் குட்டீஸ் ஆட போறாங்க"

"அப்புறம்"

"அப்புறம் ஒரு நாடகம் இருக்கு.

"மொமென்ட்டோ எல்லாம் உண்டா"

“என்னடா இன்னிக்கு தான் புதுசா இங்க வர்ற மாதிரி கேள்வி கேக்குற. உனக்கு இன்னிக்கு என்ன ஆச்சு" அவர் சித்தார்த்திடம் பேசிக் கொண்டிருக்கும் போதே  சுசீலா கிருஷ்ணமூர்த்தி தம்பதியினரை மேடைக்கு வருமாறு அழைத்துக்  கொண்டிருந்தனர்.

"அபிக்கு மொமெண்ட்டோ குடுக்க கூப்பிடுறாங்க...நீ இங்கேயே இரு"

"சரிம்மா"

மேடையில் பெரியவர்களின் பாதம் பணிந்து தன் குரு சுசீலாவிடமிருந்து நினைவுப் பரிசை பெற்றுக் கொண்டாள் அபூர்வா.

"இதையாவது போய் க்ளிக் பண்ணுவோம்...அவ டான்ஸ் ஆடியதை கவனிக்காம நான் வேற மலரும் நினைவுகளுக்குப் போய்ட்டேன்...சும்மாவே சந்திரமுகி பேய் இதுல லகலகலகன்னு ஆடுனா நான் அம்பேல்" தனக்குள்ளேயே பேசிக் கொண்டவன் மேடையில் இருந்த மூவரையும் தானே வடிவமைத்த ஸ்மார்ட் மொபைல் மூலம் படம் பிடித்தான்.

"சித்து... போட்டோஸ் காமி" மேடையில் இருந்து இறங்கியதுமே நேராக அவனிடம் வந்து அவன் மொபைலை எட்டிப் பார்த்தாள்.

"பில்லி...நீ சேஞ் பண்ணிட்டு கெளம்பு…போகலாம்"

"ருக்மணி மாமி ஸ்டுடண்ஸ் ஆடுறாங்க...நான் பார்க்கணும்... நீயும் இரு பார்த்துட்டு டின்னர் சாப்பிட்டு போலாம்"

"20 வருஷமா ஒரு குட்டி சாத்தான் ஆடுறத பாவப்பட்ட ஜீவன் பார்த்துட்டு இருக்கேனே பத்தாதா.. வா நாம வீட்டுக்குப் போகலாம்"

"பப்ளிக் பிளேஸ் ஆச்சேன்னு பார்க்குறேன்" தக்காளி பழம் என அவள் முகம் சிவக்க

"பில்லி உன் டொமட்டோ ஃபேஷியல் டெமோ போதும். நான் இப்போ யு டியூபில் அப்லோட் பண்ண எல்லாம் தயாரில்லை. இப்போ வரியா இல்லையா"

"நான் வரமாட்டேன்... நீ போ" முகத்தைத் திருப்பிக் கொண்டு சுசீலாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

"நீ வரலைனா போ...நான் வீட்டுக்கு போறேன்"

நேராக கிரீன் பார்க்கில் இருந்த தனது வீட்டை நோக்கி பைக்கை செலுத்தியவன் என்ன நினைத்தானோ அடையார் ஆனந்த பவன் முன் வண்டியைப் பார்க் செய்தான்.

"ஒன் கே.ஜி பால்கோவா, இந்த சாக்லேட் பாக்ஸ் அவ்ளோ தான்...பேக் பண்ணிருங்க" என்றவன் பணத்தை செலுத்தி இனிப்புகளை வாங்கிக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றான்.

ந்த இரண்டடுக்கு பங்களாவின் மேல் தளம் முழுதும் சித்தார்த்தின் ராஜ்யம். சித்தார்த்தின் பால்ய நண்பன் சந்தோஷ் இன்று ஒரு பிரபல கட்டிட வல்லுநன். அவனிடம் தான் இந்த வீட்டைக் கட்டும் பொறுப்பினை ஒப்படைத்திருந்தான் சித்தார்த்.

படுக்கை அறைக்குச் சென்றவன் அங்கிருந்த கட்டிலின் தலைப் பகுதியில் தனது இரு கரம் பதிக்க அந்த தலைப்பகுதி பலகை முழுவதும் ஒரு செயற்கை மீன்தொட்டியென மாற்றம் கொண்டது.

இங்கும் அங்குமாக 26 செயற்கை தங்க மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. சற்றே கூர்ந்து பார்த்தால் அதில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களின் கண்மணிகளில் ஒரு எண் இருப்பது தெரியும்.

தன் ஆள் காட்டி விரலால் 16 , 15 , 15 , 18 , 9 என்ற எண்கள் கொண்ட மீன்களை ஒன்றன் பின் ஒன்றாக அழுத்த ஒரு பெரிய சுறா மீன்  வாயைப் பிளந்து கொண்டு அந்த ஸ்க்ரீனில் தோன்றியது... இதுவும் கிராபிக்ஸ் சுறா தான். 

கட்டிலின் தலைமாட்டில் சாதாரணமாக தலை வைத்து படுப்பது போல படுத்துக் கொண்டவன் ஒரு கையை உயர்த்தி அந்த சுறாவின் பெரிய பல் ஒன்றில் தனது கட்டை விரலைப் பதிக்க அது அவனை உள்ளே இழுத்துக் கொண்டது. சில ஏ டி எம் மெஷின்கள் நம்  கார்டை விழுங்கி விடுமே அது போல.

அவன் உள்ளே சென்றதுமே கட்டிலின் தலைப் பகுதி சாதாரணமாக மாறி விட்டிருந்தது.

அவன் ஒருவன் தவிர வேறு எவருக்கும் தெரியாத ரகசிய அறை அது.. அபூர்வா விதி விலக்கு. அவளுக்குத் தெரியாத ரகசியம் என்று சித்தார்த் வாழ்வில் எதுவும் இல்லை, ஒன்றைத் தவிர.

அந்த அறை முழுவதும் வயர்களும் புது டிசைனில் கணினி போன்ற இயந்திரங்களும் ஒரு மினி ரோபோட்டும் இன்னும் சில கருவிகளும் இருந்தன... என்னனென்ன கருவிகளோ சித்தார்த்துக்கே வெளிச்சம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.