(Reading time: 18 - 36 minutes)

நான் உனக்கு ஏதாவது சாப்பிட கொண்டுவரேன்” எழுந்த வடிவின் கையைப் பிடித்து உட்கார வைத்த ஜெய், “நீங்க இருங்கம்மா! இன்னைக்கு உங்களுக்கு நான் டிஃபன் ரெடி பண்றேன்” என்றபடி சமையலைறைக்குச் சென்றான்.

“ஹாய் மைதி! நீ இங்க என்ன பண்ற? இரும்பு அடிக்கற இடத்துல ஈக்கு என்ன வேலை?” ஏதோ அதிசயத்தைப் பார்த்தவன் போல் கேட்டான் ஜெய்.

“இவ்வளவு பெரிய உருவம் உனக்கு ஈ மாதிரி தெரியுதடா, எரும?” என்றபடி கரண்டியால் ஜெய்யை அடிக்க

“என்னை அடிச்சுட்டா உண்மை பொய்யாகது மைதி” என்று மைத்ரீயின் கரண்டியிலிருந்து தப்பித்து ஓடினான்.

‘தப்பிச்சா போற, கொரங்கே? இரு வரேன்! என்னோட சமையலுக்கு நீதான் எலி’ என்றெண்ணியவள் தானே முதன்முறையாக தயாரித்த உப்புமாவை அவர்களுக்கு கொடுத்தாள்.

“இறைவனே என்னை எப்பவும் காப்பாத்துவீங்கன்னு தெரியும்.  இப்போ கொஞ்ச கூடுதலா உங்க அருளை எனக்கு கொடுக்கனும்.  அம்மா! நீங்களும் கடவுளை நல்லா வேண்டிகிட்டு இந்த உப்புமாவை சாப்பிடுங்க” என்று கேலி பேசி மைத்ரீயிடம் அதற்கான பரிசையும் வாங்கி கொண்டான் ஜெய்.

ச்சே… இவ்வளவு லேட் ஆயிடுச்சே! அலார்ம் ஆஃப் பண்ணிட்டு ஸ்னூஜ்ல வச்சதா நினைச்சு தூங்கிட்டேனே… வேதிக் இடத்தை பிடிச்சிருப்பானோ? இல்லை.. அவனுக்கு இடத்தை விட்டு கொடுக்கக் கூடாது.. சீக்கிரமா போகனும் என்று உறுதியேற்றவன் காலேஜுக்கு விரைந்தான்.

என்னதான் வேகமாக வந்தும் பத்து நிமிடம் தாமதமாகி விட்டது.  மேத்ஸ் லெக்சரர் நாரயண் ரொம்ப நல்லவர்; புத்திசாலி; எப்பவுமே அவர் முகத்தில் ஒரு அமைதியிருக்கும்.  சின்ன குழந்தைகளுக்கு கூட்டல் கழித்தல் சொல்லி கொடுக்கற மாதிரியே ஒவ்வொரு கணக்கையும் சுலபமா எப்படி சால்வ் பண்றதுன்னு சொல்லி கொடுப்பாரு.  எப்போ எந்த டவுட்னு ஸ்டாஃப் ரூமுக்கு போய் நின்னாலும் முகம் சுளிக்காம டவுட்டை க்ளியர் பண்ணுவாரு.  அவருக்கு பிடிக்காதது லேட்டா க்ளாசுக்கு வரும் லாஸ்ட் பெஞ்சு ஸ்டுடண்ட்ஸ்.  சஞ்சய் லாஸ்ட் பெஞ்சு ப்ளஸ் இன்னைக்கு லேட்.  ‘என்ன பண்றது? உள்ளே போகலாமா? இல்லை மேத்ஸ் க்ளாஸ் முடிஞ்சதும் போலாமா?’ என்று யோசித்தபடியே நின்றிருந்தான்.

“என்ன பாஸ்! இங்க நிக்கிறீங்க? வாங்க உள்ள போலாம்”

ஜெய்யின் குழப்பம் இன்னும் தீராததால் “லேடாயிடுச்சு…க்ளாஸ் அட்டெண்ட் பண்ணலாமா வேணாமான்னு……” என்று அவன் இழுக்கவும்

“இதுக்கு போய் யோசிச்சுகிட்டு… உள்ளே போறது நம்ம கடமை.  அதே மாதிரி நாம க்ளாஸ் அட்டெண்ட் பண்ணனுமா வேணாமான்னு முடிவு எடுக்கறது லெக்சரர் கடமை” என்றவனோடு ஜெய்யும் சேர்ந்து நடந்தான்.

“வா ராஜா! வா! ஏன் அங்கேயே நிக்கிற? உள்ள வா!” என்று லெக்சரர் ஏளனப் புன்னகையோடு இவர்களை வரவேற்றார்.

என்ன இன்னைக்கு சிரிச்சுப் பேசுறாரு? என்று இருவருமே நினைத்தபடி ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்து கொண்டபடி உள்ளே சென்றனர்.

“வரோம் சார்! ஆனா ஒரே ஒரு திருத்தம்.  என் பேரு ரூபின் ரவீந்திரா.. ராஜா இல்லை” தன் பெயரை சொல்லும் போது ஒரு பெருமிதம் கலந்திருந்தது குரலில்.

“பரவாயில்லை விடுப்பா… அது…” ஏதோ சொல்ல எத்தனித்தவரை இடையிட்டான் ரூபின்,

“அதெப்படி சார் விடமுடியும்? எங்க பேருல ஒரு எழுத்து தப்பானாலும் உடனே அதை சரி செய்ய சொல்லி எத்தனை ஃபாரம் நிரப்ப வச்சு காசு வேற வாங்குறீங்க… இப்போ என்னோட பேரையே மாத்தறதை என்னால் அனுமதிக்க முடியாது சார்”

இதை கேட்டு எல்லோரும் சிரிக்க, ரூபின் தன் கையை உயர்த்தி ஆட்டியவன் எல்லோருக்கும் ஒரு சிரிப்பை சிந்தி “தேங்க்ஸ் எவ்ரிபடி…தேங்க்ஸ் ஃபார் யுவர் சப்போர்ட்” என்றான்.

அந்த சலசலப்பில் ஜெய்யும் திரும்பி சரயூவை தேட கடைசி வரிசை காலியாக இருந்தது.  இவள் வரலியா? என்ன ஏதுன்னு ஒரு மெஸ்ஸெஜ் கூட பண்ணலையே… இந்த வேதிக்கும் இல்லையே.  ஒரு வேளை… ரெண்டு பேரும் க்ளாஸ் பங்க் பண்ணிட்டு வெளிய போயிருப்பாங்களோ? ச்சே…இருக்காது.. அப்படி வெளிய போயிருந்தா எனக்கும் சொல்லியிருப்பாங்க… என்று தனக்கு தானே கேள்வி எழுப்பி பதிலளித்து கொண்டிருந்த ஜெய்யின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் லெக்சரர்.

“என்னப்பா இன்னைக்கு ரெண்டு பேரும் சீக்கிரமா வந்திருக்கீங்க?” ரூபின் பெயருக்கு கொடுத்த விளக்கத்தினால் மனதில் எழுந்த கோபத்தை மறைத்து கேலியாக கேட்டார் நாராயண்.

“தேங்க்ஸ் அ லாட் சார்!” என்று அவர் கையை பற்றி குலுக்கியவன் “நான் லேட்டா வந்துட்டனோன்னு நினைச்சேன்… இவனோ லேட்டா வந்ததை நினைச்சு வருத்து பட்டுட்டிருந்தானா.. நான் தான் சமாதானம் சொல்லி கூட்டிகிட்டு வந்தேன்.  நீங்க ஏதாவது சொல்லி இவன் எங்க மனசொடிஞ்சு தற்கொலை பண்ணிக்குவானோன்னு வீணா ஏதேதோ நினைச்சு குழம்பிட்டேன்”

ஒரு நாள் லேட்டா வந்ததுக்காக இவன் என்னை தற்கொலை செஞ்சுக்கவே ட்ரை பண்ணேன்னே சொல்லிடுவான் போல… இதுக்கப்புறமும் இவனை பேசவிட்டா நிலைமை மோசமாயிடும்.. “சாரி சார்! கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.  இனிமேல் இப்படியாகாது” என்று சஞ்சய் மன்னிப்புக் கோர

“எதுக்கு சாரி சொல்லுற சஞ்சய்? சார் தான் சொன்னாரே நாம சீக்கிரமா வந்துட்டோம்னு… அப்புறம் என்ன மச்சா நீ”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.