(Reading time: 15 - 30 minutes)

04. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

ரயூவைப் பார்த்த ஜெய்யின் மனம் நிம்மதியடையும் முன் அதிர்ச்சுயுற்றது.

நேற்று இவன் அமர்ந்திருந்த இடத்தில் இன்று வேரொருவன் அமர்ந்திருந்தான்.  சரயூ ஜெய்யிற்கு கை அசைத்ததைப் பார்த்த அந்த புதியவன் எதையோக் கேட்பதும் அதற்கு அவள் சிரித்தபடி எதையோ சொல்வதும் இவன் கண்ணில் பட கால்கள் தாமாக அவளை நோக்கி நடக்கின்றன.  ஆனால் மனமோ எதையும் பகுத்தறியும் சக்தியிழந்து யார் இவன்? இவனால் என்னவளை பிரிந்துவிடுவேனோ எனப் பதறுகிறது.  இது தேவையற்ற பதட்டமென புத்தி சொல்லவும்; ஒருபுறம் அதை ஆமோதிப்பதுமாக மறுபுறம் மறுப்பதுமாக ஆழியில் சிக்கிய படகாக மனம் தத்தளிக்க ஜெய் கண்களை இறுக மூடி ஆழமான மூச்சை உள்ளிழுத்து மனதின் தத்தளிப்பைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இருக்க….

சரயூவிற்கு என்ன ஆபத்தோ என்று வருந்திய ஜெய்யின் மனம் இப்போது அவள் நலமுடன் இருப்பது தெரிந்து விட இவனிடம் பேச ஆரம்பித்தது.  இது உனக்கு வேணும் தான்.  அவளுக்கு என்ன ஆகியிருக்குமோன்னு என்னால இவ்வளவு நேரம் பேசவே முடியலை.  உன்னை நேத்து அவள் பக்கத்தில் உட்கார சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷப்பட்டியே.  இப்போ என்ன ஆச்சு? அங்க யாரோ ஒருத்த உட்கார்ந்திருக்கான் என்றது.  இதுல என்ன தப்பிருக்கு? முன் வரிசையில இடமில்ல அதனால தான் அங்கே உட்கார்ந்திருக்கான் என்று தன் மனதிற்கும் தனக்கும் சமாதானம் சொல்லிக் கொண்டான் ஜெய்.  இது…இதை தான் எதிர்ப்பார்த்தேன்! உன்னைக்கூட அப்படி தான் நேத்திக்கு அவள் பக்கத்தில் உட்கார வைச்சதும்.  அதை பெரிசா எடுத்துட்டு நீ பண்ணின அலப்பறை இருக்கே…. என்று அவன் மனம்  சலித்துக்கொண்டது.

அதற்குள் கடைசி வரிசையை அடைந்திருந்தவன் தன் மனதிற்கு பதிலேதும் சொல்லும் முன் அவள் அவனை அதே வரிசையில் உட்கார சொல்லி சற்று நகர்ந்தாள்.  அவளை தொடர்ந்து அந்த புதியவனும் நகர சஞ்சய் அவனருகில் உட்கார்ந்தான். 

அதே சமயம் லெக்சரர் வந்து பாடத்தை ஆரம்பித்தார்.  அவர் சொல்வதேதும் ஜெய்யின் மனதில் பதியவில்லை. 

சரயூவும் அந்த புதியவனும் மெல்லிய குரலில் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.  ஜெய்யிற்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை. 

இந்த லெக்சரர் வேற… வள வளன்னு பேசிகிட்டு.. என் அவசரம் யாருக்குமே புரியலையே; இவர் போனால் தான் சரயூட்ட பேச முடியும் என்று ஜெய்யின் மனம் புலம்பியது.  இதோ அதோ என்று ஒரு வழியாக ஒரு மணி நேரம் கடந்த பின் லெக்சரர் அறையைவிட்டு வெளியேறினார். 

இந்த சமயத்திற்காக காத்திருந்த ஜெய் அவளிடம் திரும்பியவன்,

“காலேஜுக்கு எப்படி வந்தே? பஸ் ஸ்டாப்பில் உன்னை நான் பார்க்கலையே!” என்று மட்டும் கேட்டான். 

“என்னை அப்பா காலேஜில் விட்டார்.  சஞ்சு! எனக்காக பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தியா என்ன? ஸாரி” என்றவளின் குரலில் வருத்தம் தொனித்தது.

அவள் தனக்காக வருந்துகிறாள் என்பதே சஞ்சய்கு நிறைவாகயிருந்தது.  அதே சமயம் அவளின் வருத்தம் இவனை வருத்த

“இட் இஸ் ஆல்ரைட்” என்றான் மென்னகையுடன்.

இதற்குள் அந்த புதியவனின் நினைவு வந்தவளாக

“சஞ்சு! இவன் வேதிக்.  இவன் சஞ்சய்” என்று இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தாள்.

வேதிக்கும் சஞ்சயும் சிறு புன்னகையுடன் கை குலுக்கினர்.

“இனிமேல் வேதிக்கும் நம்மோடு இந்த வரிசைலியே உட்காருவான்” என்று சரயூ சஞ்சய்க்குச் சொன்னாள்.

உடனடியாக சஞ்சயின் மனம் அவனை எச்சரித்தது.  நாளைக்கு வேதிக்கு முன்னாடியே வந்து சரயூ பக்கத்தில் நீ உட்காரனும் என்று சொல்லவும் ஜெய்யும் அவன் மனதின் படி நடக்க முடிவெடுத்தான்.

வேதிக் இவர்கள் இருவரிடையில் உட்கார்ந்திருப்பது ஜெய்யிற்கு அவளிடம் பேசுவதற்கு தடையாக இருந்தது.  அவன் என்ன தான் ஃப்ரெண்டிலியாக ஜெய் மற்றும் சரயூவிடம் பேசினாலும் ஜெய்யால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. 

ஜெய் மைத்ரீக்கு போன் செய்ய எண்ணிய போதே ‘வேண்டாம்! நான் பேசினா என்னோட மூட் சரியில்லைன்னு கண்டுபிடிச்சு மறுபடியும் என்ன பிரச்சனைன்னு கேட்பாள்.  இவங்க முன்னாடி எதையும் சொல்லவும் முடியாது’ என்று தோன்றிட ஒரு குறுந்தகவல் அனுப்பினான்.  சரயூவின் அப்பா அவளை காலேஜில் ட்ராப் செய்திருக்கிறார்.  அவன் தான் ஏதோ கற்பனை செய்து வருத்தப்பட்டான் என்றும் அவளுக்கு தெரியபடுத்தினான்.

சரயூ, வேதிக் இருவருக்கும் நேரம் இனிமையாக சென்றது.  சரயூ பேசும் போது சஞ்சய் போல் வெறும் கேட்பதோடல்லாமல் நன்றாகப் பேசவும் செய்தான் வேதிக்.  சஞ்சய் எதிலுமே கலந்து கொள்ளாமல் மௌனமாகவே நேரத்தைக் கழித்தான்.  ஆனால் பாழ் மனமோ எத்தனையோ யோசனைகளிலும் கற்பனைகளிலும் உழன்று அந்த நேரத்தை ஜெய்யிற்கு நரகமாக்கியிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.