(Reading time: 14 - 28 minutes)

சிறுமி கூறியதைக் கேட்ட சித்தார்த் சந்தோஷமாக புன்னகைத்தான் ஒரு நொடியே.. உடனேயே அபூர்வா கை பிடித்து கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு சென்றான்.

"அம்மா நானும் அபியும் புறப்படுறோம். அபி இன்னிக்கு நம்ம வீட்லேயே தங்கிக்கட்டும். நான் அத்தைகிட்ட சொல்லிக்கிறேன்..அவ திங்ஸ் எல்லாம் நீங்க கொண்டு வந்துடுறீங்களா ப்ளீஸ்"

அபூர்வாவின் உணர்ச்சியற்ற முகத்தை பார்த்தவர் ஏதோ சரியில்லை என்று யூகித்துக் கொண்டார்.

"சரிடா நீங்க கிளம்புங்க."

"அப்பா யார் கூடவோ பேசிட்டு இருக்கார்...சொல்லிருங்கம்மா"

"நான் சொல்லிக்கிறேன். இவளை டான்ஸ் டிரஸ்ஸோட பைக்லேயா கூட்டிட்டு போக போற"

"இல்லமா நான் நடுவில வீட்டுக்குப் போய் கார் எடுத்துட்டு வந்துட்டேன்"

"சரிடா...அபி நம்ம வீட்லேயே இன்னிக்கு ஸ்டே பண்ணிக்கோ என்ன"  அபூர்வாவின் முகம் பற்றி சுசீலா கூற "சரி அத்தை" ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.

கண்ணாலேயே நான் பார்த்துக்குறேன் என்ற மகனிடம் தாயும் சம்மதம் சொல்ல அவளை அழைத்துக் கொண்டு தனது ஆடியில் விரைந்தான்.

மிழ் சங்கமும் இவனது வீடும் பத்தே நிமிட பயணம் தான்...ஆனால் பல யுகமாய் தோன்றியது அவனுக்கு. அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று தெரிந்தாலும் முழுவதுமாக அவளது எதிர்வினையை அவனால் கணிக்க முடியவில்லை. அவனது  ஒரு கரத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு மௌனமாகவே பயணித்தாள்.

வீட்டின் வாயிலை அடைந்த போது மொபைலை இயக்கி அபூர்வாவின் அன்னையை அழைத்தான் சித்தார்த். ரத்னாவதி நிலாவோடு பெங்களுருவில் தங்கி இருந்தார். நிலா இன்டீரியர் டிசைனிங் படித்துக் கொண்டிருந்தாள். 

"அத்தை"

"சொல்லு சித்து... ப்ரோக்ராம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா"

"முடிஞ்சுது அத்தை...இன்னிக்கு அபி நம்ம வீட்லேயே ஸ்டே பண்ணிக்கட்டும்னு அம்மா சொன்னாங்க"

"என்ன சித்து நம்ம வீட்லே தங்க என்கிட்டே சொல்லிக்கிட்டு இருக்கணுமா என்ன...வீக் எண்ட் அங்கேயே தங்கியிருக்கட்டும்...விட்டா சோறு தண்ணி இல்லாம ரிசர்ச் செய்யறேன்னு இருப்பா"

"சரி அத்தை..அப்புறமா பேசுறேன். நிலா பேபி கிட்டேயும் சொல்லிருங்க பை"

"சரி சித்து பை"

எப்போதும் அவன் தன் அன்னையிடமோ தங்கையிடமோ பேசும் போது வேண்டுமென்றே  வம்பு இழுப்பவள் இன்று அமைதியாகவே இருந்தாள்.

வீட்டை அடைந்ததும் காரை நிறுத்தியவன் சுற்றி வந்து கதவை திறந்து அவளை தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

அங்கிருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்று தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் தோள் மீது சித்தார்த் கரம் பதிக்க அதற்காகவே காத்திருந்தது போல அவன் மார்பில் சாய்ந்து கதறினாள்.

ஒரு கையால் அவளை இறுக்க அணைத்துக் கொண்டவன் மறு கரத்தால் அவள் தலையை மென்மையாக வருடிக் கொடுத்தான்.

சித்தார்த்தின் விழிகள் அவனை அறியாமலே மடை திறந்த வெள்ளம் ஆகின.

அவன் விழிநீர் அவள் கழுத்தில் தெறிக்கவும் விலகி அவன் முகத்தைக் கண்டவள் மீண்டும் அவனை இறுக அணைத்துக் குலுங்கி குலுங்கி அழுது கரைந்தாள்.

அவள் அன்னையின் மடி கூட அறிந்ததில்லை ஆனால் அவனது மார்பிற்கு மட்டுமே தெரியும் அவள் கண்ணீர் யாதென்று...

சற்று நேரத்தில்  அமைதி அடைந்தவள் அவனிடம் இருந்து மெல்ல விலகினாள்.

"பில்லி... கொஞ்சம் திரும்பி உன் சுயரூபத்தை கண்ணாடில பாரேன்" அவளை சகஜ நிலைக்கு கொண்டு வர சித்தார்த் சீண்டினான்.

அவள் திரும்பி தன் தோற்றத்தை கண்ணாடியில் பார்க்கவும் தான் தெரிந்தது..அழுததால் ஒப்பனை கலைந்து அவன் தன்னை கலாய்த்தது போல சந்திரமுகி பேய் ரூபமாக காட்சியளித்தாள்.

மற்ற சமயமானால் ஒரு யுத்தமே தொடங்கியிருக்கும். அப்போதோ அவனுக்காக  ஒரு மெல்லிய புன்னகையை வலுக்கட்டாயமாக உதிர்த்தாள்.

"சரி சரி என்னைய இன்னும் பயமுறுத்தாம போய் ரிஃப்ரேஷ் பண்ணிட்டு வா"

வள் குளித்து பாப் செய்யப்பட்டிருந்த தலைமுடியை துவட்டியபடியே ஒரு லாங் ஸ்கர்ட்டும் தொள தொள டி ஷர்ட்டும் அணிந்து கொண்டு வந்தாள்.

அவன் கிச்சனில் தோசை சுட்டுக் கொண்டிருக்கவே கிச்சன் மேடை மேல் ஏறி அமர்ந்து கொண்டு அவன் சுட சுட இவள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

"ஏ பில்லி...எனக்கும் தானே பசிக்குது..ஒழுங்கா வந்து தோசை சுடு..நான் சாப்பிடணும்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.