(Reading time: 18 - 36 minutes)

வளின் இந்த செயலினால் மனதில் ஏற்பட்ட தடுமாற்றம், ஏன் நோட்ஸ் வேதிக் தான் தருவானா? என்னை கேட்டா உனக்காக என்ன வேணாலும் தருவேன்.  இந்த நோட்ஸ்லாம் ஒரு தூசு.  நீ ஏன் என்னை கேட்கலை? இந்த வேதிக் வேற எப்போ பாரு முந்திரி கொட்டை மாதிரி மூக்கை நீட்டிகிட்டு.  சரூ உன்னையாடா நோட்ஸ் கேட்டா? என்று அவனை வசைப் பாடினான்.  சரயூ கேட்கலைன்னாலும் நோட்ஸ் தரேன்னு வேதிக் சொன்னான்.  உன்னை மாதிரி சிரிச்சிகிட்டு நின்னா அவளை இந்த வேதிக்கோ இல்லை வேற யாரோ ஒருத்தன் இம்ப்ரெஸ் பண்ணப் போறான் அப்பவும் நீ சிரிச்சிகிட்டே நில்லு என்றது ஜெய்யின் மனம்.  மனம் சொன்னதை கேட்டு அதிர்ச்சியுற்றவன்,

“உனக்கு நோட்ஸ் வேணும்னா என்னோடத கூட எடுத்துக்கலாம் சரூ” என்றான் ஜெய்.

“வேணும்னா கண்டிப்பா வாங்கிக்குறேன் சஞ்சு! இப்போதைக்கு வேதிக் கொடுக்குறேன்னு சொல்லியிருக்கானே அதுவே போதும்” என்று அவள் சாதரணமாக தன் மனதிலிருந்ததை சொல்லவும்

ஜெய்யின் முகம் வாடியது.  இந்த காலத்து பொண்னை காதலிக்க உனக்கு தகுதியே இல்லை என்று ஜெய்யின் மனம் தன் தலையில் அடித்து கொண்டது.  நீ அந்த வேதிக்கை விட ரொம்பவே நல்லாயிருக்க.  இப்படி முகத்தை வச்சு அவனை பெட்டராக்கிடாத.  பார்க்க சகிக்கலை.  நான் வேற ஏதாவது ஐடியா கொடுக்குறேன்.  அப்போ அவளை இம்ப்ரெஸ் பண்ணலாம் என்று ஜெய்யை திட்டிய அவன் மனமே அவனுக்கு நம்பிக்கையும் கொடுத்தது. 

காலேஜ் முடிந்து சரயூவோடு ஜெய் வரவும் ராகுல் அவளுக்காக காத்திருந்தான்.

“ஹாய் சஞ்சய்! ஐ ம் ராகுல்” என்று நட்போடு ராகுல் ஜெய்யின் கையை குலுக்கினான்.

“நான் சஞ்சய்னு உங்களுக்கு எப்படி தெரியும் ராகுல்?” ஆச்சரியம் கலந்திருந்தது குரலில். 

“இதை தெரிஞ்சிக்க டிடெக்டிவ் ஏஜென்சிக்கா போக முடியும்?  இந்த வாலு தான் காலேஜ் முதல் நாளே உங்களை பத்தி எங்க வீட்டுல எல்லோருக்கும் சொல்லியிருக்கே” சரயூவின் தலையில் செல்லமாக தட்டினான்.

“என் ஃப்ரெண்டு முன்னாலையே என்னை அடிக்கிறியா? என்ன சஞ்சு நீயும் பார்த்துகிட்டு சும்மா நிக்கிற?” என்று சரயூ போலியாக ராகுலின் மேல் கோபம் கொள்ள ராகுலும் ஜெய்யும் சிரித்தனர்.

“இனிமே நான் சரயூகிட்ட ரொம்ப உஷாரயிருக்கனும் போல.  என்னை ஒன்னும் செஞ்சிடாத ஜெய்” என்று பயந்தவனாக நடித்து பாவம் போல் தன் முகத்தை வைத்து கொண்டான் ராகுல்.

“அது! அந்த பயமிருக்கட்டும்!” என்று சரயூ தான் அணிந்திருந்த ஷர்ட்டின் காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்.

“சரயூ தான் ஏதோ விளையாட்டுக்கு சொல்றான்னா… நீங்க ஏன் இப்படி பேசுறீங்க பாஸ்”

“நீதான் சொன்னியே சஞ்சய் விளையாட்டுக்குன்னு…. இப்படியே பேசிட்டிருந்தா எப்போ வீட்டுக்கு போறது; நேரமாச்சு கிளம்பலாம்.  இல்லைனா பெங்களூர் டிராஃபிக் நம்மளை படுத்திடும்.  பை சஞ்சய்”

“ஸீ யூ சஞ்சு” - சரயூ

“ஸீ யூ கய்ஸ்” என்றபடி அவர்களுக்கு சொன்னவன் தன் காரைக் கிளப்பினான்.

ஜெய்யின் மனம் முழுவதும் சரயூவும், அவள் தன்னைப் பற்றி அவளின் வீட்டினருக்கு சொல்லியிருப்பதும் ஏதோ சந்தோஷத்தை கொடுக்க உல்லாசமாக விசிலடித்து துள்ளல் நடையுடன் வீட்டினுள் சென்றான்.

ஜெய்யின் பெற்றோர் மரணத்திற்குப் பிறகு அவன் தங்களிடம் சகஜமாக பேசிப் பழகி சிரித்தாலும் அவன் கண்களில் நிரந்தரமாக இருக்கும் ஏக்கம் இன்று காணாமல் போயிருந்தது.  மாறாக குறுப்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வடிவுக்கு தானாக கண்களில் நீர் சேர்ந்தது.  அவன் பார்க்காதவாறு முந்தானையால் அதை துடைத்தவர்

“வா ஜெய்!  நேத்தைய விட இன்னைக்கு சீக்கிரமா வந்துட்ட? என்ன சாப்பிட்ற கண்ணா?”

“எனக்கு எதுவும் வேணாம்மா! நான் கொஞ்ச நேரம் உங்க மடியில் படுத்துக்கலாமா?” என்றபடி வடிவினருகில் அமர்ந்தான்.

“இதை கேட்கனுமா ஜெய்? வா கண்ணா” என்று அவனை தன் மடியில் சாய்த்து அவன் தலை முடியை கோதினார்.

ஜெய்யின் மகிழ்ச்சியைப் பார்த்த வடிவின் மனம் பூரித்தது.  அதன் விளைவான ஆனந்த கண்ணீரை எத்தனை முயன்றும் தடுக்க முடியாமல் தோற்றார்.

“என்னாச்சும்மா!” எனப் பதறி எழுந்தான் ஜெய்.

“ஒன்னுமில்லைடா கண்ணா! எதுவும் பேசக்கூடாது!” என்றபடி அவனை மறுபடியும் மடியில் சாய்த்துக் கொண்டார் வடிவு.  

காலேஜிலிருந்து வந்த மைத்ரீ வாசலில் ஜெய்யின் காரைப் பார்த்தவள், சீக்கிரமா வந்துட்டியா கொரங்கே… நீயிருந்தால் வீடு இவ்வளவு அமைதியா இருக்காதே? என்றெண்ணியபடி உள்ளே நுழைந்தாள்.  வடிவு அவளைப் பேச வேண்டாமென சைகை செய்ய அப்படியே அமைதியாக தன்னறைக்கு நகர்ந்தாள்.

சிறிது நேரத்திற்குப் பின் எழுந்து மணியைப் பார்த்த ஜெய், ஆறு மணி! ஒரு மணி நேரமாவா இப்படி படுத்திருந்தேன்? என்றெண்ணியபடி அவசரமாக எழுந்து “தூங்கிட்டேன்மா! நீங்களாவது எழுப்பியிருக்கலாமே.  உங்களுக்கு கால் வலிக்குதா?” என்று வடிவின் முகம் பார்த்தான்.  அவன் கேள்விக்கு ஒரு புன்னகையைப் பதிலாக்கினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.