(Reading time: 13 - 25 minutes)

தட்டில் புன்னகையோடு அலைபேசியில் ஒளிர்ந்த அந்த பெயரை பார்த்துக் கொண்டிருந்த துஷ்யந்த்... பின்பு அந்த அழைப்பை ஏற்று பேசினான்...

"ஹலோ.."

"ஹலோ நான் கங்கா பேசறேன்... என்னப்பா டெல்லி போய் ரீச் ஆகிட்டீங்களா..??"

"இப்போ தான் ஏர்போர்ட்ல இருந்து வெளியே வந்து, கார்ல ஹோட்டல் போயிட்ருக்கேன்ம்மா.. இன்னும் கொஞ்ச நேரத்துல ஹோட்டல் போயிடுவேன்... ஸாரிம்மா, நான் ஏர்போர்ட்ல இருந்து வந்ததுக்கு அப்புறமும் மொபைல ப்ளைட் மோட்ல இருந்து சேன்ஞ் பண்ணாம இருந்துட்டேன்..."

"பரவாயில்லங்க... ப்ளைட் கிளம்பின டைமை கால்குலேட் பண்ணி நான் போன் பண்ணேன்... ஃபர்ஸ்ட் ரெண்டு கால் போகலைன்னதும், கொஞ்சம் டென்ஷனா தான் இருந்துச்சு... ஆனா இப்போ இல்ல... ஆமாம் எப்போ மீட்டிங்..."

"மீட்டிங் நாளைக்கு 11 மணிக்கு தான்... இப்போ அதுக்காக கொஞ்சம் ப்ரிபேர் பண்ண வேண்டியிருக்கு அவ்வளவு தான்..."

"மீட்டிங் முடிஞ்சதும் கிளம்பிடுவீங்க தானே..??"

"இல்லம்மா.. என்னோட ஃப்ரண்ட் ஒருத்தன் இங்க ஜ்வல்லரி ஷாப் ஓபன் பண்ணியிருக்கான்... டெல்லி வரும்போது கண்டிப்பா கடைக்கு வரனும்னு சொல்லியிருக்கான்... அதனால மீட்டிங் முடிஞ்சதும் ப்ரண்டோட கடைக்குப் போயிட்டு அன்னைக்கு சாயந்திரமோ.. இல்ல மறுநாள் காலையிலேயோ ப்ளைட் ஏறிடுவேன்... சரி உனக்கு என்ன வேணும்..??"

"எனக்கு என்ன வேணும்..?? நீங்க எப்பவும் என் கூடவே இருக்கனும்... அதுதான் எனக்கு வேணும்..." கங்கா சொல்ல, துஷ்யந்த் முகத்தில் ஆனந்த புன்னகை..

"எனக்கு மட்டும் என்ன வேணுமாம்... நீ என்கூடவே இருக்கனும்... அதுதான் எனக்கும் வேணும்... நான் இப்போ கேட்டது, ஜ்வல்லரி ஷாப்க்கு போறேனே, அங்க இருந்து என்ன வாங்கி வரட்டும்..??"

"எனக்கு என்ன வேணுமோ அதை நீங்க தானே வாங்குவீங்க... அதனால நீங்களே ஏதாவது வாங்கிட்டு வாங்க... இப்போ எனக்கு என்ன வேணும்னா, நீங்க பத்திரமா சென்னைக்கு வரனும்.. அதுபோதும்.. இப்போல்லாம் ப்ளைட் ஆக்ஸிடண்ட், மாயமா மறையுதுங்கிற நியூஸ் பார்க்கும் போதெல்லாம், நீங்க வெளியூர் போகும்போது எனக்கு எப்படி இருக்கு தெரியுமா..??"

"என்ன கங்கா... நான் ஒரு ஆள் மட்டுமா ப்ளைட்ல போறேன்... ஒருநாளைக்கு எத்தனை பேர் ப்ளைட்ல ட்ராவல் பண்றாங்க தெரியுமா..??"

"எத்தனை பேர் போனா என்ன..?? எனக்கு முக்கியமானவரு நீங்க மட்டும் தானே..?? அதனால உங்களைப் பத்தி மட்டும் தான் நான் கவலைப்பட முடியும்... அதெல்லாம் உங்களுக்கு எங்க புரியும்... சரி நான் போனை வைக்கறேன்... நீங்க ஹோட்டல் போனதும் ரெஸ்ட் எடுங்க... நான் நாளைக்கு மீட்டிங்க்கு முன்னாடி போன் பண்றேன்..."

"இன்னும் கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இரேன் கங்கா... ஏன் அதுக்குள்ள போனை வைக்கப் போறேன்னு சொல்ற.."

"நல்ல கதையா இருக்கே.. இப்படி நான் பேசிக்கிட்டு இருந்தா நீங்க கேட்டுக்கிட்டு இருப்பீங்க... அப்புறம் டெல்லிக்கு போன வேலை என்னாகுறது...?? அதனால நான் இப்போ போனை வைக்கிறேன்... நாளைக்கு பேசறேன்... பை.." என்று போனை வைத்துவிட்டாள்...  ஆனாலும் உதட்டில் இருந்த புன்சிரிப்பு மறையாமல் அந்த அலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

கங்கா.. அவள் பேரை கேட்டாலோ.. இல்லை உச்சரித்தாளோ, ஆனந்தம்... அவளை பார்த்துக் கொண்டிருந்தால், அதைவிட ஆனந்தம்... அவளோடு பேசிக் கொண்டிருந்தால் பேரானந்தம்... அவளோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆனந்தத்தின் எல்லையையே அடைந்து விடலாம்.. துஷ்யந்தின் நினைப்பு இப்போது இவ்வாறாக தான் இருக்கிறதோ..?? ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..??

 

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.