(Reading time: 18 - 36 minutes)

ரவு உறக்கமில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் ஜெய்.  டென்ஷனா ஆரம்பிச்ச நாள் இவ்வளவு சந்தோஷமா முடியும்னு நான் நினைக்கலை.  அவ என்னோட கார்ல வந்தாளே!  சரூ நீ என்னோட வந்தத இன்னும் நம்பவே முடியலை.  எல்லாம் கனவு மாதிரியிருக்கு.  எதுக்கு இந்த அலப்பறை? அவளை டிராப் தான பண்ணின? அவ உன்னோட லவ் அக்செப்ட் பண்ண மாதிரி துள்ளுற என்றது ஜெய்யின் மனம்.  உனக்கு இதெல்லாம் புரியாது.. நீ சும்மா இரு என்றான்.  யாரு! எனக்கா! எல்லா எந்நேரம் என்று மனம் நொந்துகொண்டது. 

ஜெய்யின் மொபைல் சிணுங்கி மெஸ்ஸெஜ் வந்ததை தெரிவித்தது.

“என்ன பண்ற ஜெய்? தூங்காம வானத்துல பறந்திட்டிருப்பியே” படித்தவனின் முகத்திலிருந்த புன்னகை இன்னும் பெருகியது.  மைதி எப்படி தான் என்னை இவ்வளவு சரியா தெரிஞ்சு வச்சிருக்காளோ?  நான் என்ன பண்றேன்னு இவ்வளவு சரியா சொல்றாளே? என்றெண்ணியபடி மைத்ரீயின் மெஸ்ஸெஜுக்கு பதில் அனுப்பினான்.

“ஆமா மைதி!  தூக்கமே வரலை.  ஐ ம் வெரி எக்சைடட்”

“இருக்காதா பின்ன! கால்ஜ் சேர்ந்த ரெண்டாவது நாளே சரயூவை நீயே வீட்ல டிராப் பண்ணதோட இல்லாம அவளோட அம்மாவை மீட் பண்ணியிருக்க.  எத்தனை பேருக்கு இந்த சான்ஸ் கிடைக்கும்?”

“இல்லை மைதி! என்ன தான் இன்னைக்கு நடந்தது சந்தோஷமாயிருந்தாலும் சரூ என்னோட காதலை ஏத்துப்பாளான்னு யோசனையா இருக்கு”

“இதுல யோசிக்க என்ன இருக்கு? சரயூ கண்டிப்பா உன்னோட காதலை ஏத்துப்பா”

“தேங்க்ஸ் மைதி!”

“இல்லாத மூளைக்கு வேலை கொடுக்காம சமத்தா படுத்து தூங்கு.  குட் நைட்”

“குட் நைட்” என்று மெஸ்ஸெஜ் அனுப்பிய ஜெய், எப்படி சரயூவிடம் தன் காதலை வெளிபடுத்துவது? அவ எப்படி ரியாக்ட் பண்ணுவா? என்று யோசித்த படியே உறங்கினான்.

முன்தினம் போலில்லாமல் காலேஜுக்கு நேரத்தோடு சென்ற ஜெய் அவன் மனம் கொடுத்த ஆலோசனையின் படி வேதிக் வருவதற்கு முன்னால் சென்று சரயூவின் பக்கத்தில் உட்கார்ந்தான்.

க்ளாஸ் ஆரம்பிக்க இன்னும் நேரமிருந்ததால் சரயூ தன் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தாள். 

“என்ன பண்ற சரூ?”

“நேத்தைக்கு ராகுல் டிராஃபிக்ல மாட்டி சொதப்பிட்டான் இல்லை.. அதான் இன்னைக்கு நேரத்துக்கு வரனும்னு வீட்டில சொன்னது பத்தாதுன்னு இப்போ வாட்ஸாப், ஃபேஸ்புக், ட்விட்டர், ஹாங்க்அவுட்னு எல்லாத்துலயும் அவனுக்கு மெஸ்ஸெஜ் அனுப்பிச்சிட்டிருக்கேன்”

இவளுக்கு என்னோட வரறதுல என்ன பிரச்சனை? ராகுலை வேற கொடஞ்சு சரியான நேரத்துக்கு வர வச்சிடுவா போலிருக்கே… ஹே ஜெய்! இது உனக்கே ஓவரா தெரியலை? ஏதோ ஒரு நாள் அவளை டிராப் பண்ண சான்ஸ் கிடைக்காதான்னு நினைச்ச… கடவுளா பாத்து அந்த சான்ஸை ஏற்படுத்தினார்.  இன்னைக்கும் அவளை டிராப் பண்ண ப்ளான் போடுறியே… இது டூ மச் என்றது அவனின் மனம்.  அவளோட செலவழிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் அப்படியே சொர்க்கத்துல இருக்க மாதிரியிருக்கு.  இதெல்லாம் உனக்கு எப்ப தான் புரியுமோ! என்றான் ஜெய்.  அது எனக்கு புரியலைன்னாலும் பரவாயில்லை.  அவ உன்னை ஃப்ரெண்டா நினைக்கிறா… அதை மட்டும் மறந்திடாத என்று மனம் அவனை ஆஃப் செய்தது.

அன்று எல்லா சம்ஜெக்ட்கும் ஸிலபஸ் மற்றும் ரெஃபெரென்ஸ் புக்ஸ் லிஸ்ட் கொடுக்கப்பட்டது.  ரெஃபெரென்ஸ் புக்ஸ் செக் செய்ய எல்லோரும் லைப்ரரிக்கு சென்றனர்.  வேதிக் உள்ளே சென்றவுடன் எல்லா ரெஃபெரென்ஸ் புக்ஸையும் எடுத்து வந்து ஒரு டேபிலில் வைத்து ஜெய் மற்றும் சரயூவை அழைத்து அவைகளை சரிப் பார்க்க சொல்லிவிட்டு அவர்களோடு இணைந்து அவனும் அதையே செய்தான்.

“என்ன கொடுமையோ! ஒவ்வொரு புக்கும் இத்தனை கணமாயிருக்கு.  இதுல நம்ம ஸிலபஸ்ல இருக்க ஒவ்வொரு டாப்பிக்கும் தேடி கண்டுபிடிச்சு நோட்ஸ் ரெடி பண்ணி படிச்சு மறக்காம மண்டையில வச்சிருந்து பரிட்சை வேற எழுதுனுமா?” என்று அவள் சொன்ன அனைத்தையும் செய்தவள் போல் சோர்ந்து அமர்ந்தாள்.

அவளின் பேச்சும் செய்கையும் மற்ற இருவருக்கும் சிரிப்பை தந்தது.  அதை அடக்கிய வேதிக், “யூ டோண்ட் வொர்ரி சரயூ! நான் நோட்ஸ் ரெடி பண்ணி உனக்கு தரேன்”

தௌசண்ட் வாட்ஸ் பல்ப் போல் சரயூவின் கண்களும் முகமும் பளிச்சிட்டன.  “நிஜமா தான் சொல்றயா வேதிக்?” அவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிய புருவங்கள் மேலேறி கேள்விக்குறியாக நிற்க ஜெய்யோ செய்வதறியாதுத் தவித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.