(Reading time: 15 - 30 minutes)

ந்த பஸ்க்காரன் எதுவும் செய்யமாட்டான்னு எப்படி உறுதியா சொல்ற சரூ?  ஒரு பேச்சுக்கு, நான், அவனாயிருந்தால் கண்டிப்பா ஏதாவது செய்து உன்னை பழி தீர்க்கனும்னு யோசிச்சிருப்பேன்.  அப்படி இல்லாம அவன் நல்லவனா கூட மாறியிருக்கலாம்.  ஆனால் தப்புன்னு உணர்ந்தாலும் கூட, அத்தனைப் பேர் முன்னாடி ஏற்பட்ட அவமானம் அவனோட ஈகோவைத் தூண்டியிருக்காதுன்னு எப்படி சொல்ல முடியும்? பழி வாங்கனும்னு முடிவு பண்ணிட்டா அதுக்கான எத்தனையோ வழிகளும் கண் முன் வந்து தப்பான வழியில் சுலபமா ஒருத்தனை இழுத்து போயிடும்னு நீ புரிஞ்சிக்கனும். எது செய்தாலும் யோசிச்சு செய்யனும் சரூ, என்ன சொல்ற?” என்று சரயூவின் பதிலுக்காக அவளின் முகத்தைப் பார்த்தான்.

“நான் இந்த மாதிரியெல்லாம் யோசிச்சதேயில்லை.  இப்போ நீ சொல்லிட்ட இல்லை! இனிமேல் எந்த ஒரு முடிவானாலும் அதன் விளைவுகளை பற்றி நல்லா யோசிச்சு செய்வேன்.  முக்கியமான முடிவுகளை உங்கிட்டயும் டிஸ்கஸ் பண்றேன்….போதுமா?” என்று தன் புருவங்களை உயர்த்தினாள்.

“இது போதுமே சரூ! நோ மோர் அட்வைஸ்! இப்போ ஓன்லி லன்ச்” என்று ஜெய் சொல்ல இருவரும் சிரித்தபடி மதிய உணவிற்காகக் கான்டின் சென்றனர்.

உணவு முடித்து இருவரும் திரும்பும் வரையிலும் வேதிக்கை எங்கும் காணவில்லை.  இப்போது வேதிக் இல்லாததால் சரயூவின் பக்கத்தில் உட்கார்ந்தான் ஜெய்.  உடனே அவன் மனது பேசியது, எப்படியோ சீட்டைப் பிடிச்சிட்ட! உனக்கு ஒரு அரசியல்வாதியாக எல்லா தகுதியும் இருக்கு என்றது. மனதின் பேச்சிற்கு பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தான் ஜெய்.

“வேதிக் எங்கே போனான்னு தெரியலையே! சாப்பிட்டானோ? இல்லையோ!” என்று சரயூ ஜெய்யிடம் புலம்பும்போதே வேதிக் அங்கு வரவும்

"எங்கே போன வேதிக்? சாப்பிட்டியா? உனக்காக எவ்வளவு நேரமா பார்த்திட்டிருக்கேன்னு தெரியுமா?” என்று கேள்விகளை அடுக்கவும்

மிகவும் தீவிரமான முகபாவத்தோடு ஜெய், “பதிலை சீக்கிரமா சொல்லிடு வேதிக்.  இல்லைனா சரயூ உன்னை கட்டிவச்சு அடிச்சாவது சாப்பிட வச்சுடுவா.  பாவம் நீ… அப்புறம் உன்னால அசைய கூட முடியாது!” என்றதும் சரயூ சட்டென சிரித்தாள்.  எதுவும் புரிபடாமல் நின்ற வேதிக்கு, ஜெய்யின் பேச்சு புரிந்த போது அவனும் சிரித்தான். ஜெய்யும் அவர்களோடு இணைந்து கொண்டான்.

இப்படியாக பேச்சும், சிரிப்பும், கேலியுமாக அன்றைய க்ளாஸ் முடியவும் எல்லோரும் காலேஜிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். 

“பை சரயூ, ஜெய்… நாளைக்கு பார்ப்போம்” என்று வேதிக் பஸ் ஸ்டாப்பிற்கு சென்றான். 

சரயூ காலேஜ் கேட்டினருகே தன் அண்ணனுக்காகக் காத்திருக்கவும், அவளோடு நின்றிருந்தான் ஜெய்.

“உனக்கு பஸ்ஸுக்கு நேரமாகலை? ஏன் இங்க நின்னுட்டிருக்க சஞ்சு?”

“இல்லை சரூ! நான் இன்னைக்கு பஸ்ஸுல வரலை.”

“அப்போ எப்படி காலேஜுக்கு வந்த? ஏன் சும்மா டைம் வேஸ்ட் பண்ற? வீட்டுக்கு கிளம்பலையா?”

“கார்ல தான் வந்தேன்.  நீ போனப்புறம் நானும் போயிடுவேன்”

“அய்யோ சஞ்சு! நான் ஒன்னும் குழந்தையில்ல.  ராகுல் இப்போ வந்திருவேன்னு சொல்லியிருக்கான்.  எனக்காக வெயிட் பண்ணாம நீ கிளம்பு”

“இல்லை சரூ! உங்க அண்ணா வரட்டும்… அப்புறம் நான் போறேன்” என்று உறுதியாக சொல்லிவிடவும் சரயூ அமைதியானாள்.

பத்து நிமிடங்கள் கழித்தும் ராகுல் வராமலிருக்கவும் சரயூ பொறுமையிழந்து அவனை மனதில் அர்ச்சித்தவாறு நின்றிருந்தாள்.

“என்னாச்சு சரூ? எதுக்காக இவ்ளோ டென்ஷனாகற?”

“ராகுல் என்னை பிக் பண்ணுவான்னு அப்பா சொன்னப்பவே நான் யோசிச்சிருக்கனும்.  எதையாவது மனசுல வச்சிகிட்டு என்னை வெயிட் பண்ணி கடுப்பேத்துறான் போல”

“ச்சே! எனக்கப்படி தோனலை”

“உனக்கு அவனை பற்றி தெரியாது சஞ்சு.  ஒரு முறை அவனை அம்மாகிட்ட மாட்டிவிட்டேன்னு என்னை இரண்டு நாள் அவனோட விளையாட சேர்த்துக்கவே இல்லை.  நான் அப்போ மூனாவது படிச்சிட்டிருந்தேனா… என்ன செய்யறுதுன்னே தெரியல.  அப்பாட்ட சொல்லி அழுதேனா.  அப்புறம் அப்பா அவங்கிட்ட என்ன சொன்னாருன்னு எனக்கு தெரியாது… ஆனா என்னோட விளையாடினான்.  அதே மாதிரி எதையாவது நினைச்சுட்டு இப்படி என்னை வெய்ட் பண்ண வைக்கிறானோன்னு டவுட்டாயிருக்கு.  இப்போன்னு பாத்து அவனோட ஃபோன் நாட் ரீசபள்” என்று சலித்தவளின் முகம் வாடியது.

அவளின் முகம் வாடியதை பொறக்காது ஜெய், “இப்பவும் சொல்ற சரூ… எனக்கு ராகுல் ஏதாவது வேலையா மாட்டியிருப்பாருன்னு தான் தோனுது.  உனக்கு வெயிட் பண்ண பிடிக்கலைன்னா நான் உன்னை டிராப் பண்றேன்” என்று ராகுலுக்கு சப்போர்ட் செய்தவன் தன் மனதின் ஆசையையும் வெளியிட்டான்.  ஜெய் ஆர்வமாகவும் அதே சமயம் ‘என்னை தப்பா நினைச்சுடுவாளோ?’ என்றெழுந்த கேள்வியுமாக அவளின் முகத்தைப் பார்த்திருக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.