(Reading time: 18 - 36 minutes)

நீங்களாவது கொஞ்சம் எடுத்து சொல்லுங்க சார்! நாங்க வி.ஐ.பிங்க… ஆன் டைம்கு வந்தோம்.  நீங்க தான் எங்களுக்காக சீக்கிரம் வந்து எல்லா ஏற்பாட்டையும் செய்திட்டு காத்திருக்கீங்க… அதுதான் உங்க வேலைன்னு இந்த சஞ்சய்கு சொல்லுங்க சார்.  அப்பவாவது இவனுக்கு புரியாதுன்னு பார்ப்போம்” நடிகர்திலகம் சிவாஜி கணேசன் போல மிகவும் உருகி பேசிய ரூபின் முடிக்கவும்

“யூ… கெட் அவுட் ஆஃப் மை க்ளாஸ்…” என்று கர்ஜித்தார் நாரயண்.

“என்ன சார்…இப்படி பண்ணிட்டீங்களே! ஒரே ஒரு வார்த்தை வெளிய போனு சொல்லியிருந்தா போயிருப்பேனே… உங்க எனெர்ஜிய வீணடிச்சுட்டீங்களே..” நாராயண் முறைத்தபடி அவனை நெருங்கவும் “அவசர படாதீங்க.. உங்க பேச்சை என்னைக்குமே இந்த ரூபின் மீற மாட்டான் சார்… நான் போறேன் சார்! நான் போறேன்” வராத கண்ணீரை துடைத்து கொண்டு லெக்சரர் பார்க்காதபடி திரும்பியவன் மற்ற மாணவர்களை பார்த்து கண்சிமிட்டி சிரித்து வெளியேறினான்.

ஜெய் அங்கேயே நின்றிருக்கவும் “முதல் முறை லேட்டா வந்ததால உன்னை மன்னிக்கிறேன்.  இன்னொரு முறை அந்த ரூபின் கூட சேர்ந்து லேட்டா வந்த… அதுதான் உனக்கு கடைசி க்ளாஸ்… போ!” கோபமாக ஆரம்பித்து பின் தணிந்தவராய் அவனை பார்த்து புன்னகைத்தார்.

தன் இடத்தில் அமர்ந்தவனோ, இவரு என்னை வெளியவே போக சொல்லியிருக்கலாம்.  ரூபின், என்ன அழகு பிள்ளையா க்ளாஸ் பங்க் பண்ணாம லெக்சரர் அனுமதியோட வெளிய சுத்துறான்.  எத்தனை பேருக்கு இந்த கொடுப்பனையிருக்கு! சரூ எங்க என்ன பண்ணிட்டிருக்கான்னு தெரியலையே? இந்த க்ளாஸ் முடியற வரைக்கும் ஃபோன்ல அவளை கூப்பிட முடியாது.  அனுப்பின மெஸ்ஸெஜுக்கு பதிலேயில்லை என்று புலம்பினான். 

ஒரு வழியா க்ளாஸ் முடிந்து நாரயண் வெளியேறவும் சரயூவை ஃபோனில் அழைத்தான் சஞ்சய்.

“வாவ் சஞ்சு! உன்னை தான் கூப்பிடனும்னு நினைச்சு ஃபோன் எடுத்தா நீயே எனக்கு ஃபோன் பண்ணிட்ட! எங்க இருக்க நீ?” உற்சாகத்தின் உச்சியிலிருந்தவளின் குரலை கேட்டவனோ நமக்குள்ள டெலிபதி வேலை செய்யுதோ என்று மகிழ்ந்தான்.

“நான் காலேஜ்ல தான் இருக்க.  என்ன சரூ ரொம்ப சந்தோஷமாயிருக்க?”

“அது சஸ்பென்ஸ்! இப்போ சொல்ல மாட்டேன்.  நீ உடனே காலேஜ் ஆடிகிட்ட வா”

“இதோ வரேன்.  நீ அங்க என்ன பண்ற சரூ?”

“சீக்கிரம் வான்னு சொன்னா…சும்மா கேள்வி கேட்டுகிட்டு…” என்று சலித்துகொள்ளவும்

“சரி! சரி! வந்துட்டே இருக்கேன்” ஆடில எந்த ப்ரொக்ராமு இருக்கறதா சொல்லலியே…என்னவோ போய் பார்த்தா தெரிய போது என்று அவன் மனம் சொல்ல முன்னேரி நடந்தான் ஜெய்.

சில நிமிடங்களில் ஆடிட்டோரியத்தை அடைந்தவன் அவளை சுற்றிலும் தேடியபடி ஃபோனில் அழைத்தான்.  ஆனால் அவளோ அழைப்பை துண்டித்தாள்.  என்னை இங்க வர சொல்லிட்டு, இவளைக் காணோமே என்று ஜெய் யோசிக்கவும் அவன் பின்னாலிருந்து ஏதோ வண்டி வரும் சத்தம் கேட்டு திரும்பியவனின் கண்கள் சூரியனைக் கண்ட தாமரையாய் மலந்திருந்த அவளின் முகத்தில் பதிந்தது.

“ஹே சஞ்சு! என்னோட புது டியோ…இன்னைக்கு காலையில என் ஃபாமிலி கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்.  ரொம்ப நாள் கனவு இப்போ தான் கிடைச்சது.  ஐ ம் வெரி ஹேப்பி.  எனக்கு டான்ஸ் ஆடனும் போலிருக்கு…அவ்வளவு சந்தோஷமாயிருக்கு தெரியுமா” மூச்சு கூட விட மறந்தவளாக தன் மகிழ்ச்சியை பேச்சின் சரவெடியாக வெளிபடுத்தினால் சரயூ.

வண்ணத்து பூச்சியின் வண்ணத்தைப் போல எப்போதுமே புன்னகையை பூசியிருக்கும் சரயூவின் முகம்.  ஆனந்தத்தினால் கூடுதல் புன்னகையோடு சிவந்திருந்த அவளின் முகத்தை இன்று முதன் முறையாக கண்டவனோ மெய்மறந்து போனான்.  ஒரு டூ வீலர்க்கே உன் முகம் இப்படியிருந்தா என்னை பார்த்து வெட்கப்பட்டா எப்படியிருக்கும் சரூ! அய்யோ எனக்கு இப்பவே அதை பார்க்கனும் போலிருக்கே! நீ ரொம்ப ஃபாஸ்ட்டா போற ஜெய்.  முதல் உன் லவ்வை அவகிட்ட சொல்லு…உன்னோட லவ் அக்செப்ட் பண்ணிட்டு அவ வெட்கப்பட்டா நீ அதைப் பாரு…பார்த்துட்டு என்ன வேணாலும் பண்ணு என்று மனம் அவனின் கனவினை கலைத்தது.

“நான் கேட்டுட்டேயிருக்க…என்ன நீ பதில் சொல்லாம ஸ்மைல் பண்ற?”

என்ன சொன்னான்னு தெரியலையே! எப்படியாவது சமாளிக்கனுமே “என்ன கேட்ட சரூ? எனக்கு இந்த மாடலும் கலரும் பிடிக்குமா…நான் அதை பற்றி யோசிச்சிட்டிருந்த”

“உனக்கும் பிடிக்குமா! ஹே….ஹே….நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே டேஸ்ட்” என்று ஆர்பரித்தவள் தன் வலது கையை உயர்த்தி அவனுக்கு ஹைபை கொடுத்தாள்.

“எல்லாத்துலயும் ஒரே டேஸ்டிருந்தா இன்னும் நல்லாயிருக்கும்” என்று இருபொருள்பட பேசி புன்னகைத்தான் ஜெய்.

“எனக்கு யாரோ சொன்னாங்க சஞ்சு! நல்ல ஃப்ரெண்ட்ஸ்க்கு ஒரே டேஸ்டிருக்குமாம்… அவங்க ஒரே மாதிரி யோசிக்கக் கூட செய்வாங்களாம்…”

எதுக்கெடுத்தாலும் ஃப்ரெண்டுன்னு சொல்லிகிட்டு….வேறதை பற்றி யோசிக்கவே மாட்டாளா… என்று சலித்து கொண்டான் ஜெய்.  அவனறிந்திருக்கவில்லை விதி மற்றும் சதியினால் அவனையே எதிரியாய் அவள் காண்பாள் என்பதை.  அது கொடுக்கவிருக்கும் வலியையும் வேதனையும் நிச்சயமாக அவனறிந்திருக்கவில்லை தான்.

Episode 04

Episode 06

முத்து ஒளிரும்…

{kunena_discuss:1038}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.